முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் ஏம்பா, இந்த நேரத்துல கூடவா விஜய் மகனை பற்றி இப்படி பேசுவீங்க?

ஏம்பா, இந்த நேரத்துல கூடவா விஜய் மகனை பற்றி இப்படி பேசுவீங்க?

இங்கிலாந்தை சேர்ந்த இலங்கை தமிழ் பெண்ணான சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். தலப்பிரசவம் அம்மா வீட்டில் நடப்பது வழக்கம். அதனால் சங்கீதாவின் முதல் பிரசவம் லண்டனில் நடந்தது.

விஜய் மகன் லண்டனில் பிறந்தார். இந்நிலையில் ஜேசன் இந்திய குடிமகனே இல்லை அவர் இங்கிலாந்து குடிமகன். அதனால் தான் கொரோனா பிரச்சனை பூதாகரமாக வெடித்தபோது அவரால் கனடாவில் இருந்து இந்தியா திரும்ப முடியவில்லை.

ஜேசன் வெளிநாட்டு பிரஜை என்பதால் அவரால் கனடாவில் இருந்து இந்தியாவுக்கு வர முடியவில்லை. அப்பா இந்தியர், மகன் இங்கிலாந்து குடிமகன், என்னங்கணா இது என்று சமூக வலைதளங்களில் பேசிக் கொள்கிறார்கள்.

அம்மாவின் சொந்த ஊரில் ஜேசன் பிறந்தது ஒரு குத்தமா. இதை போய் பெருசா பேசிக்கிட்டிருக்காங்களே என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஊரடங்கால் வீட்டில் சும்மா இருப்பதால் கண்டதையும் தேடிக் கண்டுபிடித்து அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கிடையே உப்பேனா தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக் மூலம் ஜேசன் ஹீரோவாக அறிமுகமாகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. உப்பேனா படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி தான் அதன் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Must Read

உணவகங்களில் ஏ.சி.யை இயக்கலாமா? – மத்திய அரசு சொல்வது இதுதான்!!

பொதுமுடக்கத்தின் காரணமாக, நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த உணவகங்களை ஜூன் 8 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த சனிக்கிழமை (மே 30)...

கர்ப்பிணி யானை செத்தது எப்படி? இறுதி அறிக்கை வெளியீடு!

கேரளா பாலக்காடு மாவட்டத்தில் அண்ணாச்சிப் பழத்தில் வெடிமருந்து வைத்து கொலை செய்யப்பட்ட யானை எதனால் உயிரிழந்தது என சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கேரள அரசு அறிக்கை...

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 39 பேருக்கு கொரோனா!!

சென்னையில் உடல்நலம் குறைவால் அண்மையில் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல், சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அந்த நபரின்...

‘இவங்கெல்லாம் இனிமே நாடாளுமன்றத்துக்குள்ள நுழையக் கூடாது’

நாடாளுமன்ற இரு அவைகளின் செயலக அலுவலக பணியாளர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மற்றும் நாடாளுமன்ற அலுவலக பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு சில அதிரடி...

தங்க பிளேட்டினால் ஆன சவப் பெட்டி: கறுப்பர்கள் ஒன்றினைந்து செய்த காரியம் இது

போலியான $20 டாலர் நோட்டு ஒன்றை உணவகத்தில் கொடுத்ததற்காக, அவரை பிடித்த பொலிசார் கழுத்தை நசுக்கியே கொன்றார்கள். கறுப்பு இனத்தவர்கள் என்றால் அமெரிக்கர்கள் தரக் குறைவாக நினைக்கிறார்கள். இதனால் இறந்து போன ஜோர்ஜுக்கு...