முகப்பு சினிமா `ஐசோலேஷன் வார்டுகளாகும் ரயில் பெட்டிகள்?’ - கொரோனாவைத் தடுக்க கிராமங்களுக்கு படை எடுக்கும் ரயில்வே

`ஐசோலேஷன் வார்டுகளாகும் ரயில் பெட்டிகள்?’ – கொரோனாவைத் தடுக்க கிராமங்களுக்கு படை எடுக்கும் ரயில்வே

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 650 ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசும் மாநில அரசும் இந்த வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சுகாதாரத்துறை மட்டுமல்லாமல் அனைத்துத்துறை அதிகாரிகளையும் தீவிரமாகப் பணியாற்றும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா

அந்த வகையில் இந்திய ரயில்வேயும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கிராமங்கள் அல்லது மிகவும் பிந்தங்கிய சூழலில் உள்ள கிராமங்களுக்கு ரயில் பெட்டிகளை `ஐசோலேஷன்’ வார்டாக மாற்றும் யோசனையை ரயில்வே பரிசீலித்து வருகிறது. தற்போது வரையில் நாடு முழுவதும், வரும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வரை ரயில்வே சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

நேற்று ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், ரயில்வே உயரதிகாரிகளுடன் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் ரயில்வே துறையால் கொரோனா வைரஸை விரட்ட என்ன என்ன உதவிகள் செய்ய முடியும் என விவாதிக்கப்பட்டது. வெண்டிலேட்டர்ஸ் தயாரிப்பது, தற்காலிக படுக்கைகள், ட்ராலிகள் தயாரிப்பது உள்ளிட்ட விஷயங்கள் பரிசீலிக்கப்பட்டது. கூட்டத்தின் இறுதியில் கழிவறைகளுடன் கூடிய ரயில் பெட்டிகளை கொரோனா வைரஸுக்கான தீவிர சிகிச்சை பிரிவாக மாற்றும் யோசனையும் முன்வைக்கப்பட்டது.

பியூஸ் கோயல்

முன்னதாக அனைத்துத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய மோடி, “கொரோனா வைரஸுக்கு எதிராக, நாம் போராட புதிய திட்டங்களுடன் வர வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார். இதன் காரணமாகவே ரயில்வே கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. மேலும், அமைச்சர் பியூஸ் கோயல், அதிகாரிகள் அனைவரும் கொரோனா வைரஸின் மூன்றாவது நிலைக்கு, அதாவது கொரோனாவின் சமூக பரவலுக்கு நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

Also Read: `கைதட்டல்… ஆரவாரம்..!’ -கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பிய தம்பதியை நெகிழ வைத்த மக்கள்

மேலும் பஞ்சாப்பில் இயங்கி வரும் ரயில்வே தொழிற்சாலை ரயில் பெட்டிகளை ஐசோலேஷன் வார்டாக மாற்றும் பணி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னையில் இயங்கி வரும் ரயில் தொழிற்சாலையில் வெண்டிலேட்டர்களைத் தயாரிக்கும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Must Read

யாழ்.வட்டுக்கோட்டையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் செய்த தவறால் ஒருவர் அநியாய சாவு; மறைக்கப்பட்ட பின்னணி!

யாழ்.வட்டுக்கோட்டையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் செய்த தவறால் ஒருவர் அநியாய சாவு; மறைக்கப்பட்ட பின்னணி!  

அமெரிக்காவில் இருந்து பிரத்தியேக மருந்து ஒன்றை அனுப்பினார் ரம்: பொறிஸ் ஜோன்சன் மருத்துவர்

தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில், செயற்கை சுவாத்தோடு இருக்கும் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு அமெரிக்காவில் இருந்து பிரத்தியேக மருந்து ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. அமெரிக்க அதிபர் டொனால் ரம்...

நிபுணர்களின் கருத்துப்படி ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு ? – அரசு வட்டாரத் தகவல்

ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கபட உறுதியான வாய்ப்புகள் இருப்பதாக அரசுத் தரப்புத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா ஒழிப்பு நடவடிக்கையாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை நாடு...

ஊரடங்கில் பள்ளி மாணவி கர்ப்பம்…! காட்டிக்கொடுத்த தங்கை கொலை…

கொசவம்பட்டியைச் சேர்ந்த சந்திரன் - வத்சலா தம்பதிக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருந்தனர். முதல் மகள் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த நிலையில் இரண்டாவது மகள் அப்பகுதியில் உள்ள...

கொரோனாவுக்கு எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: கொரனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி பயன்படுத்திக் கொள்ளப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள்...