முகப்பு சினிமா `ஒரு மணிநேரம் அலுவலகம்; ரெட்கிராஸ் உதவி!’ - #Lockdown சூழல் பகிரும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை

`ஒரு மணிநேரம் அலுவலகம்; ரெட்கிராஸ் உதவி!’ – #Lockdown சூழல் பகிரும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை

தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், எப்பொழுதும் ஆக்டிவ்-வாக இருக்கக்கூடியவர். ராஜ்பவனிலேயே தன்னை முடக்கிக்கொள்ளாமல், பொது நிகழ்ச்சிகள், மக்கள் சந்திப்பு, அதிகாரிகளுடன் ஆலோசனை, தன்னார்வ அமைப்புகளுடன் கலந்துரையாடல் எனப் பெரும்பாலான நேரங்கள் பிஸியாகவே சுழலக்கூடியவர். இந்தளவுக்கு பரபரப்பாக இருக்கக்கூடியவர், கொரோனா ஊரடங்கை எப்படி எதிர்கொள்கிறார். எப்படி பொழுதுபோகிறது? போனில் தொடர்புகொண்டு பேசினோம்.

கொரோனா விழிப்புணர்வு

“என்னப்பா நல்லா இருக்கீங்களா” என அன்போடு நலம் விசாரித்தவர், “கொரோனா ஊரடங்கை ராஜ்பவனுக்குள்ளேயும் முழுமையா கடைப்பிடிக்கிறேன். இங்க 250 பேர் பணியாளர்கள் வேலை பார்த்துக்கிட்டு இருந்தாங்க. அதுல 80 சதவிகிதம் பேருக்கு லீவு கொடுத்துட்டேன். சமையல்காரர்கள், முக்கிய அதிகாரிகள் உட்பட மீதியுள்ள 20 சதவிகிதம் பேரும் கூட, ஒருத்தரை ஒருத்தர் ஒண்ணா சந்திச்சிக்கிறதில்லை. அவங்கவங்க தங்களோட வேலையை முடிச்சிட்டு தனிமையிலதான் இருக்காங்க. ராஜ்பவன் வளாகத்துக்குள்ளேயேதான் வீடும், கவர்னர் அலுவலகமும் தனித் தனியா இருக்கு.

தினமும் ஒருமணி நேரம் மட்டும் அலுவலகம் போறேன். என்னோட செயலாளர், பாதுகாப்பு அதிகாரி உட்பட அதிகபட்சம் நான்கு பேர்களை மட்டும் சந்திச்சி, கொரோனா தடுப்பு, விழிப்புணர்வுப் பணிகள் தொடர்பா ஆலோசனை செய்வேன். அதுவும் கூட மூணு அடி இடைவெளியிலதான் ஆலோசனை நடக்கும். ராஜ்பவன்ல இருந்து சுமார் மூணு கிலோமீட்டர் சுற்றுவட்டார பகுதிகள்ல உள்ள கூலித்தொழிலாளர்கள் மற்றும் சாலையோர மக்களுக்கு தினமும் உணவு கொடுக்க ஏற்பாடு செஞ்சிருக்கேன். ஹைதராபாத் பக்கத்துல மக்தாங்கற பகுதியில உள்ள ஆதரவற்ற இஸ்லாமியர்களுக்கும் உதவிகள் வழங்கிக்கிட்டு இருக்கோம். எல்லா மாநிலங்கள்லயுமே ரெட்கிராஸ் நிறுவனம் ஆளுநர்கீழதான் இயங்குது. நான் ஆளுநரா பொறுப்பேக்குறதுக்கு முன்னாடி தெலங்கானா ரெட்கிராஸ்ல 30,000 தன்னார்வலர்கள்தான் இருந்தாங்க. டெங்கு பாதிப்பு ஏற்பட்டப்ப, ரத்தம் அதிகமா தேவைப்பட்டதால, ரெட்கிராஸ் தன்னார்வலர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியில இறங்கினேன். அதுக்கு ஒரு மொபைல் ஆப் உருவாக்கினோம்.

அதிகாரிகளுடன் ஆலோசனை

ரெட்கிராஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 30,000-லிருந்து 16 லட்சமா உயர்ந்துச்சு. அது இப்ப ரொம்பவே உதவியா இருக்கு. ஊரடங்கால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள மக்களின் அவசரத் தேவைகளுக்கும் கொரோனா விழிப்புணர்வு பணிகளுக்கும் ரெட்கிராஸ் அமைப்பின் தன்னார்வலர்களை பயன்படுத்திக்கிட்டு இருக்கோம். யாருக்காவது மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் தேவைப்பட்டால், இவங்க வாங்கிக் கொடுக்குறாங்க. காய்கறிக் கடைகள், மெடிக்கல் ஷாப்களுக்கு செல்லக்கூடிய மக்கள் ஒவ்வொருத்தரும் கடைப்பிடிக்க வேண்டிய இடைவெளியைக் கோடுகளாக வரையவும் ஏற்பாடு செஞ்சிருக்கோம். இதுபோன்ற ஆலோசனைகளை போன்லதான் பெரும்பாலும் விவாதிக்குறேன். ஊரடங்கால், நான் வீட்ல இருக்குற நேரத்துல, யோகா செய்றேன். புத்தகம் வெளியிடும் முயற்சியிலயும் ஈடுபட்டிருக்கேன். தெலங்கானா ஆளுநராக நான் பொறுப்பேற்ற பிறகு, 240 நிகழ்ச்சிகள்ல பேசியிருக்கேன். அந்த உரைகள்ல நான் பேசின முக்கியமான விஷயங்களை மட்டும் தொகுத்து, இரண்டு தொகுதிகளா வெளியிடப் போறேன். இதுக்கான வேலைகள்ல இறங்கியிருக்கேன். கொரோனா விழிப்புணர்வு வீடியோவும் தயார் செஞ்சிக்கிட்டு இருக்கேன். ராஜ்பவன்ல ஊரடங்கை முழுமையா கடைப்பிடிக்குற அதேசமயத்துல, மக்களுக்குப் பயன் அளிக்கக்கூடிய பணிகள்லயும் ஈடுபடணுங்கறதுதான் என்னோட எண்ணம். தெலங்கானா மக்களுக்கு என்மேல அன்பு அதிகம்” என நெகிழ்ச்சியோடு பேசினார்.

Must Read

யாழ்.வட்டுக்கோட்டையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் செய்த தவறால் ஒருவர் அநியாய சாவு; மறைக்கப்பட்ட பின்னணி!

யாழ்.வட்டுக்கோட்டையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் செய்த தவறால் ஒருவர் அநியாய சாவு; மறைக்கப்பட்ட பின்னணி!  

அமெரிக்காவில் இருந்து பிரத்தியேக மருந்து ஒன்றை அனுப்பினார் ரம்: பொறிஸ் ஜோன்சன் மருத்துவர்

தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில், செயற்கை சுவாத்தோடு இருக்கும் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு அமெரிக்காவில் இருந்து பிரத்தியேக மருந்து ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. அமெரிக்க அதிபர் டொனால் ரம்...

நிபுணர்களின் கருத்துப்படி ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு ? – அரசு வட்டாரத் தகவல்

ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கபட உறுதியான வாய்ப்புகள் இருப்பதாக அரசுத் தரப்புத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா ஒழிப்பு நடவடிக்கையாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை நாடு...

ஊரடங்கில் பள்ளி மாணவி கர்ப்பம்…! காட்டிக்கொடுத்த தங்கை கொலை…

கொசவம்பட்டியைச் சேர்ந்த சந்திரன் - வத்சலா தம்பதிக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருந்தனர். முதல் மகள் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த நிலையில் இரண்டாவது மகள் அப்பகுதியில் உள்ள...

கொரோனாவுக்கு எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: கொரனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி பயன்படுத்திக் கொள்ளப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள்...