முகப்பு சினிமா ஒரே நாளில் அதிகபட்ச சோதனை; `அலட்சியம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாமா? - அமைச்சர் விஜயபாஸ்கர்

ஒரே நாளில் அதிகபட்ச சோதனை; `அலட்சியம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாமா? – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் இன்று மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர், “கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 6,109 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாம் இதுவரை பரிசோதனை மேற்கொண்டதில் இன்றுதான் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகளை செய்துள்ளோம்.

பீலா ராஜேஷ்- விஜயபாஸ்கர்

தமிழகத்தில் இதுவரை 46,985 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 41,710 நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று பரிசோதனை செய்த 6,109 நபர்களில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதற்கு முன்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் சிலருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Also Read: `எச்சரித்த வல்லுநர் குழு; முடிவுகளை மாற்றிய முதல்வர்..!’ – மே 3 வரை தளர்த்தப்படாத ஊரடங்கு உத்தரவு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1520 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 46 நபர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 457 பேர் பூரண நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் 14 நாள்கள் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளோம். தமிழகத்தில் இன்று 2 மரணங்கள் நிகழ்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நபர்கள் மரணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ்

தமிழகத்தில் கொரோனா உறுதிசெய்யப்பட்ட 43 நபர்களின் விவரம் மாவட்ட ரீதியிலான எடுத்துக்கொண்டால். சென்னை 18, அரியலூர் 2, திண்டுக்கல் 2, நாகப்பட்டினம் 1, பெரம்பலூர் 1, இராமநாதபுரம் 1, சிவகங்கை 1, தென்காசி 4, திருவள்ளூர் 2, திருவாரூர் 1, தூத்துக்குடி 1, திருப்பூர் 1, திருச்சி 4, விழுப்புரம் 3, புதுக்கோட்டையில் முதன்முதலாக ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு ஆய்வகங்கள் 23 தனியார் ஆய்வகங்கள் 10 என மொத்தம் 33 ஆய்வகங்கள் உள்ளன.

Also Read: `இறுதிமூச்சு வரை சேவை!’ – கொரோனாவுக்குப் பலியான 84 வயது `நர்ஸ்’

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் இந்தியாவில் சிறப்பாக பின்பற்றப்பட்டுள்ளன இந்த நோய் கட்டுக்குள் இருக்கிறது என உலக சுகாதார நிறுவனம் பாராட்டும் வகையில் நாம் செயல்பட்டு வருகிறோம். உலக சுகாதார நிறுவனம் உலக அளவில் இது ஒரு பேரிடர் என அறிவித்துள்ளது. இது அரசியல் செய்வதற்கான நேரம் இல்லை. அரசியல் செய்வதற்கான காலமும் அல்ல. கண்ணுக்கு தெரியாத நுண்ணியிரியை எதிர்த்து உலகநாடுகளே போராடிக்கொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர்

உலக வல்லரசு நாடுகளே இந்த போராட்டத்தில் தவித்துக்கொண்டிருக்கிற நிலைதான் இருக்கிறது. தமிழகத்தில் நாம் சரியான நேரத்தில் சரியான முடிவுகள் உடனுக்குடன் முதல்வர் எடுத்து வருகிறார். இந்த நேரத்தில் அரசின் அலட்சியம் என்று எதிர்க்கட்சிகள் கூறுவதோ சமூகவலைதளங்களில் குதர்க்கமான அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல. இதுபோன்ற ஒரு மலிவான அரசியலை எதிர்க்கட்சி தலைவர் தயவுசெய்து தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பது என்னுடைய கருத்து. உலக சுகாதார நிறுவனம் என்ன கூறியதோ அதனை நமது அரசு மருத்துவர்களுக்கு தெளிவாகக் கூறியுள்ளோம்.

Also Read: `உறுதி செய்யப்பட்டவர்களில் 80% பேர்… அறிகுறியே இல்லாமல் பரவும் கொரோனா?!’ -அதிர்ச்சி தரும் ICMR

மூத்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்திருப்பது எங்களை உண்மையில் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் தன் கடமையை சிறப்பாகச் செய்து வந்தார். தனக்கு கொரோனா பாசிடிவ் என தெரிந்ததும் தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டார். நாங்களும் அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கினோம். அவர் மீண்டு வருவார் என நினைத்திருந்தோம். துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்துவிட்டார். இதுபோன்ற சூழலில் அலட்சியம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல” என்று தெரிவித்தார்.

Must Read

அனுராத புரத்தில் சில இடங்கள் லாக் டவுன் என அறிவிப்பு- மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639...

முடக்கப்பட்டது பல்கலைக்கழகம் கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா என அச்சம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில்...

லண்டனில் 24 ம் திகதியோடு அமுலுக்கு வரும் கட்டாய முகக் கவசம்- மீறினால் FINE

பிரித்தானியாவில் இம்மாதம்(ஜூலை) 24 தொடக்கம் கட்டாய நடை முறை ஒன்று அமுலுக்கு வருகிறது. சூப்பர் மார்கெட் தொடக்கம், சிறு கடைகள், உணவங்கள் என்று மக்கள் கூடும் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் கட்டாய...

நச்சு, நச்சுனு கிஸ் அடிக்க மட்டும் தான் பீட்டர் பால் கேமராவுக்கு முன் வருவாரா?: தயாரிப்பாளர் ரவீந்தர்

வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை காதலித்து கடந்த மாதம் 27ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்த கையோடு பீட்டர் பால் மீது அவரின் முதல் மனைவி எலிசபெத்...