முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் ஒரே நாளில் 2,345 பேர் உயிரிழப்பு.. கொரோனாவால் கலங்கும் அமெரிக்கா! #NowAtVikatan

ஒரே நாளில் 2,345 பேர் உயிரிழப்பு.. கொரோனாவால் கலங்கும் அமெரிக்கா! #NowAtVikatan

மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!

வரும் 27-ம் தேதி மீண்டும் மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. கடந்த மாதம் 20-ம் தேதி முதன்முதலாக முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பிறகு கடந்த 11-ம் தேதி இரண்டாவது முறையாக முதல்வர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 27-ம் தேதி நடக்கும் ஆலோசனையில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா என்பது குறித்து மாநில முதலமைச்சர்களிடம் ஆலோசிப்பார் என்று கூறப்படுகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,345 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,345 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 47,663 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அமெரிக்காவில் புதிதாக 29,991 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 8,48,735 ஆக உயர்ந்துள்ளது

உலகளவில் 26.36 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு!

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,36,989 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,84,186 ஆகவும் அதிகரித்துள்ளது. அதேநேரம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,17,619 ஆக உயர்வு

Must Read

தங்க பிளேட்டினால் ஆன சவப் பெட்டி: கறுப்பர்கள் ஒன்றினைந்து செய்த காரியம் இது

போலியான $20 டாலர் நோட்டு ஒன்றை உணவகத்தில் கொடுத்ததற்காக, அவரை பிடித்த பொலிசார் கழுத்தை நசுக்கியே கொன்றார்கள். கறுப்பு இனத்தவர்கள் என்றால் அமெரிக்கர்கள் தரக் குறைவாக நினைக்கிறார்கள். இதனால் இறந்து போன ஜோர்ஜுக்கு...

லொஸ்லியாவின் முதல் படம் பிரென்ட்ஷிப் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை ரிலீஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக தமிழ் நாட்டு மக்களுக்கு பரிச்சயமானவர் . இலங்கையை சேர்ந்த அவர் அங்கு ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின் பிக்...

`கத்தியால் தாக்கிய காவலர்; 37 குழந்தைகள் காயம்!’ – சீனாவில் தொடரும் குழந்தைகள் மீதான வன்முறைகள்

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ள சீனா தொடர்ந்து அதிக பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், சீனாவில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கத்தியால் தாக்கப்பட்டுள்ள சம்பவம்...

8 வீடுகள் அப்படியே கடலுக்குகள் சென்றது: கடல் நீர் உள்ளே வந்தது சுணாமியை போல

நோர்வே நாட்டில் வட பகுதியில் உள்ள அல்டா என்னும் இடத்தில், பெரும் நிலப்பரப்பு ஒன்று கடலுக்குள் சென்றுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. இது சுணாமி போன்று கடல், கரையை நோக்கி பெருக்கெடுத்து...

பணியாளர்களுக்கு கொரோனா வந்துட்டா ஆஃபீசை மூடணுமா?: மத்திய அரசு சொல்வது இதுதான்!!

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள 33 முதல் 100 சதவீதம் வரை பணியாளர்களை கொண்டு இயங்கலாம் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்த நிலையில், பணியிடங்களில்...