முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் கெடுத்த கொரோனா!

கச்சா எண்ணெய் உற்பத்தியைக் கெடுத்த கொரோனா!

இந்தியாவில் மார்ச் மாதம் முதலே பாதிப்புகள் தீவிரமாக உள்ளன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் மாத இறுதி முதலே இந்தியாவின் உற்பத்தித் துறை முற்றிலும் முடங்கிவிட்டது. ஏப்ரல் 20ஆம் தேதிக்குப் பிறகு சில தளர்வுள் அறிவிக்கப்பட்ட பின்னர் உற்பத்தி மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியது. இன்னும் இயல்பு நிலை திரும்பாத நிலையில் ஏப்ரல் மாதத்துக்கான உள்நாட்டு உற்பத்தி மந்தமாகவே இருந்தது. குறிப்பாக, பெட்ரோலியப் பொருட்களுக்கான உற்பத்தியில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்துக்கான கச்சா எண்ணெய், உற்பத்தி குறித்த விவரங்களை மத்திய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்ற ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் உற்பத்தி 2545.81 ஆயிரம் மெட்ரிக் டன்னாக இருந்துள்ளது. இது மாதாந்திர இலக்கை விட 1.44 சதவீதம் குறைவாகும். அதேபோல, 2019 ஏப்ரல் மாத உற்பத்தியை விட 6.35 சதவீதம் குறைவாகும்.

இயற்கை வாயு உற்பத்தியைப் பொறுத்தவரையில், சென்ற ஏப்ரல் மாதத்தில் இயற்கை எரிவாயு உற்பத்தி 2161.33 மில்லியன் மெட்ரிக் கன மீட்டராக இருந்துள்ளது. இது ஏப்ரல் மாதத்துக்கான உற்பத்தி இலக்கை விட 10.88 சதவீதம் குறைவாகும். அதேபோல, 2019 ஏப்ரல் மாத உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் இது 18.62 சதவீதம் குறைவாகும்.

கச்சா எண்ணெய் உற்பத்தியைப் பொறுத்தவரையில், சென்ற ஏப்ரல் மாதத்தில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு உற்பத்தி 14745.18 ஆயிரம் மெட்ரிக் டன்னாக இருந்துள்ளது. இது மாதாந்திர இலக்கை விட 22.01 சதவீதமும், 2019 ஏப்ரல் மாத உற்பத்தியை விட 28.78 சதவீதமும் குறைவாகும். மே மாதத்திலும் இதே மந்தநிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Must Read

யாழ் விடத்தற்பளை முகாமில் 51 கடற்படையினருக்கு கொரோனா: யாழ் மக்கள் அச்சம்

யாழ். கொடிகாமம் விடத்தற்பளை முகாமில் தனிமைப் படுத்தப்பட்ட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த 51 பேரும் கடற்படை சிப்பாய்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடத்தற்பளை தனிமைப்படுத்தல் முகாமில் 260 கடற்படை சிப்பாய்கள்...

உள்பக்கமாக பூட்டி பதுங்கிய அமெரிக்க பொலிசார்: வெடித்தது பெரும் கலவரம்

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் வெளியாகிய வீடியோ, இன்று அமெரிக்காவில் பெரும் கலவரத்தை உண்டாகியுள்ளது. கறுப்பின நபர் ஒருவரை வெள்ளையின பொலிசார் கைது என்ற போர்வையில் காலல் நசுக்கி கொலை செய்து இருந்த...

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் திமுகவினரின் மதுபான ஆலைகளும் மூடப்படும்: டி.கே.எஸ். சாமர்த்திய பதில்!!

எம்.பி.யான டி.ஆர்.பாலு தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் குழு, தமிழக தலைமைச் செயலாளரை சமீபத்தில் சந்தித்தனர். திமுக சார்பில் தொடங்கப்பட்டுள்ள "ஒன்றிணைவோம் வா" திட்டத்தின்கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் ஒரு லட்சம்...

ப்ளஸ்2 மாணவர்களுக்கு போனஸ் மார்க், தேர்வுத்துறை உத்தரவு!

தமிழ்நாட்டில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளில் ஏற்பட்ட ஒரு பிழைக் காரணமாகக் குறிப்பிட்ட மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பன்னிரெண்டாம் பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம்...

திருப்பதி கோயில் சொத்துகள் விற்பனைக்கு அல்ல – தேவஸ்தான நிர்வாகம் முடிவு

திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக அளித்த 50 சொத்துக்களை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்திருந்தது. தேவஸ்தான நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து...