முகப்பு சினிமா `கணவரைக் காணவில்லை..’ - புகார் அளித்த பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த மருத்துவமனை நிர்வாகம்

`கணவரைக் காணவில்லை..’ – புகார் அளித்த பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த மருத்துவமனை நிர்வாகம்

தெலங்கானாவைச் சேர்ந்த மாதவி என்ற பெண்ணின் குடும்பத்தினர் கொரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாதவி மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் மே 16-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அப்போது தன் கணவரின் உடல்நலம் குறித்து அந்தப்பெண் கேட்டுள்ளார். வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாள்கள் கழித்து மருத்துவமனை நிர்வாகத்தைத் தொடர்புகொண்ட மாதவி கணவரின் உடல்நிலை குறித்துக் கேட்டுள்ளார். மருத்துவமனை தரப்பிலிருந்து எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.

கொரோனா வைரஸ்

கணவனைக் காணாத வருத்தத்தில் இருந்த மாதவி தெலங்கானாவைச் சேர்ந்த அமைச்சர் கே.டி. ராமாராவுக்கு ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்தால் தன் கணவர் கிடைத்துவிடுவார் என எண்ணியுள்ளார்.

Also Read: `மொபைல் சுவிட்ச் ஆஃப், கிணற்றில் 9 சடலங்கள்’ – வடமாநில தொழிலாளர்கள் மரணத்தில் நீடிக்கும் மர்மம்

இதுதொடர்பாக மாதவி தன் ட்விட்டர் பதிவில், `ராமா ராவ் அவர்களுக்கு வணக்கம். என் பெயர் மாதவி. நான் மதுசூதனன் என்பவரின் மனைவி. நாங்கள் இரண்டு பெண் குழந்தைகளுடன் வனஸ்தலிபுரம் பகுதியில் வசித்து வருகிறோம். கொரோனா நோய்த் தொற்று காரணமாக எனது குடும்பத்தினர் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்ததும் என் கணவரை தவிர்த்து நாங்கள் அனைவரும் வீடு திரும்பினோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ்

இந்தப் புகாருக்கு மருத்துவமனை நிர்வாகம் அளித்த பதில் அந்தப் பெண்ணை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. `தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் கணவர், அரசு மருத்துவமனைக்கு ஏப்ரல் 30-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. மே 1-ம் தேதி அவர் உயிரிழந்துவிட்டார். பாதுகாப்பு வழிமுறைகளின்படி போலீஸாரிடம் அவரது சடலம் ஒப்படைக்கப்பட்டது. உறவினர்கள் வந்து சடலத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றால் மருத்துவமனை சார்பில் தகனம் செய்யப்பட்டிருக்கும். அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விவரம் பின்னர்தான் தெரியவந்தது.

Also Read: கொரோனா தொற்று; 6 வார வென்டிலேட்டர் சிகிச்சை..! – அதிர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்ட செவிலியர்

குடும்பத்தினரின் நிலையைக் கண்டு மிகவும் வருந்துகிறோம். மருத்துவர்களும் செவிலியர்களும் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நேரத்தில் எங்களைத் தவறாக சித்திரிப்பது வருத்தமளிக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: `ஒரே நாளில் 6,654 பேருக்கு தொற்று’ -இந்தியாவில் 1.25 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு #NowAtVikatan

“என் கணவரின் மரணம் குறித்து எங்களுக்கு யாரும் எதுவும் தெரியப்படுத்தவில்லை. இறுதிச்சடங்குகள் செய்வதற்குக்கூட அனுமதி வாங்கவில்லை. எனது குடும்பத்தினர் யாருக்கும் கணவரின் மரணம் குறித்து தெரியாது. இறுதிச்சடங்குகள் செய்ததற்கான சாட்சிகள் வேண்டும். அவரது பொருள்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

மாதவியின் குடும்பத்தில் மொத்தம் 11 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுசூதனின் இளைய சகோதரருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவரை சந்தித்ததன் காரணமாக இவர்களுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

Must Read

யாழ் விடத்தற்பளை முகாமில் 51 கடற்படையினருக்கு கொரோனா: யாழ் மக்கள் அச்சம்

யாழ். கொடிகாமம் விடத்தற்பளை முகாமில் தனிமைப் படுத்தப்பட்ட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த 51 பேரும் கடற்படை சிப்பாய்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடத்தற்பளை தனிமைப்படுத்தல் முகாமில் 260 கடற்படை சிப்பாய்கள்...

உள்பக்கமாக பூட்டி பதுங்கிய அமெரிக்க பொலிசார்: வெடித்தது பெரும் கலவரம்

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் வெளியாகிய வீடியோ, இன்று அமெரிக்காவில் பெரும் கலவரத்தை உண்டாகியுள்ளது. கறுப்பின நபர் ஒருவரை வெள்ளையின பொலிசார் கைது என்ற போர்வையில் காலல் நசுக்கி கொலை செய்து இருந்த...

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் திமுகவினரின் மதுபான ஆலைகளும் மூடப்படும்: டி.கே.எஸ். சாமர்த்திய பதில்!!

எம்.பி.யான டி.ஆர்.பாலு தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் குழு, தமிழக தலைமைச் செயலாளரை சமீபத்தில் சந்தித்தனர். திமுக சார்பில் தொடங்கப்பட்டுள்ள "ஒன்றிணைவோம் வா" திட்டத்தின்கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் ஒரு லட்சம்...

ப்ளஸ்2 மாணவர்களுக்கு போனஸ் மார்க், தேர்வுத்துறை உத்தரவு!

தமிழ்நாட்டில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளில் ஏற்பட்ட ஒரு பிழைக் காரணமாகக் குறிப்பிட்ட மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பன்னிரெண்டாம் பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம்...

திருப்பதி கோயில் சொத்துகள் விற்பனைக்கு அல்ல – தேவஸ்தான நிர்வாகம் முடிவு

திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக அளித்த 50 சொத்துக்களை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்திருந்தது. தேவஸ்தான நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து...