முகப்பு சினிமா `கணவர் உடலைக்கொண்டு வர பணமில்லை; வைக்கோல் பொம்மை மூலம் இறுதிச்சடங்கு’- கலங்கும் உ.பி பெண்

`கணவர் உடலைக்கொண்டு வர பணமில்லை; வைக்கோல் பொம்மை மூலம் இறுதிச்சடங்கு’- கலங்கும் உ.பி பெண்

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுனில் என்பவர், பிழைப்பு தேடி ஜனவரி மாதம் டெல்லிக்குச் சென்றுள்ளார். டெல்லியில் வீடு எடுத்து தங்கிப் பணியாற்றி வந்துள்ளார். ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி சுனில் இருந்துள்ளார். போக்குவரத்து வசதிகள் இல்லாததால் அவரால் சொந்த ஊருக்குச் செல்ல முடியவில்லை. இந்நிலையில் ஏப்ரல் 10-ம் தேதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவரை டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கொரோனா அச்சம் காரணமாக வேறு மருத்துவமனைகளுக்குச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். மூன்று மருத்துவமனைகள் சென்ற பின்னர் இறுதியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்தியாவில் ஊரடங்கு

உடல்நலக்குறைவு காரணமாக சுனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அவரது உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் சுனில் பணியாற்றி வந்த நிறுவனத்தின் உரிமையாளர் அவர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். சுனிலை அவர் தான் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மருத்துவமனையில் சுனிலுக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சுனில் மனைவி பூனம் அவரை தொடர்புகொண்டுள்ளார். தொடர்ந்து மொபைல்போன் ரிங்காகிக் கொண்டே இருந்துள்ளது. ஆனால் யாரும் போனை எடுக்கவில்லை.

இந்நிலையில் ஏப்ரல் 14-ம் தேதி சுனில் போனை காவலர் ஒருவர் எடுத்துப் பேசியுள்ளார். சுனில் இறந்துவிட்ட தகவலையும் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியைக் கேட்டு கண்ணீர்விட்ட சுனில் மனைவி தன் நிலையைக் காவலருக்கு எடுத்துக்கூறியுள்ளார். `உத்தரப்பிரதேசத்திலிருந்து டெல்லி வருவதற்கான அனுமதியைப் பெற்றுத் தருகிறோம். நீங்கள் வந்து உங்கள் கணவரின் உடலைப் பெற்றுக்கொள்ளுங்கள்’ எனக் கூறியுள்ளார்.

`எனக்கு 5 குழந்தைகள் உள்ளனர். ஒரு குழந்தைக்கு ஒன்றரை வயதுதான் ஆகிறது. என்னால் இவர்களை இங்கே விட்டுவிட்டு தனியே வரமுடியாது. ரயில், பேருந்து உள்ளிட்ட எந்தச் சேவையும் இல்லை. கார் எடுத்து வந்து என் கணவரின் சடலத்தை சொந்த ஊர்களுக்கு எடுத்து வருவதற்குக்கூட என்னிடம் பணம் இல்லை’ எனத் தன் நிலையைக் கூறியுள்ளார் பூனம்.

ஊரடங்கு

உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்த சுனிலின் மனைவி கணவரின் உடலை கிராமத்துக்குக் கொண்டு வர உதவி கேட்டுள்ளார். யாரும் உதவி செய்ய முன்வராத நிலையில் மீண்டும் காவலரைத் தொடர்புகொண்டு தன் கணவருக்கு இறுதிச்சடங்குகளை டெல்லி காவல்துறையினரையே செய்யும்படி கூறியுள்ளார். குடும்பத்தினர் கைப்படக் கடிதம் எழுதித் தராமல் தங்களால் இறுதிச்சடங்குகளைச் செய்ய முடியாது என டெல்லிக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Also Read: `இறுதிமூச்சு வரை சேவை!’ – கொரோனாவுக்குப் பலியான 84 வயது `நர்ஸ்’

இதனையடுத்து பூனம் கிராமப் பஞ்சாயத்து தலைவரின் உதவியை நாடியுள்ளார். அவர் டெல்லிக் காவல்துறையினரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். குடும்பத்தினரின் ஒப்புதல் கையொப்பம் இன்றித் தங்களால் எதுவும் செய்ய முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். பூனம் கையெழுத்திட்ட படிவத்தை டெல்லி போலீஸுக்கு அனுப்பும் பணியை மேற்கொண்டுள்ளார். சுனில் உடல் அடக்கம் செய்யப்படாமல் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. சுனில் அம்மை நோய் தாக்கத்தால் உயிரிழந்துள்ளார். அவருக்குக் கொரோனா இல்லை என்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன் வைக்கோலைக் கொண்டு சுனில் போன்ற பொம்மையைச் செய்து உறவினர்கள் இறுதிச்சடங்கு செய்துள்ளனர். தன் கணவரின் முகத்தைக் கூடப் பார்க்க முடியவில்லை என பூனம் கண்ணீர் வடித்துள்ளார்.

Representation image

இதுகுறித்து பேசிய கிராமப் பஞ்சாயத்து தலைவர், “சுனில் உடலை டெல்லியில் அடக்கம் செய்வதற்கான ஒப்புதல் படிவத்தில் பூனம் கையெழுத்திட்டுள்ளார். டெல்லிக் காவல்துறையினரிடம் இந்தப் படிவம் விரைவில் சேர்க்கப்படும். இந்தப் பெண்ணின் நிலை குறித்து அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளோம். அதிகாரிகள் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர். இந்தப்பெண்ணுக்கு ரேஷன் கார்டு போன்றவை இல்லை. ரேஷன் கார்டு கிடைப்பதற்கும் விதவைகள் ஊக்கத்தொகை கிடைப்பதற்கும் உதவி செய்வதாக தெரிவித்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

Must Read

இன்னும் சில மணி நேரங்களில் இருந்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் விபரங்கள்

இன்று(06) இலங்கை நேரப்படி மதியம் 3 மணி முதல், தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பிக்கும். உடனுக்கு உடன் வெற்றிபெற்றவர்கள் யார் என அறிந்து கொள்ள அதிர்வு செய்திகளோடு இணைந்திருங்கள். நாம் உடனுக்கு உடன்...

துறைமுக கிடங்கில் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்ததே காரணம் பெய்ரூட் குண்டுவெடிப்பு பலி 100 ஆனது: 4,000 பேர் படுகாயம்; வீடுகள் மீது உடல் பாகங்கள்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. 4,000க்கும் மேற்பட்டோர்காயம் அடைந்துள்ளனர். மத்திய கிழக்கு நாடான லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில்...

ஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்டாட்டங்களில் கொரோனா தொற்று!

ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்று பெரிய கொண்டாட்டங்களில் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 20 அகவை இளைஞன் உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதேவேளை தொற்று பலருக்கு இருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்களோடு நெருங்கிய தொடர்பில்...

வுகானில் மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, வுகான் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் ஜாங்னான் மருத்துவமனை ஆய்வு நடத்தி உள்ளது. இதன் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதில், ‘கொரோனாவில் இருந்து மீண்ட...

கொரோனா கதியில் இருந்து மீண்டதா? இன்னமும் திணறுகிறது அமெரிக்கா: டிரம்ப் மீது மக்கள் கடுப்பு

நியூயார்க்: மற்ற நாடுகளை விட அமெரிக்கா கொரோனா ஒழிப்பில் வெற்றி கண்டு கொண்டிருக்கிறது என்று அதிபர் டிரம்ப் என்னதான் சொன்னாலும், உண்மையில் நிலைமை வேறாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் கொரோனா பரவியுள்ளது...