முகப்பு சினிமா `கண்டிப்பா அவள் கழுத்துல தாலி கட்டுவேன்’- 3 வது திருமணத்துக்கு ஆசைப்பட்ட ரௌடிக்கு நேர்ந்த கொடூரம்

`கண்டிப்பா அவள் கழுத்துல தாலி கட்டுவேன்’- 3 வது திருமணத்துக்கு ஆசைப்பட்ட ரௌடிக்கு நேர்ந்த கொடூரம்

வேலூர் கொசப்பேட்டை எஸ்.எஸ்.கே மானியம் பகுதியைச் சேர்ந்தவர் உதயா என்கிற உதயகுமார் (35). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இந்த இளைஞருக்கு ஏற்கெனவே ஷோபா (35), ஆவாரம்பூ (30) என்று இரண்டு மனைவிகள் உள்ளனர். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த புவனா என்கிற புவனேஸ்வரி (22) என்ற பெண்ணுடன் உதயகுமாருக்கு தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தப் பெண்ணை மூன்றாவதாகத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து புவனேஸ்வரியின் வீட்டுக்கே சென்று பெண் கேட்டுள்ளார்.

கைதானவர்கள்

“நீ ஒரு ரௌடி. ஏற்கெனவே ரெண்டு பெண்ணோட குடும்பம் நடத்துற. மூணாவதா எங்க வீட்டுப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு, எவ்வளவு தைரியம் இருந்தா வீடேறி வந்து பொண்ணு கேட்ப…’’ என்று உதயகுமாரிடம் கோபத்தைக் காட்டியுள்ளார் பெண்ணின் அண்ணன் அப்பு என்கிற இமானுவேல்.

“யார் தடுத்தாலும் புவனேஸ்வரிக்குத் தாலி கட்டுவேன். அவள்தான் என்னுடைய மூணாவது பொண்டாட்டி’’ என்று உதயகுமாரும் பதிலுக்கு சவால்விட்டுள்ளார். இதனால், இரண்டு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ஆத்திரத்திலிருந்த இளம்பெண்ணின் அண்ணனான இமானுவேல் தன் நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து உதயகுமாரை தீர்த்துக்கட்ட முடிவுசெய்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி, சம்பவத்தன்று எஸ்.எஸ்.கே மானியம் பகுதியில் உதயகுமாரை சுற்றிவளைத்து அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளனர். கழுத்து, மார்புப் பகுதியில் பலத்த வெட்டு விழுந்ததில் உதயகுமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். அதையடுத்து, கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

கைதானவர்கள்

இதுதொடர்பாக, வேலூர் தெற்குக் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த இமானுவேல், அவரின் கூட்டாளிகள் நவீன்குமார், அந்திரியாஸ், நிர்மல் ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகச் சொல்லப்படும் வெங்கடேசன், அல்வா என்கிற ஆரோக்கியமேரி ஆகிய இருவரும் தொடர்ந்து தலைமறைவாக உள்ளதாகக் கூறுகின்றனர் போலீஸார். கைதான நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் குடியாத்தம் சப் ஜெயிலில் அடைத்தனர்.

Must Read

நாளை ராமர் கோவில் பூமி பூஜை – பிரதமர் மோடி பயணத்தின் முழு விவரம்!

முதலில் ஹனுமன் கார்ஹியில் மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி பின்னர் அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்கிறார்.

கணவன் கண் முன்னே கூட்டு பாலியல், ஆதரவு அளித்த போலீஸ்!

பாலியல் குற்றவாளிகளுக்கு போலீஸ் ஆதரவு அளித்து புகாரைப் பெற மறுத்து வந்த நிலையில், மலைவாழ் மக்கள் கூட்டாக முன்னெடுத்த போராட்டம் குற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது...

“உடம்பெல்லாம் வலிக்குதுப்பான்னு அவன் அழறப்போ பயமா இருக்கும்”-  கண்ணீரில் மிதக்கும் சென்னை குடும்பம்!

மருந்தில்லா நோயும் வறுமையும் ஒரு வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தால்..? பூந்தமல்லியை அடுத்த செந்நீர் குப்பத்தைச் சேர்ந்த ரவீந்திரன் குடும்பம்போலதான் இருக்கும். எதிர் எதிரே இரண்டு பைக்குகள் வந்துவிட்டால், ஒரு வண்டி நின்றுதான் போக...

ஆபாசம், அச்சுறுத்தல், கொலை மிரட்டல்… பெண் ஊடகவியலாளர்களை குறிவைக்கும் கும்பல்!

தமிழ்நாட்டில் ஊடகத்தினர் மீதான தாக்குதலில் `சீஸன் டூ' ஆரம்பித்திருக்கிறது. ஊடகத் துறையில் இயங்கிவரும் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து சமீபகாலமாக அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. சமூக ஊடகங்களில் இதுதொடர்பான குற்றச்சாட்டுகள், விவாதங்கள் என இரு...

TikTok-ஐ வாங்க மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தை… வாங்கினால் இந்தியாவில் என்ன செய்யலாம்? #VikatanPoll

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவைப் போலவே டிக்டாக் app-ஐ தடைசெய்யவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதே சமயம், அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட், டிக்டாக் app-ஐ சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கப்...