முகப்பு சினிமா `கத்தியால் தாக்கிய காவலர்; 37 குழந்தைகள் காயம்!’ - சீனாவில் தொடரும் குழந்தைகள் மீதான வன்முறைகள்

`கத்தியால் தாக்கிய காவலர்; 37 குழந்தைகள் காயம்!’ – சீனாவில் தொடரும் குழந்தைகள் மீதான வன்முறைகள்

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ள சீனா தொடர்ந்து அதிக பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், சீனாவில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கத்தியால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் உள்ள குவாங்சி ஜூவாங் எனும் பகுதியில் அமைந்துள்ள வாங்ஃபூ என்ற பள்ளியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. காலை எட்டு மணியளவில் குழந்தைகள் வழக்கம்போல பள்ளிக்கு வரும்போது, இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் 39 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 37 பேர் குழந்தைகள். குழந்தைகளுக்கு அதிகக் காயங்கள் இல்லை என்றும் பெரியவர்களுக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சுமார் 8 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். காயமடைந்தவர்கள் அனைவரும் வுஜோ நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Also Read: `மாணவர்கள், பேராசிரியர்கள் மீது தாக்குதல்; விடுதி சூறையாடல்!’ -கலவர பூமியான டெல்லி ஜே.என்.யூ

தாக்குதல் நடத்தியவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சீன அரசின் குளோபல் டைம்ஸ், தாக்குதல் நடத்தியவர் பள்ளியின் காவலர் என்று கூறியுள்ளது. அவருடைய பெயர் லி ஜியோமின் என்றும் அவருக்கு 50 வயது ஆகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடத்தியதற்கான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

தாக்குதலில் பாதிப்படைந்த குழந்தைகள் அனைவரும் 6 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில், குறிப்பாகப் பள்ளிகளில் கத்தியால் தாக்குதல்கள் நடக்கும் சம்பவம் புதியது அல்ல. சமீபகாலமாக இதுபோன்ற பல தாக்குதல்கள் நடந்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்நாட்டின் சோங்கிங் என்ற நகரில் பெண் ஒருவர் 14 குழந்தைகளைக் கத்தியால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. ஷாங்க்சி பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஒன்பது மாணவர்கள், 28 வயதுக்கு உட்பட்ட இளைஞர் ஒருவரால் கொல்லப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் மிகவும் கொடூரமான தாக்குதலாகக் குறிப்பிடப்படுகிறது. பின்னர், அந்த இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 2017-ம் ஆண்டில் ஒரு நபர் மழலையர் பள்ளியின் சுவர் வழியாக ஏறி உள்நுழைந்து சுமார் 11 மாணவர்களைக் கத்தியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதேபோல இன்னும் பல தாக்குதல்கள் சீனாவில் நடந்துள்ளன.

காயமடைந்த குழந்தைகள்

கொரோனா வைரஸ் பாதிப்பால் மூடப்பட்டிருந்த சீனப் பள்ளிகள் மே மாதம் மீண்டும் திறக்கப்பட்டு குழந்தைகள் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த நிலையில், இந்தச் சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் மாணவர்கள் மீது தொடர்ந்து நடைபெறும் வன்முறைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இதுபோன்ற தாக்குதல்களுக்கு என்ன காரணம் என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. குழந்தைகளுக்குப் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

Also Read: `கொரோனா அச்சம்; எல்லையில் பதற்றம்!’ – இந்தியாவிலிருந்து தங்கள் மக்களை திரும்ப அழைக்கும் சீனா

Must Read

தேர்தல் நேரத்தில் இந்துமதத்தை நேசிக்கும் சார்ள்ஸ்!

தேர்தல் நேரத்தில் இந்துமதத்தை நேசிக்கும் சார்ள்ஸ்; பேசும் படம்!

இப்போது 3 கோடி மொத்தம் 8 கோடி; சிவமோகனிடமிருந்து வன்னி மக்களை காப்பாற்ற கடவுள்தான் வரவேண்டும்!

தேர்தல் வருகிற ஆவணி மாதம் 5-ம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் வவுனியாவில் தனது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்தபெண்ணை கற்பழித்த சி.சிவமோகன் தற்போதுவரை 3கோடியே 67 லட்ஷம் ரூபாய் வரை செலவளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,...

Corona Live Updates: `முதல்வருக்கு கொரோனா பரிசோதனை… ரிசல்ட் நெகட்டிவ்’ – தமிழக அரசு

முதல்வருக்கு நெகட்டிவ்:முதல்வர் எடப்பாடி பழனிசாமிதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாலும் அமைச்சர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி...

விசாக பட்டினத்தில் பெரும் தீ விபத்து: பொது மக்கள் அச்சம்!

விசாகப்பட்டினம் பார்மா சிட்டியில் செயல்படும் விசாகா சால்வெண்ட்ஸ் ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

சும்மா மெஜாரிட்டினு சொல்லாதீங்க; இதையும் செஞ்சு காட்டுங்க – ராஜஸ்தான் பாஜக!

ராஜஸ்தான் மாநிலத்தின் அரசியல் சூழல் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பாஜக முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.