முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த மைனா நந்தினி: குவியும் வாழ்த்து

கர்ப்பமாக இருப்பதை அறிவித்த மைனா நந்தினி: குவியும் வாழ்த்து

சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா என்கிற ரோலில் நடித்தவர் நந்தினி. அதில் அவரது பேச்சு மற்றும் நடிப்பு ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. அந்த சீரியல் அதிகம் பிரபலமானதால் அவரது பெயரே என்றாகிவிட்டது.

மைனா நந்தினி அதற்கு பிறகு அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர், சின்னத் தம்பி என பல சீரியல்களில் அவர் நடித்துவிட்டார். அது மட்டுமின்றி சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அவர். வம்சம், ராஜா ராணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் நடித்துள்ளார் அவர்.

அவர் சென்னையில் ஜிம் நடத்திவந்த கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்துவிட்டார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். சில வருடங்களுக்கு முன்பு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது அது.

அதன் பிறகு மைனா நந்தினி சென்ற வருடம் சீரியல் நடிகர் யோகேஸ்வரி என்பவரை திருமணம் செய்துகொண்டார் . அவர்கள் திருமண நிகழ்ச்சியில் பல முன்னணி சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில் மைனா அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான் கர்பமாக இருப்பதை தெரிவித்துள்ளார். தற்போது ஐந்து மாதம் கர்பமாக இருக்கும் அவர் முதல் குழந்தைக்காக ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

சில தினங்கள் முன்பு மைனாவின் பிறந்தநாளுக்கு கணவர் யோகேஷ் சர்ப்ரைஸ் கொடுத்தார். அவரது குடும்பத்தினர் உடன் மைனா கேக் வெட்டும் வீடியோவையும் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.

ஹாப்பி பர்த்டே பாப்பா என குறிப்பிட்டு வீட்டை டெகரேட் செய்து மைனாவுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் கணவர் யோகேஷ் மற்றும் குடும்பத்தினர்.

அந்த வீடியோவில் மைனா நந்தினியின் வயிறு பெரிதாக இருப்பது பற்றி பலரும் கேட்ட நிலையில் தான், மைனா தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்டுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை, எது எதிர்பார்கிறீர்கள் என கேட்டதற்கு, நாங்கள் குழந்தை தான் எதிர்பார்க்கிறோம். எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என கூறியுள்ளனர்.

சமீபத்தில் ஆல்யா மானசா – சஞ்சீவ், ஜீ.வி.பிரகாஷ் – சைந்தவி உள்ளிட்ட பிரபலங்களுக்கு குழந்தை பிறந்துள்ளதாக மகிழ்ச்சியாக அறிவித்தனர். அடுத்து மைனா நந்தினி – யோகேஸ்வர் ஜோடி முதல் குழந்தையை எதிர்பார்த்திருப்பதாக அறிவித்திருப்பதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Must Read

தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு!

தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் கடந்த 2019ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து, 2019ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி புதிய தலைமை செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி...

இங்கிலாந்து தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு: ஹோல்டர் கேப்டன்!

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு முதல் சர்வதேச டெஸ்ட் தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது. , மேற்கிந்திய அணிகள் பங்கேற்கும் இந்த டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் வரும் ஜூலை 8ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில்...

ஆன்லைன் வீடியோக்களை அதிகமாகப் பார்க்கும் இந்தியர்கள்!

இந்திய மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப நாளுக்கு போன்களின் எண்ணிக்கையும் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. குறைந்த விலைக்கு ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதாலும் குறைந்த கட்டணத்தில் டேட்டா சேவைகள் வழங்கப்படுவதாலும் ஸ்மார்ட்போன்களில் அதிக நேரத்தை...

குடும்ப அட்டைதாரர்களுக்கு 7500 ரூ: திருநாவுக்கரசு கோரிக்கை!

மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கட்சி சார்பாக கொரானா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு நலிவடைந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். தொடர்ந்து...

விரைவில் சர்வதேச விமான போக்குவரத்து? வெளிநாட்டவர்களுக்கு மத்திய அரசு அனுமதி!

பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக முடக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து எப்போது தொடங்கப்படும் என்ற...