முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் கர்ப்பிணிப் பெண்களை வெயிலில் அலைக்கழித்த போலீஸ் அதிகாரி!

கர்ப்பிணிப் பெண்களை வெயிலில் அலைக்கழித்த போலீஸ் அதிகாரி!

மாவட்டம் போடியில் நிறைமாத கர்ப்பிணி பெண்கள் இருவரை சிகிச்சைக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி அவர்கள் சென்ற வாகனங்களை பறிமுதல் செய்து முழு மாத கர்ப்பிணிப் பெண்களை கடும் வெயிலில் நடக்க வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கிய சம்பவம் தேனி மாவட்ட மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் கொள்ளை நோயை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நிறை மாத கர்ப்பிணி பெண்களையும், நோயாளிகளையும் தொடர்ந்து அலைக்கழித்து அவர்கள் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து நகர காவல்துறையினர் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் இன்று தேனி மாவட்டம் போடி நந்தவன தெருவைச் சேர்ந்த கார்த்திகா என்ற பெண்ணும், போடி சந்தன மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த அபர்ணா என்ற பெண்ணும் நிறைமாத கர்ப்பிணி பெண்கள் என்பதால் வரும் ஞாயிறன்று அவர்களுக்கு குழந்தை பிறப்பதற்கான தேதியை மருத்துவர் தெரிவித்துள்ளார். மருத்துவர் அதற்கு முன்பாக அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என கண்டறிய போடி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து வருமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் வாகனங்கள் இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்த அந்த இரண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கும் உதவ ஒரு ஆட்டோ ஓட்டுநர் முன்வந்தார். அவருடன் போடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் ஒரு மணி நேரம் கொரோனா பரிசோதனை செய்ய கால நேரம் ஆகும் என்பதால் ஆட்டோ ஓட்டுநரை ஒரு மணி நேரம் கழித்து வருமாறு கூறியுள்ளனர். இதனை ஏற்று புறப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் பின்னரை மருத்துமனைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

அவர் போடி நகர காவல் நிலையம் வழியாக வரும்போது அவரை வழிமறித்த போடி நகர சார்பு ஆய்வாளர் கதிரேசன் ஆட்டோ ஓட்டுநர் 2 கர்ப்பிணிப் பெண்களையும் ஏற்றி வர விடாமல் தடுத்து, ஆட்டோ ஓட்டுநரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி ஆட்டோவை பறிமுதல் செய்து போடி நகர காவல் நிலையத்தில் வைத்துள்ளார். இதனால் நடக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாக இரண்டு கர்ப்பிணிப் பெண்களும் போடி அரசு மருத்துவமனையில் இருந்து நடந்தே வந்துள்ளனர்.

வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்ததால் மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் நடந்து வந்த பெண்களை போடியில் உள்ள சக பத்திரிக்கையாளர்கள் மீட்டு அவர்களுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்து அனுப்பியுள்ளனர். பின்னர் போடி நகர காவல் நிலையத்திற்கு சென்று அங்குள்ள சார்பு ஆய்வாளர் கதிரேசனிடம் கேட்டபொழுது அவர் அவ்விரு பெண்களையும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி அவர்களை வெளியே அனுப்பியுள்ளார். இதனால் மனமுடைந்த கர்ப்பிணிப் பெண்ணும் அவரது தாயாரும் போடி நகர காவல் நிலையம் முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாங்கள் நிறைமாத கர்ப்பிணி என்பதால் கொரோனா பரிசோதனைக்கு சென்றுவிட்டு ஆட்டோவில் திரும்ப முயலும் போது, அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுநரையும், தான் ஒரு கர்ப்பிணிப் பெண் என்பதைக்கூட மதிக்காமல் தங்களை மிகவும் இழிவான வார்த்தைகளால் திட்டி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும், தங்களது உயிருக்கு எந்தவொரு ஆபத்து ஏற்பட்டாலும் அதற்கு இந்த சார்பு ஆய்வாளர்தான் முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும் மிகுந்த மன உளைச்சலோடு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

எனவே தன்னை ஏற்றி வந்த ஆட்டோ ஓட்டுநரையும், ஆட்டோவையும் உடனடியாக திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும், தன்னைப் போன்ற கர்ப்பிணிப் பெண்களை மருத்துவ பரிசோதனைக்கு செல்லவிடாமல் அலைக்கழிக்கும் போடி நகர சார்பு ஆய்வாளர் கதிரேசன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட 2 கர்ப்பிணிப் பெண்களும் புகாரளித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தேனி மாவட்ட மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளும், தமிழக துணை முதல்வரும், சம்பந்தப்பட்ட சார்பு ஆய்வாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Must Read

கொரோனா : சென்னை அண்ணா நகர்வாசிகளுக்கு ‘பேட் நியூஸ்’

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நான்காம்கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இன்றைய நிலவரப்படி,...

வெட்டுக்கிளி கதையை முடிக்க ட்ரோன் அட்டாக்!

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இந்தியா செல்கிறது என செய்திகள் வெளியாகி வரும் சூழலில் ட்ரோன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த புது முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பை ஒழிக்க ராஜஸ்தான்...

`சீனாவின் மிகவும் மோசமான பரிசு!’ – கொரோனா விவகாரத்தில் மீண்டும் விமர்சித்த ட்ரம்ப்

கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. இதுவரை அங்கு 17.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பாதிப்பால்...

`இப்பதான் எங்களுக்கு நிம்மதி!’ -புதுக்கோட்டையில் கொரோனாவிலிருந்து மீண்ட ஒன்றரை வயது குழந்தை

உலக நாடுகளையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய கொரோனா வைரஸ், இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், மே 31-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா தொற்று...

சமந்தாவை சீண்டினாரா பூஜா ஹெக்டே?

சமந்தா குறித்து பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியான பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தெலுங்கு திரையுலகில் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இருவருமே முன்னணி நாயகிகளாக வலம் வருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு கதைக்கு...