முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் கர்ப்பிணி யானை செத்தது எப்படி? இறுதி அறிக்கை வெளியீடு!

கர்ப்பிணி யானை செத்தது எப்படி? இறுதி அறிக்கை வெளியீடு!

கேரளா பாலக்காடு மாவட்டத்தில் அண்ணாச்சிப் பழத்தில் வெடிமருந்து வைத்து கொலை செய்யப்பட்ட யானை எதனால் உயிரிழந்தது என சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கேரள அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த இறுதி அறிக்கையில் யானை எப்படி உயிரிழந்தது? உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்துத் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கேரள வனத்துறை வெளியிட்டுள்ள உடற்கூறு ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
உயிரிழந்துள்ள யானை 15 வயது மதிக்கத்தக்கது. அதன் கீழ் தாடை பகுதியை யானை விழுங்கியுள்ளது. வாய், தொண்டை பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

யானையின் உடலில் துப்பாக்கி தோட்டோவோ, அல்லது வேறு எந்த விதமான தழும்புகளோ காணப்படவில்லை. அதன் வாய், உள்படப் பகுதிகளில் முட்டைப் புழுக்கள் நிறைந்து காணப்பட்டன. யானையின் மேல் தாடை உள்ளிட்ட பகுதிகள் அழுகிய நிலையிலிருந்தது. அந்த யானையின் வயிற்றில் அதிகளவு தண்ணீர் காணப்பட்டது. யானை இருமாதம் கருவுற்று குட்டியைச் சுமந்திருந்துள்ளது.

யானை அதிகளவில் தண்ணீர் குடித்துக் கொண்டேயிருந்ததால் அதன் நுரையீரல் செயலற்று போய் உடனடியாக உயிரிழந்துள்ளது. யானை சாப்பிட்ட உணவிலிருந்த பொருட்கள் வாயில் வெடித்துச் சிதறியதில் ஏற்பட்ட வலி காரணமாக, அது உயிரிழக்கும் வரை எந்த வித உணவையும் உட்கொள்ள முடியாமல் தண்ணீரை மட்டுமே குடித்து வந்துள்ளது. இந்த பிரச்சினைகள் காரணமாகத் தண்ணீரிலே இருந்து மூச்சு விட முடியாமல் உயிரிழந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Must Read

இந்தி நடிகை திவ்யா சவுக்சே: புற்றுநோயால் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் நடிகை திவ்யா சவுக்சே (28). நடிகையான பின்னர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் திவ்யா சவுக்சே வசித்து வந்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் ஹை அப்னா...

வாழ்த்துங்களேன்!

14.7.20 முதல் 27.7.20 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத...

அனுராத புரத்தில் சில இடங்கள் லாக் டவுன் என அறிவிப்பு- மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639...

முடக்கப்பட்டது பல்கலைக்கழகம் கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா என அச்சம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில்...