முகப்பு சினிமா கர்ம வினைகள் போக்கும் பஞ்சலிங்கேஸ்வரர் - இல்லம் தேடி வரும் இறை தரிசனம்! #worshipathome

கர்ம வினைகள் போக்கும் பஞ்சலிங்கேஸ்வரர் – இல்லம் தேடி வரும் இறை தரிசனம்! #worshipathome

கொரோனா தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச் செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியினர் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம் அனுதினம் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள் அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக் கூடச் செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.

இல்லம் தேடி வரும் இறை தரிசனம் – காவேரிப்பாக்கம் பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயம்

கொரொனோ நோய் அனுதினம் ஆலயம் சென்று இறைவனை…

Posted by Sakthi Vikatan on Thursday, March 26, 2020

அவர்களின் மனக் குறையைத் தீர்க்க சக்திவிகடன், ‘இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்குகிறது. இதில் புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவு செய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது காவேரிப்பாக்கம், பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயம்.

சென்னை – வேலூர் நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து சுமார் 90 கி.மீ தொலைவில் உள்ள காவேரிப்பாக்கத்தில் அமைந்திருக்கிறது பஞ்சலிங்கேஸ்வரர் திருக்கோயில்.

இந்தத் தலத்தில் அருள்பாலிக்கிறார், பஞ்சலிங்கேஸ்வரர். மேலும் இங்கு பஞ்சபூத வடிவங்களாக தனித்தனி சந்நிதிகளில் சிவபெருமான் காட்சியளிக்கிறார். அம்பிகையே இந்தத் தலத்தில் பஞ்சபூத வடிவில் சிவபெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டாள்.

பஞ்சலிங்கேஸ்வரர்

இந்தத் தலத்தில் அருள்புரியும் நடராஜர் சிறப்பு மிக்கவர். பரதம் கற்றுக்கொள்பவர்கள் இங்கு வந்து நடராஜர் முன் சலங்கை வைத்து பூஜை செய்த பின்னர்தான் அரங்கேற்றம் செய்வதைச் சிறப்பாகக் கருதுகிறார்கள்.

இந்தத் தலம் 12 ராசிக்காரர்களுக்கும் வழிபட உகந்த பஞ்சபூதத் தலமாக விளங்குகிறது.

பஞ்சபூதங்களில் நீருக்கு அதிபதியாக அப்புலிங்கம் உள்ளது. மீனம், கடகம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்கள் அப்புலிங்கத்தை வழிபாடு செய்வது சிறந்தது.

வாயுலிங்கத்தை மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களும் அக்னி லிங்கத்தை மேஷம், சிம்மம், தனுஷ் ஆகிய ராசிக்காரர்களும் நிலத்துக்குரிய ப்ருத்விலிங்கத்தை ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய ராசிக்காரர்களும் வழிபடுவது சிறப்பு வாய்ந்தது.

ஐந்தாவது லிங்கம் ஆகாய லிங்கம். ராசி மற்றும் நட்சத்திரம் தெரியாதவர்கள் இந்த லிங்கத்தை வழிபடுவது சிறப்பைத் தரும்.

காவேரிப்பாக்கம்

பஞ்சலிங்கங்களையும் வழிபட்டால் கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கி வாழ்க்கை செழிப்படையும்.

காவேரிப் பாக்கம் பஞ்சலிங்கேஸ்வரர் தலத்துக்குச் சென்று வழிபட்டால் பஞ்சபூதத் தலங்களையும் வழிபட்ட பலன்கள் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் கடன் தொல்லை, நோய்ப் பிரச்னை, திருமணத் தடை நீங்கும். இல்லறம் செழிப்படையும். குழந்தை பாக்கியம் கிட்டும்.

இந்தத் தலத்தில் தட்சிணாமூர்த்தி, காமாட்சி, சண்டிகேஸ்வரர் விநாயகர் ஆகியோர் அருள்புரிகிறார்கள். இவர்களை தரிசித்தால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்  பஞ்சலிங்கங்களையும், தொடர்ந்து ஐந்து பிரதோஷ தினங்களில் வழிபட்டால் கர்ம வினைகள் யாவும் நீங்கி வாழ்க்கை செழிப்படையும்.

 வீட்டில் இருந்தபடியே பஞ்சலிங்கேஸ்வரரை வழிபட்டு கர்ம வினைகள் யாவும் நீங்கி பேறுகொள்வோம்…

Must Read

இந்தியாவில் இளைஞர்களைக் குறிவைக்கிறது கொரோனா… அரசு ஆய்வுகளே ஆதாரம்…

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போதும் சமூக தொற்றாக மாறவில்லை என்றும் அதற்கான அறிகுறிகள் தெரியவில்லை என்றும் மத்திய அரசு கூறி வருகிறது. இப்போதைய நேரத்தில் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிப்பிற்கு ஆளானவர்கள்...

உதவிக்கரம் நீட்டும் கார்பரேட் நிறுவனங்கள்!

சீனாவில் தொடங்கிய வைரஸ் பாதிப்பு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனாவின் பாதிப்புகள் குறைந்திருந்தாலும் இந்தியாவில் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா...

`ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடிக்கவில்லை… 50 பகுதிகள் அடைக்கப்படும்!’- திருச்சி மாவட்ட ஆட்சியர்

கொரோனா நடவடிக்கைகள் தொடர்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார், மாவட்ட ஆட்சியர் சிவராசு. அப்போது, “திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுத்திடவும், பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் பொதுமக்கள் நடமாட்டத்தைக்...

வீட்டு தோட்டத்துக்கான விதைகளை பெற்றுக் கொள்ளுங்கள்: விவசாய திணைக்களம் அறிவிப்பு

இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் covid -19 (கொரோனா) நோய் தொற்றுக் காரணமாக தொடர்ந்து வரும் நாட்களில் முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் உணவுப் பற்றாக்குறைக்கு தீர்வாக சகலரும் வீட்டுத்தோட்டம் மேற்கொள்வது அவசியமாகிறது. அதற்கமைய...

UPDATE :உலகில் உள்ள எல்லா நாடுகளையும் விட லண்டனில் சாவு எண்ணிக்கை அதிகம்

பிரித்தானியாவில் இன்று 708 பேர் இறந்துள்ளார்கள். அதுபோக 3,735 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய அரசாங்கத்தின் அறிவித்தல் பெரும் தில்லு முல்லாக உள்ளது. ஒரு நாள் இறப்பு எண்ணிக்கை அதிகம்....