முகப்பு சினிமா `களத்தில் நிற்கும் பணியாளர்கள் 5,000 பேருக்கு 1,50,000 முட்டைகள்!' -கரூரில் தொடங்கி வைத்த அமைச்சர்

`களத்தில் நிற்கும் பணியாளர்கள் 5,000 பேருக்கு 1,50,000 முட்டைகள்!’ -கரூரில் தொடங்கி வைத்த அமைச்சர்

கொரோனா பரவல் தடுப்பு பணியில் களத்தில் நின்று பணியாற்றும் 5,000 நபர்களுக்கு உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் வகையில், 1,50,000 முட்டைகளை, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கியிருப்பது, பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

முட்டைகள் வழங்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பணியில் மக்களை காப்பதற்காக களத்தில் அயராது பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பத்திரிகை, ஊடக செய்தியாளர்களுக்கு உடல் ஆரோக்கியத்தைப் பேணி காக்கும் வகையில் முட்டைகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

Also Read: `பசியால் துடிப்பது என்னைத் தூங்கவிடல!’ -செருப்பு தைக்கும் தொழிலாளிகளை நெகிழவைத்த உதவி ஆய்வாளர்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கும், பொதுமக்கள் தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்வதற்கும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கரூர் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றது.

உதவிகள் வழங்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் செயலின் ஒரு பகுதியாக, வரும் மே 3 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், பொதுமக்களுக்கு அனைத்து விதமான அத்தியாவசியப் பொருள்களும் கிடைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், சுமார் 1 லட்சம் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் மளிகைப்பொருள்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது சொந்த செலவில் வழங்கி வருகிறார்.

அதுமட்டுமல்லாது, கொரோனா தொற்று பரவல் தடுப்புப் பணியில் தங்கள் உயிரையும் துச்சமென மதித்து களத்தில் அயராது பணியாற்றி வரும் மருத்துவர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பத்திரிகை, ஊடக செய்தியாளர்கள் என முதற்கட்டமாக 5,000 நபர்களுக்கு அவரகளின் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் வகையில், முட்டைகள் வழங்கும் பணியினை எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

உதவிகள் வழங்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அதனடிப்படையில், கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள், காவல்துறையினர், கரூர் மற்றும் குளித்தலை நகராட்சிகளின் பணியாளர்கள், பத்திரிகை மற்றும் ஊடக செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் என ஒரு நபருக்கு தலா 30 முட்டைகள் வீதம் முதற்கட்டமாக 5,000 நபர்களுக்கு 1,50,000 முட்டைகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டது. இதில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது சொந்தச் செலவில் 50,000 முட்டைகளும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் மார்கெட்டிங் சொசைட்டியின் சார்பில் 1 லட்சம் முட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Must Read

தேர்தல் நேரத்தில் இந்துமதத்தை நேசிக்கும் சார்ள்ஸ்!

தேர்தல் நேரத்தில் இந்துமதத்தை நேசிக்கும் சார்ள்ஸ்; பேசும் படம்!

இப்போது 3 கோடி மொத்தம் 8 கோடி; சிவமோகனிடமிருந்து வன்னி மக்களை காப்பாற்ற கடவுள்தான் வரவேண்டும்!

தேர்தல் வருகிற ஆவணி மாதம் 5-ம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் வவுனியாவில் தனது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்தபெண்ணை கற்பழித்த சி.சிவமோகன் தற்போதுவரை 3கோடியே 67 லட்ஷம் ரூபாய் வரை செலவளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,...

Corona Live Updates: `முதல்வருக்கு கொரோனா பரிசோதனை… ரிசல்ட் நெகட்டிவ்’ – தமிழக அரசு

முதல்வருக்கு நெகட்டிவ்:முதல்வர் எடப்பாடி பழனிசாமிதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாலும் அமைச்சர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி...

விசாக பட்டினத்தில் பெரும் தீ விபத்து: பொது மக்கள் அச்சம்!

விசாகப்பட்டினம் பார்மா சிட்டியில் செயல்படும் விசாகா சால்வெண்ட்ஸ் ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

சும்மா மெஜாரிட்டினு சொல்லாதீங்க; இதையும் செஞ்சு காட்டுங்க – ராஜஸ்தான் பாஜக!

ராஜஸ்தான் மாநிலத்தின் அரசியல் சூழல் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பாஜக முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.