முகப்பு சினிமா களவுபோன மரகதலிங்கங்கள் கதியென்ன... எஞ்சியவை பாதுகாப்பாக உள்ளனவா?!

களவுபோன மரகதலிங்கங்கள் கதியென்ன… எஞ்சியவை பாதுகாப்பாக உள்ளனவா?!

புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்க வடிவில் வழிபடுவது மிகச் சிறந்த பலனை அளிக்கும் என்றும், இந்திரன் மரகதலிங்க வழிபாடு செய்தான் என்றும் புராணங்கள் கூறுகின்றன. மரகதலிங்கத்தை வழிபட்டால் தீராத வியாதிகள் குணமடையும் என்பது முன்னோர் வாக்கு. மரகதலிங்கத்தை வணங்குவதால் கல்வி, பதவி, போன்றவற்றில் சிறந்து விளங்கலாம் என்பதும் சகல தோஷங்களும் இவ்வழிபாட்டினால் நீங்கும் என்பதும் ஐதிகம்.

தியாகராஜா கோயில் திருவாரூர்

மரகதம், பெரில் வகையைச் சேர்ந்த ஒரு கனிமம். வனேடியம் என்ற மூலகம் மரகதத்திற்கு பச்சை நிறம் தருகிறது. பச்சை நிறம் கொண்ட மரகதம் ஒளிரும் தன்மையுடையது. இதில் சிலிக்கான், அலுமினியம், மக்னீசியம் போன்ற ரசாயனப் பொருள்கள். அடங்கியுள்ளன.

இக்கற்கள் மிக மென்மையானவை. எளிதில் நொறுங்கும் தன்மை உடையவை. கண்ணாடிப்பாத்திரம் ஒன்றில் பாலை ஊற்றி, அதில் மரகதத்தைப் போட்டால், பால் முழுவதும் பச்சை நிறமாகத் தோன்றும். நீர் நிறைந்த பாத்திரத்தில் போட்டால், நீர் முழுவதும் பச்சையாகத் தோன்றும். இப்படிப்பட்ட குணமுடைய கல் மிக விலை உயர்ந்தது.

மேற்கு ரஷ்யாவின் உரல்ஸ் மலைப்பகுதியில், விலை மதிப்புமிக்க மரகத கற்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு, இப்பகுதியில் 3 ஆயிரத்து 187 கேரட் மதிப்புள்ள மரகதக் கல் தோண்டி எடுக்கப்பட்டது. இதைப் பட்டை தீட்டும் நிறுவனத்திற்கு 50 கிலோ மரகதக் கற்கள் ஏலம் விடப்பட்டது. அந்த வகையில் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் அரசுக்குக் கிடைத்தது. இந்நிலையில், 5 ஆயிரம் கேரட் தரம் கொண்ட சுமார் ஒரு கிலோ எடையுள்ள அரிய வகை பச்சை மரகதக் கல் ஒன்று இப்பகுதியில் மீண்டும் கிடைத்துள்ளது என்கிறார்கள்.

சோழர்கள் காலத்தில் 7 மரகதலிங்கங்கள் இந்திரன் மூலம் முசுகுந்த சோழச்சக்ரவர்த்திக்குக் கிடைத்தாகச் சொல்லப்படுகிறது. இந்த மரகதலிங்கங்களை இந்திரனே பூஜித்து வந்தாராம். முசுகுந்த சக்ரவர்த்தி 12 -ம் நூற்றாண்டில் வேதாரண்யம், திருக்குவளை, திருக்காரவாசல், திருவாரூர், திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருவாய்மூர் ஆகிய 7 இடங்களில் உள்ள சிவன் கோயில்களுக்கு (சப்த விடங்க தலங்கள்) விலை மதிப்பில்லாத மரகதலிங்கங்களை மக்கள் வழிப்பாட்டிற்காகக் கொடுத்துள்ளார்.

இந்த சப்தவிடங்கத் தலங்களில் மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம், மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது. இரவில் மரகதலிங்களின் மேல் சாற்றி காலையில் வழங்கப்படும் சந்தனமும் மிகச்சிறந்த மருத்துவகுணம் வாய்ந்தது.

தியாகராஜா கோயில் திருவாரூர்

இத்தகைய சிறப்பு வாய்ந்த மரகதலிங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம். நாகையில் இருந்த மரகதலிங்கம் களவுபோய் சுமார் 19 ஆண்டுகளாகிறது. திருக்குவளை ஸ்ரீ தியாகராஜர் கோயிலில் சரியான பாதுகாப்பு இல்லாத மரகதலிங்கம் திருடு போய் 2 ஆண்டுகளாகின்றன. திருக்காரவாசல் மரகதலிங்கம் களவு போய் 8 ஆண்டுகள் ஆனபோதிலும் அதை விற்பனை செய்ய முயன்றபோது போலீஸாரால் கைப்பற்றப்பட்டு, தற்போது விழுப்புரம் கோர்ட்டில் இருக்கிறது. எனவே, இக்கோயிலில் மரகதலிங்கத்திற்குப் பதிலாக காஞ்சி மடம் வழங்கிய படிகலிங்கம்தான் பூஜை செய்யப்படுகிறது.

எஞ்சிய திருவாரூர், திருநள்ளாறு, வேதாரண்யம், திருவாய்மூர் ஆகிய தலங்களில், போலீஸ் பாதுகாப்புடன் தினமும் மரகதலிங்க பூஜை நடைபெறுகிறது.

இதுபற்றி திருவாய்மூர் கோயில் செயல் அலுவலர் ஆறுமுகத்திடம் பேசினோம்.“சில கோயில்களில் மரகதலிங்கம் காணாமல் போனதால், மிகுந்த பாதுகாப்புடன் எங்கள் கோயிலில் வைத்திருக்கிறோம். விசேஷ லாக்கரில் வைக்கப்பட்டுள்ள மரகதலிங்கத்திற்கு துப்பாக்கி ஏந்திய இரண்டு காவலர்கள் எப்போதும் பாதுகாப்பு அளிக்கிறார்கள். காலை, மாலை இரண்டு வேளையும் எங்க அலுவலர்கள் பரிசோதனை செய்கிறார்கள். மரகதலிங்க பூஜை தரிசனத்திற்கு வரும் பக்தர்களையும் பரிசோதனை செய்த பின்பே அனுமதிக்கிறோம்” என்றார்.

Must Read

அனுராத புரத்தில் சில இடங்கள் லாக் டவுன் என அறிவிப்பு- மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639...

முடக்கப்பட்டது பல்கலைக்கழகம் கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா என அச்சம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில்...

லண்டனில் 24 ம் திகதியோடு அமுலுக்கு வரும் கட்டாய முகக் கவசம்- மீறினால் FINE

பிரித்தானியாவில் இம்மாதம்(ஜூலை) 24 தொடக்கம் கட்டாய நடை முறை ஒன்று அமுலுக்கு வருகிறது. சூப்பர் மார்கெட் தொடக்கம், சிறு கடைகள், உணவங்கள் என்று மக்கள் கூடும் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் கட்டாய...

நச்சு, நச்சுனு கிஸ் அடிக்க மட்டும் தான் பீட்டர் பால் கேமராவுக்கு முன் வருவாரா?: தயாரிப்பாளர் ரவீந்தர்

வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை காதலித்து கடந்த மாதம் 27ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்த கையோடு பீட்டர் பால் மீது அவரின் முதல் மனைவி எலிசபெத்...