முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் கவனம் தேவை... கோடையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்...

கவனம் தேவை… கோடையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்…

தமிழகத்தில் கடந்த ஆண்டு கோடைகாலத்தின் போது நிலவிய குடிநீர் மிகவும் கடுமையானது என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலையில் தற்போது கோடை காலம் மீண்டும் ஆரம்பமாகியுள்ள நிலையில், பற்றாக்குறை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதனையிட்டு, மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் வாழுகின்ற மக்களுக்கு குடிநீர் சீரான முறையில் வழங்குவதற்கு உண்டான ஏற்பாடுகளை அந்தந்த அமைப்புகள் செய்து வருகின்றன.

ஆனால், தேனி மாவட்டம் நகர் பகுதிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குவதற்காக குழாய்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்தக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பெரு வாரியான குடிதண்ணீர் சாலையில் பாய்ந்து வீணாகி வருகிறது

பெரியகுளம் நகர் பகுதிக்கு கொடைக்கானல் மலை பேரீச்சம் ஏரியில் இருந்து வரும் நீர், சோத்துப்பாறை அணைப்பகுதியில் சேமிக்கப்பட்டுப் பின், அங்கிருந்து பெரியகுளம் நகர் பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீராக குழாய் மூலமாக நாள்தோறும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

தற்போது அந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனை அருகில் பெருவாரியான தண்ணீர் வெளியேறி சாலையில் வீணாக செல்கிறது. இதனை பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்து கோடை காலத்தில் ஏற்படும் நிலையிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

நீர்ப் போக்குவரத்து தொடர்புடைய சிறு சிறு தவறுகள் சரி செய்யப்படுவதன் மூலமே பெரும் தண்ணீர்ப் பற்றாக்குறை தவிர்க்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டிய நேரமும் இது.

Must Read

யாழ் விடத்தற்பளை முகாமில் 51 கடற்படையினருக்கு கொரோனா: யாழ் மக்கள் அச்சம்

யாழ். கொடிகாமம் விடத்தற்பளை முகாமில் தனிமைப் படுத்தப்பட்ட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த 51 பேரும் கடற்படை சிப்பாய்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடத்தற்பளை தனிமைப்படுத்தல் முகாமில் 260 கடற்படை சிப்பாய்கள்...

உள்பக்கமாக பூட்டி பதுங்கிய அமெரிக்க பொலிசார்: வெடித்தது பெரும் கலவரம்

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் வெளியாகிய வீடியோ, இன்று அமெரிக்காவில் பெரும் கலவரத்தை உண்டாகியுள்ளது. கறுப்பின நபர் ஒருவரை வெள்ளையின பொலிசார் கைது என்ற போர்வையில் காலல் நசுக்கி கொலை செய்து இருந்த...

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் திமுகவினரின் மதுபான ஆலைகளும் மூடப்படும்: டி.கே.எஸ். சாமர்த்திய பதில்!!

எம்.பி.யான டி.ஆர்.பாலு தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் குழு, தமிழக தலைமைச் செயலாளரை சமீபத்தில் சந்தித்தனர். திமுக சார்பில் தொடங்கப்பட்டுள்ள "ஒன்றிணைவோம் வா" திட்டத்தின்கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் ஒரு லட்சம்...

ப்ளஸ்2 மாணவர்களுக்கு போனஸ் மார்க், தேர்வுத்துறை உத்தரவு!

தமிழ்நாட்டில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளில் ஏற்பட்ட ஒரு பிழைக் காரணமாகக் குறிப்பிட்ட மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பன்னிரெண்டாம் பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம்...

திருப்பதி கோயில் சொத்துகள் விற்பனைக்கு அல்ல – தேவஸ்தான நிர்வாகம் முடிவு

திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக அளித்த 50 சொத்துக்களை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்திருந்தது. தேவஸ்தான நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து...