முகப்பு சினிமா `காரணம் கேட்டா.. சுத்திப்பார்க்க வந்தோம்னு சொல்றாங்க!’- அதிரடி காட்டும் புதுக்கோட்டை போலீஸார்

`காரணம் கேட்டா.. சுத்திப்பார்க்க வந்தோம்னு சொல்றாங்க!’- அதிரடி காட்டும் புதுக்கோட்டை போலீஸார்

கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில், முக்கிய நடவடிக்கையாகத்தான், பிரதமர் நரேந்திரமோடி 21 நாள் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, மாநில மற்றும் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் மிகவும் அத்தியாவசியத் தேவை, தவிர வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும், பொதுமக்கள் குறிப்பாக, இளைஞர்கள் பலரும் தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் வலம் வந்தநிலையில், காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை போலீஸார் நடவடிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை உத்தரவை மீறி பொதுவெளியில் தேவையின்றி இருசக்கர வாகனத்தில் சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கலாம் என்று புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில், மாவட்டத்தில் தடையை மீறி பொதுவெளிகளில் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 120 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, 80 இருசக்கர வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து, தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை இருக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். சில இடங்களில் போலீஸார், வெளியே சுற்றுபவர்களை 100 முதல் 150 தோப்புக்கரணம் போடச் சொல்லி அதன்பின்பு விட்டிருக்கின்றனர். இதுபற்றி போலீஸார் கூறும்போது, “பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் பொதுவெளியில் கூட வேண்டாம். குறிப்பாக, தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் யாரும் செல்ல வேண்டாம் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம்.

புதுக்கோட்டை போலீஸார் நடவடிக்கை

குறிப்பாக, இளைஞர்கள் கேட்டபாடு இல்லை. என்ன செய்கிறார்கள் என்று பார்த்து சுற்றித் திரிவதற்காகவே சிலர் வருகின்றனர். காரணம் கேட்டால், சாலை எப்படி இருக்குன்னு சும்மா சுற்றிப்பார்க்க வந்ததாகக் கூறுகின்றனர். இருசக்கர வாகனங்களை வாங்கி வைத்துக்கொண்டு அனுப்பிவிட்டோம். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, இதேபோல், தேவையில்லாமல் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை இருக்கும்” என்றனர்.

Must Read

பிரிட்டன் பிரதமரின் கர்ப்பம் தரித்த பெண் நண்பிக்கும் கொரோனா!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பெண் நண்பி தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது தாயுடன் தங்கி வருகிறார். பிரிட்டன் பிரதமர் (வயது 55) கொரோனா தொற்றுக்கு முன்பு...

`கொரோனா தாக்கம்’ – எப்படி இருக்கிறது திருப்பூர் தொழில்துறை? #MyVikatan

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!கொரோனாவின் கோரப்பசி உலகெங்கும்...

`வீட்டிலேயே முடங்கிக் கிடந்தா சோறு கிடைக்காது..!’ -சாத்தூர் பைபாஸில் கவனம் ஈர்த்த முதியவர்

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உலகமே அதிர்ந்து போயுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன....

`மதுவுக்காக கிணற்றுக்குள் குதித்த தொழிலாளி!’ – வாளிக்குள் குவார்ட்டரை அனுப்பி கெஞ்சிய மக்கள்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக மது கிடைக்காமல் குடிமகன்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சென்னை...

கொரோனா வைரஸ் எதிரொலி! – வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு #Corona #NowAtVikatan

வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு!வாட்ஸ் அப்பில் மற்றவர்களுக்குத் தகவல்களைப் பகிர புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதிகம் முறை பகிர்ந்த தகவலை 5 நபர்களுக்குப் பதிலாக இனி ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும். கொரோனா வதந்தியைத்...