முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் கார்த்தி நடிக்க வேண்டிய கதையில் விஷால்! சூப்பர்ஹிட் பட இயக்குனருடன் கூட்டணி

கார்த்தி நடிக்க வேண்டிய கதையில் விஷால்! சூப்பர்ஹிட் பட இயக்குனருடன் கூட்டணி

நடிகர் கைவசம் இரண்டு படங்கள் வைத்திருக்கிறார். சக்ரா மற்றும் துப்பறிவாளன் 2 ஆகிய படங்கள் தற்போது படப்பிடிப்பில் இருக்கின்றன.

துப்பறிவாளன் 2 படத்தினை இயக்கி வந்த மிஷ்கின் விஷால் உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக திடீரென விலகினார். அதனால் மீதி படத்தினை விஷால் இயக்க உள்ளார். இதன் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆகிறார் அவர். கொரோனா லாக்டவுன் முடிந்தபிறகு இதன் ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விஷால் அடுத்து இருமுகன் புகழ் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் மற்றொரு படத்தில் கார்த்திக்கு பதிலாக விஷால் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

ஜெயம்ரவி நடித்த அடங்கமறு படத்தினை இயக்கியவர் . அவரது அறிமுக படமான அதற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் அவரது அடுத்த படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் தான் அடுத்து நடிக்கிறார் என செய்திகள் முன்பே வந்த நிலையில், கார்த்தி அதில் இருந்து விலகியுள்ளார். பொன்னியின் செல்வன், சுல்தான் போன்ற படங்களில் அவர் நடித்து வருவது தான் அதற்கு காரணம்.

தற்போது அதே கதையில் கார்த்திக்கு பதிலாக விஷால் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. பைவ் ஸ்டார் கதிரேசன் தான் இந்த படத்தினை தயாரிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவுப்பு எதுவும் தற்போது வரை வரவில்லை.

Must Read

அதிருப்தி எம்.எல்.ஏக்களை சரிகட்டும் முதல்வர்; என்னென்ன பிளான் பண்றார் பாருங்க!

ஆளும் காங்கிரஸ் ஆட்சியில் போர்க்கொடி தூக்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்களை சரிகட்டும் வேலையில் முதலமைச்சர் அசோக் கெலாட் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காரைக்கால்: `முழுமனதோடு செய்கிறேன்!’ – சொந்த நிலத்தைக் கோயிலுக்குக் கொடுத்த இஸ்லாமியர்

காரைக்கால் அருகே கட்டப்பட்ட கோயிலுக்கான இடத்தை, நில உரிமையாளரான இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஒருவர், மத நல்லிணக்கத்தைப் பேணும்வகையில் புதுவை அமைச்சர் கமலக்கண்ணன் முன்னிலையில் கோயில் நிர்வாகத்திடம் தானமாக வழங்கியுள்ளது பாராட்டைப் பெற்றுள்ளது.இந்து...

சந்திரபாபு பிறந்த நாள் கட்டுரை: ரம்மியா? ஜோக்கரா? 

13 என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்டு விளையாடப்படும் சூதாட்டத்தில், ஜோக்‍கர் மிக மிக அவசியம். அதைவிட அவசியம் ரம்மி. என்னதான் ஜோக்‍கர் இருந்தாலும் ரம்மி சேர்ந்தால்தான் ஆட்டம் வெற்றி பெறும். அதுபோல சினிமா...

இலங்கையின் அரிய ஒளிபடத்தை நாசா வெளியிட்டுள்ளது; எப்படி இருக்கிறது பாருங்கள்!

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இலங்கை மற்றும் இந்தியாவின் தெற்கு முனை தென்படும் விதமாக அழகான ஒளிபடமொன்றை நாசா வெளியிட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஜூலை 24ஆம் திகதி, விண்வெளி வீரர்களான பெஹன்கென் மற்றும் டக்...

சம்பந்தருக்கு வாக்களிக்கச் சொல்லும் ராஜபக்சவின் வேட்பாளர்!

மகிந்த அரசுடன் கூட்டமைப்பு பின்கதவு பேச்சுக்களை நடத்துவதான குற்றச்சாட்டுக்கள் மத்தியில் திருக்கோணாமலையின் பெரமுன வேட்பாளர் சுசந்த புஞ்சிநிலமே தனக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள், வாக்குகளை இரா.சம்பந்தன் ஐயாவுக்கு போடுமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் என்ற...