முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் கீழடி: மணலூரில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடக்கம்

கீழடி: மணலூரில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடக்கம்

ஆய்வுகளில் மிக முக்கியமான எழுச்சிக் காலங்களில் ஒன்று 2019-20 ஆண்டு. காரணம் என்னும் தொல்நகரம். தமிழர் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய, ஒரு கட்டமைக்கப்பட்ட நகர நாகரிகமென்பதை நிறுவவதற்கான சான்றுகளுடனும், மேலும் மேலும் ஏராளமான வியக்கத்தக்க வரலாற்று உண்மைகளுக்கு கட்டியங்கூறும் விதமாக அமைந்த ஆய்வுகள்தான் கீழடி ஆய்வுகள்.

இதுவரை 5கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், கடைசியாக 4ஆம் கட்ட அகழாய்வின் அறிக்கை வெளியாகி பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், 6ம் கட்ட பணியானது கடந்த பிப்ரவரி 19ம் தேதி தொடங்கியது. கீழடி, அகரம், கொந்தகை, உள்ளிட்ட நான்கு இடங்களில் அகழாய்வு பணிகள் நடத்த திட்டமிட்ட நிலையில், மணலூரில் மட்டும் இடம் தேர்வு செய்வதில் இழுபறி நிலவி வந்தது.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் பரவலால் பணிகள் மார்ச் 24ஆம் தேதியுடன் நின்றுவிட்ட நிலையில் பணிகள் இன்று மீண்டும் தொடங்கியுள்ளன. இதற்காக மணலூரிலும் இடம் தேர்வு செய்யப்பட்டு இன்று முதல் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

கீழடி அகழாய்வுக்காக பல விவசாயிகளும் தங்கள் நிலத்தை அளித்துள்ளனர். மணலூரில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் இந்தப் பணி இன்று துவங்கியுள்ளது. அதற்கான இடத்தை அழகுமலர் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் வி.மலைச்சாமி மற்றும் பேராசிரியர் முத்துச்சாமி ஆகியோர் அளித்துள்ளனர்.

தமிழக தொல்லியல் துறையின் துணை இயக்குநர் முனைவர்.சிவானந்தம் தலைமையில் நான்கு அதிகாரிகளும் 10 கள ஆய்வாளர்களும் கொண்ட குழுவினர் இந்த அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப்ப் அணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், வரலாற்றின் அதிமுக்கியமான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.

Must Read

யாழ் விடத்தற்பளை முகாமில் 51 கடற்படையினருக்கு கொரோனா: யாழ் மக்கள் அச்சம்

யாழ். கொடிகாமம் விடத்தற்பளை முகாமில் தனிமைப் படுத்தப்பட்ட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த 51 பேரும் கடற்படை சிப்பாய்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடத்தற்பளை தனிமைப்படுத்தல் முகாமில் 260 கடற்படை சிப்பாய்கள்...

உள்பக்கமாக பூட்டி பதுங்கிய அமெரிக்க பொலிசார்: வெடித்தது பெரும் கலவரம்

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் வெளியாகிய வீடியோ, இன்று அமெரிக்காவில் பெரும் கலவரத்தை உண்டாகியுள்ளது. கறுப்பின நபர் ஒருவரை வெள்ளையின பொலிசார் கைது என்ற போர்வையில் காலல் நசுக்கி கொலை செய்து இருந்த...

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் திமுகவினரின் மதுபான ஆலைகளும் மூடப்படும்: டி.கே.எஸ். சாமர்த்திய பதில்!!

எம்.பி.யான டி.ஆர்.பாலு தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் குழு, தமிழக தலைமைச் செயலாளரை சமீபத்தில் சந்தித்தனர். திமுக சார்பில் தொடங்கப்பட்டுள்ள "ஒன்றிணைவோம் வா" திட்டத்தின்கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் ஒரு லட்சம்...

ப்ளஸ்2 மாணவர்களுக்கு போனஸ் மார்க், தேர்வுத்துறை உத்தரவு!

தமிழ்நாட்டில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளில் ஏற்பட்ட ஒரு பிழைக் காரணமாகக் குறிப்பிட்ட மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பன்னிரெண்டாம் பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம்...

திருப்பதி கோயில் சொத்துகள் விற்பனைக்கு அல்ல – தேவஸ்தான நிர்வாகம் முடிவு

திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக அளித்த 50 சொத்துக்களை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்திருந்தது. தேவஸ்தான நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து...