முகப்பு சினிமா குடியிருப்புப் பகுதியில் தஞ்சமடைந்த காட்டுமாடு! -நேசத்துடன் பாதுகாத்துவரும் மலைக் கிராம மக்கள்

குடியிருப்புப் பகுதியில் தஞ்சமடைந்த காட்டுமாடு! -நேசத்துடன் பாதுகாத்துவரும் மலைக் கிராம மக்கள்

வனப்பரப்பை அதிகளவு கொண்டுள்ள நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளின் நடமாட்டமும் அதிகளவு காணப்படுவது வழக்கம். தற்போது கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அது நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.

Indian Gaur

இதனால் வன விலங்குகள் அச்சமின்றி சுதந்திரமாக உலாவுகின்றன. கூடலூர், பந்தலூர்ப் பகுதிகளில் யானை, புலி உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது. இதேபோல் குன்னூர், கோத்தகிரி, குந்தா பகுதிகளில் காட்டுமாடுகள் வழக்கத்திற்குமாறாக எல்லா இடங்களிலும் சுற்றித்திரிகின்றன.

இந்த நிலையில் ஊட்டி அருகில் உள்ள கேத்தி வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டுமாடு ஒன்று, அருகில் உள்ள அரசு பணியாளர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்துள்ளது. பார்வை குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள இந்தக் காட்டுமாடு வனத்தில் உணவு, தண்ணீர் தேடி உட்கொள்ள முடியாமல் மனிதர்களின் உதவியை நாடியுள்ளது.

Indian Gaur

இயலாமையால் தவிக்கும் இந்தக் காட்டுமாட்டிற்கு உள்ளூர் மக்கள் மிகுந்த நேசத்துடன் தண்ணீர் மற்றும் பசுந்தழைகளை அளித்து வருகின்றனர் .

இது குறித்து கேத்தி பிரகாசபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சந்தோஷ், “வனப்பகுதி அருகில் உள்ள குடியிருப்பு வழியாக காட்டுமாடுகள் கூட்டமாக கடந்து செல்லும். ஆனால் ஒரு காட்டுமாடு மட்டும் வழக்கத்திற்குமாறாக கடந்த ஒரு வாரமாக இங்கேயே தங்கிவிட்டது. அதற்கு இரண்டு கண்களுமே தெரிவதில்லை. இதனால் உணவு தேட முடிவதில்லை. நீண்டதூரம் நடக்கவும் சிரமப்பட்டுவருகிறது.

Indian Gaur

எனவே ஊர் இளைஞர்கள் ஒன்றிணைந்து காலை மற்றும் மாலை வேளைகளில் புற்களை கொண்டுவந்து தருகிறோம். அதை உட்கொண்டு அருகில் உள்ள வீட்டில் வைக்கும் தண்ணீரைக் குடித்து உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது” என்றார்.

காட்டுமாடு குறித்து வனத்துறையினர், “இது கூட்டத்தால் விரட்டப்பட்ட ஒரு ஆண் காட்டுமாடு. வயது முதிர்வால் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. காட்டுமாடுகளுக்கு முதிர்வால் பார்வைக்குறைபாடு ஏற்படுவது இயற்கைதான்.

Indian Gaur

இந்த வனத்தில் சிறுத்தை, புலி போன்றவை இருந்தால் அவற்றுக்கு உணவாகியிருக்கும். குடியிருப்பு அருகில் என்பதால் மக்கள் உதவி வருகின்றனர்” எனத் தெரிவித்தனர்.

Must Read

இன்னும் சில மணி நேரங்களில் இருந்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் விபரங்கள்

இன்று(06) இலங்கை நேரப்படி மதியம் 3 மணி முதல், தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பிக்கும். உடனுக்கு உடன் வெற்றிபெற்றவர்கள் யார் என அறிந்து கொள்ள அதிர்வு செய்திகளோடு இணைந்திருங்கள். நாம் உடனுக்கு உடன்...

துறைமுக கிடங்கில் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்ததே காரணம் பெய்ரூட் குண்டுவெடிப்பு பலி 100 ஆனது: 4,000 பேர் படுகாயம்; வீடுகள் மீது உடல் பாகங்கள்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. 4,000க்கும் மேற்பட்டோர்காயம் அடைந்துள்ளனர். மத்திய கிழக்கு நாடான லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில்...

ஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்டாட்டங்களில் கொரோனா தொற்று!

ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்று பெரிய கொண்டாட்டங்களில் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 20 அகவை இளைஞன் உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதேவேளை தொற்று பலருக்கு இருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்களோடு நெருங்கிய தொடர்பில்...

வுகானில் மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, வுகான் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் ஜாங்னான் மருத்துவமனை ஆய்வு நடத்தி உள்ளது. இதன் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதில், ‘கொரோனாவில் இருந்து மீண்ட...

கொரோனா கதியில் இருந்து மீண்டதா? இன்னமும் திணறுகிறது அமெரிக்கா: டிரம்ப் மீது மக்கள் கடுப்பு

நியூயார்க்: மற்ற நாடுகளை விட அமெரிக்கா கொரோனா ஒழிப்பில் வெற்றி கண்டு கொண்டிருக்கிறது என்று அதிபர் டிரம்ப் என்னதான் சொன்னாலும், உண்மையில் நிலைமை வேறாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் கொரோனா பரவியுள்ளது...