முகப்பு சினிமா `குடும்பக் கஷ்டத்துக்காக வேலைக்கு வந்தோம்!’- மகாராஷ்டிராவில் தவிக்கும் தமிழக இளைஞர்கள்

`குடும்பக் கஷ்டத்துக்காக வேலைக்கு வந்தோம்!’- மகாராஷ்டிராவில் தவிக்கும் தமிழக இளைஞர்கள்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 24-ம் தேதி மாலை 6 மணியிலிருந்து தமிழகத்தில் 9 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அன்று இரவு 8 மணி அளவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டார். இதனால் ஆங்காங்கே உள்ள பலர் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வருகிறார்கள். குஜராத்திலிருந்து ராஜஸ்தானுக்கு சிலர் நடந்து செல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Also Read: `வேலை இல்லை; சாப்பாடு இல்லாம எப்படி வாழ முடியும்?!’- கேரளாவில் தவிக்கும் கும்பகோணம் இளைஞர்கள்

இதேபோல் கேரள மாநிலம் கண்ணூர், கோழிக்கோடு பகுதிகளில் கட்டட வேலைக்குச் சென்ற தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த 36 பேர் கடந்த சில தினங்களாக சாப்பிட வழியின்றி தங்குவதற்கு இடம் இல்லாமல் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம், ராய்காட் மாவட்ட, கொப்பாலி எனும் பகுதியில் திருச்சி, விருதுநகர், கரூர், திருப்பூர் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 75 பேர் அங்குள்ள நிறுவனங்களில் விற்பனைப் பிரதிநிதிகளாக பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் மத்திய அரசின் திடீர் 21நாள்கள் ஊரடங்கு அறிவிப்பால் இவர்கள் அனைவரும் தமிழகம் திரும்ப முடியாமல் தவித்து வருவதாகக் கதறுகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி -மோடி

நம்மிடம் பேசிய திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு பெருமாபட்டி கிராமத்தைச் சேர்ந்த வசந்த்குமார், “நாங்கள் வாழும் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கிறார்கள். தற்போது, மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகம் இருப்பதால் இங்கு தங்கியிருக்கவே பயமாக உள்ளது.

இரண்டு நாள்களாகச் சாப்பிட ஏதும் கிடைக்கவில்லை. வெளியே சென்றால் போலீஸார் கைது செய்கிறார்கள். அதனால், வெளியே போய்வரவும் அச்சமாக உள்ளது. எங்களின் பெற்றோருக்கு நிலைமையைச் சொன்னதால் அவர்களும் அழுதுகொண்டு கிடக்கிறார்கள். பக்கத்தில் இருக்கிறவர்கள் எங்களை வெளியில் அனுப்பப் பயப்படுகிறார்கள்.

Also Read: `தனி விமானத்தில் அனுப்பப்பட்ட 372 மலேசியப் பயணிகள்!’ – திருச்சியில் முடிவுக்குவந்த 7 நாள் போராட்டம்

எங்கள் வீட்டில் நாங்கள் நான்கு பேர். சமீபத்தில் எனது அக்காவுக்குத் திருமணம் நடைபெற்றது. அதனால் ஏற்பட்ட கடனை அடைக்கவும், குடும்ப வறுமையின் காரணமாகவும் 12-ம் வகுப்பு முடித்த நான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கு வேலைக்கு வந்தேன்.12,000 ரூபாய் சம்பளம். நானும் எனது நண்பனும் இங்கே தங்கி வேலை பார்க்கிறோம். வாங்கிய சம்பளத்தை ஊருக்கு அனுப்பினேன். இந்த நிலையில் திடீரென ஊரடங்கு அறிவிப்பு வந்தது. இதனால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. நாங்கள் தமிழகம் வர முதல்வர் எடப்பாடி பழனிசாமி அய்யா உதவணும்” என்றார்.

Must Read

யாழ்.வட்டுக்கோட்டையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் செய்த தவறால் ஒருவர் அநியாய சாவு; மறைக்கப்பட்ட பின்னணி!

யாழ்.வட்டுக்கோட்டையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் செய்த தவறால் ஒருவர் அநியாய சாவு; மறைக்கப்பட்ட பின்னணி!  

அமெரிக்காவில் இருந்து பிரத்தியேக மருந்து ஒன்றை அனுப்பினார் ரம்: பொறிஸ் ஜோன்சன் மருத்துவர்

தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில், செயற்கை சுவாத்தோடு இருக்கும் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு அமெரிக்காவில் இருந்து பிரத்தியேக மருந்து ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. அமெரிக்க அதிபர் டொனால் ரம்...

நிபுணர்களின் கருத்துப்படி ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு ? – அரசு வட்டாரத் தகவல்

ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கபட உறுதியான வாய்ப்புகள் இருப்பதாக அரசுத் தரப்புத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா ஒழிப்பு நடவடிக்கையாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை நாடு...

ஊரடங்கில் பள்ளி மாணவி கர்ப்பம்…! காட்டிக்கொடுத்த தங்கை கொலை…

கொசவம்பட்டியைச் சேர்ந்த சந்திரன் - வத்சலா தம்பதிக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருந்தனர். முதல் மகள் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த நிலையில் இரண்டாவது மகள் அப்பகுதியில் உள்ள...

கொரோனாவுக்கு எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: கொரனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி பயன்படுத்திக் கொள்ளப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள்...