முகப்பு விளையாட்டு கேன்சரால் பாதிக்கப்பட்ட டிங்கோ கொரோனாவில் இருந்து மீண்டார்

கேன்சரால் பாதிக்கப்பட்ட டிங்கோ கொரோனாவில் இருந்து மீண்டார்

புதுடெல்லி: ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங்  புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி அதிலிருந்தும் மீண்டுள்ளது,  புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரைச் சேர்ந்தவர்  டிங்கோ சிங் (41).   ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் ஆதரவற்றோர் விடுதியில் வளர்ந்தவர். இந்திய கப்பற்படையில் பணியாற்றிய இவர் ஒரு தொழில்முறை குத்துச் சண்டை வீரர் ஆவார். தேசிய, சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை அள்ளியுள்ளார்.  1998ல் தாய்லாந்தில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியின்  54 கிலோ எடை  பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். விளையாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு  பயிற்சியாளராக தனது பணியை தொடர்ந்தார். இவரது சேவையை பாராட்டி இந்திய அரசு 1998ம் ஆண்டு அர்ஜூனா விருதும்,  2013ம் ஆண்டு  பத்ம விருதும் வழங்கியது. 2017ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மே மாத இறுதியில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும், உறுதியான மனம் கொண்ட  டிங்கோ சிங் கடந்த ஒரு மாதமாக போராடி கொரோனாவையும் வென்றுள்ளார். இடையில் ஏற்பட்ட மஞ்சள் காமாலையும் கட்டுக்குள் வந்துள்ளதாம்.மீண்டும் பரிசோதித்ததில் டிங்கோ சிங்குக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. அதனை அவர் மனைவி பாபிதேவி ,  மணிப்பூர் முதலமைச்சர்  பிரென் சிங்  ஆகியோர் உறுதிப் படுத்தினர். இதுகுறித்து  டிங்கோ சிங், ‘மருத்துவமனையில் இருந்த அந்த ஒரு மாதமும் கொடுமையானது. எனக்கு பிறகு தொற்று ஏற்பட்டு வந்த பலர் எனக்கு முன்பே குணமாகி சென்றனர். மருத்துவமனையில் எனக்கு சோதனை செய்த 5 முறையும் கொரோனா இருப்பதைதான் காட்டியது. கடைசியில் தொற்று இல்லை என்று வந்ததும் நிம்மதியானது. எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் தீராது’ என்று கூறியுள்ளார்.

Must Read

ஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்டாட்டங்களில் கொரோனா தொற்று!

ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்று பெரிய கொண்டாட்டங்களில் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 20 அகவை இளைஞன் உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதேவேளை தொற்று பலருக்கு இருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்களோடு நெருங்கிய தொடர்பில்...

வுகானில் மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, வுகான் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் ஜாங்னான் மருத்துவமனை ஆய்வு நடத்தி உள்ளது. இதன் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதில், ‘கொரோனாவில் இருந்து மீண்ட...

கொரோனா கதியில் இருந்து மீண்டதா? இன்னமும் திணறுகிறது அமெரிக்கா: டிரம்ப் மீது மக்கள் கடுப்பு

நியூயார்க்: மற்ற நாடுகளை விட அமெரிக்கா கொரோனா ஒழிப்பில் வெற்றி கண்டு கொண்டிருக்கிறது என்று அதிபர் டிரம்ப் என்னதான் சொன்னாலும், உண்மையில் நிலைமை வேறாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் கொரோனா பரவியுள்ளது...

BREAKING NEWS சற்று முன் ஸ்பெயின் லாக் டவுன் அறிவித்தது: ஐரோப்பா ஆட்டம் கண்டது: ஜேர்மனி பிரான்ஸ் கிரீஸ் எல்லாம் கொரோனா

ஐரோப்பிய நாடுகள் மீண்டும் ஆட்டம் கண்டுள்ளது. சற்று முன்னர் ஸ்பெயின் நாட்டில் பல இடங்களில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போக ஜேர்மனில் பல நகரங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு...

கொரோனாவிலிருந்து மீண்டுவருபவர்கள் மனநல கோளாறால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து மீண்டுவருபவர்கள் மனநல கோளாறால் பாதிக்கப்படுகின்றனர் என புதிய ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது. இது வைரஸின் நீடித்த உளவியல் விளைவுகள் குறித்து தீவிர கவலைகளை எழுப்புகிறது என்று புதிய...