முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் கேரளாவில் 4 மாத குழந்தையின் உயிர் பிரிந்தது..! இதய கோளாறு, கொரோனா...

கேரளாவில் 4 மாத குழந்தையின் உயிர் பிரிந்தது..! இதய கோளாறு, கொரோனா…

கேரளா மாநிலம் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியின் 4 மாத குழந்தை உடல்நிலை கோளாறால் தனியார் தாய்சேய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அதன் பின்னர் குழந்தைக்கு பிறக்கும்போதே இதயம், நுரையீரல் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்ததது.

மேலும் குழந்தைக்கு அளித்த சிகிச்சையில் எந்த பலனும் கொடுக்காத நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. குழந்தைக்கு கொரோனா இருப்பது உறுதியானதும் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

அங்கு சிகிச்சை தரப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலாஜா, ” குழந்தைக்கு கடுமையான இதய கோளாறு இருந்தது.

நுரையீரல் செயல்பாடும் குறைவாக இருந்ததால் சிகிச்சைக்கு குழந்தையின் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. குழந்தையின் உறவினர் ஒருவர் ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர். மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி குழந்தையின் உடலை பாதுகாப்பாக அடக்கம் செய்யப்படும்” என தெரிவித்தார்.

கேரளாவின் முதல் கொரோனா மரணம் மார்ச் 28 அன்று எர்ணாகுளம் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. 69 வயதான அவர் துபாயில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் கொரோனா உறுதி செய்யப்பட்டு கலாமாசேரி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தபோது இறந்தார்.

Must Read

அனுராத புரத்தில் சில இடங்கள் லாக் டவுன் என அறிவிப்பு- மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639...

முடக்கப்பட்டது பல்கலைக்கழகம் கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா என அச்சம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில்...

லண்டனில் 24 ம் திகதியோடு அமுலுக்கு வரும் கட்டாய முகக் கவசம்- மீறினால் FINE

பிரித்தானியாவில் இம்மாதம்(ஜூலை) 24 தொடக்கம் கட்டாய நடை முறை ஒன்று அமுலுக்கு வருகிறது. சூப்பர் மார்கெட் தொடக்கம், சிறு கடைகள், உணவங்கள் என்று மக்கள் கூடும் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் கட்டாய...

நச்சு, நச்சுனு கிஸ் அடிக்க மட்டும் தான் பீட்டர் பால் கேமராவுக்கு முன் வருவாரா?: தயாரிப்பாளர் ரவீந்தர்

வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை காதலித்து கடந்த மாதம் 27ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்த கையோடு பீட்டர் பால் மீது அவரின் முதல் மனைவி எலிசபெத்...