முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் கொரோனாவால் கொல்லப்பட்ட மனிதநேயம்!

கொரோனாவால் கொல்லப்பட்ட மனிதநேயம்!

உலகில் பல நாடுகளை தன்னுடைய கோரப்பிடியில் அச்சத்தில் வைத்திருக்கும் கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமே அல்லாமல், மனிதர்களிடமிருக்கும் மனித நேயத்தையும் படுகொலை செய்துள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டான சம்பவம் மாநிலத்தில் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

காமாரெட்டி நகரில் இருக்கும் ரயில் நிலையத்தில் கூலி தொழிலாளியாக வேலைசெய்து தனியாக வசித்து வந்தவர் வெங்கடராஜு. ஊரடங்கு உத்தரவு காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கூலி கிடைக்காமல் திண்டாடிய வெங்கடராஜூ, அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கொடுக்கும் உணவை வாங்கி சாப்பிட்டு அங்கேயே இருந்தார். வயது மூப்பு, போதிய உணவின்மை ஆகிய காரணங்களால், வழக்கமாக சாலையோரத்தில் படுத்து தூங்கும் வெங்கட ராஜு அதே சாலையோரத்தில் மரணமடைந்தார்.

சாலையோரத்தில் வெங்கட ராஜூ மரணமடைந்து கிடைப்பது பற்றிய தகவல் அறிந்த காமாரெட்டி போலீசார், அங்கு சென்று அவருடைய உடலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆம்புலன்ஸ் கிடைக்காத காரணத்தால் வெங்கட ராஜூ உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இயலாமல் போனது. தனியார் வாகனம் மூலம் வெங்கட ராஜூ உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீசார் எடுத்த முயற்சிக்கும் கொரோனா அச்சம் காரணமாக பலன் கிடைக்கவில்லை.

எனவே வேறு வழி இல்லாத நிலையில், ரயில்களில் மரணம் அடையும் ஆதரவற்ற நபர்களின் உடல்களை எடுத்துச் சென்று அடக்கம் செய்யும் ராஜூ என்பவரின் உதவியை போலீசார் நாடினர். போலீசாருக்கு உதவி செய்யும் வகையில் அங்கு வந்து சேர்ந்த ராஜு, வெங்கட ராஜூ உடலை துணியில் சுற்றி சைக்கிளில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

கொரோனா வைரஸ் மனிதர்களை மரணிக்கச் செய்யும் நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக மனிதர்களிடையே ஏற்பட்டுள்ள அச்சம் மனிதநேயத்தையும் மரணிக்கச் செய்துவிட்டது என்பதற்கு இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Must Read

நாளை ராமர் கோவில் பூமி பூஜை – பிரதமர் மோடி பயணத்தின் முழு விவரம்!

முதலில் ஹனுமன் கார்ஹியில் மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி பின்னர் அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்கிறார்.

கணவன் கண் முன்னே கூட்டு பாலியல், ஆதரவு அளித்த போலீஸ்!

பாலியல் குற்றவாளிகளுக்கு போலீஸ் ஆதரவு அளித்து புகாரைப் பெற மறுத்து வந்த நிலையில், மலைவாழ் மக்கள் கூட்டாக முன்னெடுத்த போராட்டம் குற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது...

“உடம்பெல்லாம் வலிக்குதுப்பான்னு அவன் அழறப்போ பயமா இருக்கும்”-  கண்ணீரில் மிதக்கும் சென்னை குடும்பம்!

மருந்தில்லா நோயும் வறுமையும் ஒரு வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தால்..? பூந்தமல்லியை அடுத்த செந்நீர் குப்பத்தைச் சேர்ந்த ரவீந்திரன் குடும்பம்போலதான் இருக்கும். எதிர் எதிரே இரண்டு பைக்குகள் வந்துவிட்டால், ஒரு வண்டி நின்றுதான் போக...

ஆபாசம், அச்சுறுத்தல், கொலை மிரட்டல்… பெண் ஊடகவியலாளர்களை குறிவைக்கும் கும்பல்!

தமிழ்நாட்டில் ஊடகத்தினர் மீதான தாக்குதலில் `சீஸன் டூ' ஆரம்பித்திருக்கிறது. ஊடகத் துறையில் இயங்கிவரும் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து சமீபகாலமாக அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. சமூக ஊடகங்களில் இதுதொடர்பான குற்றச்சாட்டுகள், விவாதங்கள் என இரு...

TikTok-ஐ வாங்க மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தை… வாங்கினால் இந்தியாவில் என்ன செய்யலாம்? #VikatanPoll

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவைப் போலவே டிக்டாக் app-ஐ தடைசெய்யவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதே சமயம், அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட், டிக்டாக் app-ஐ சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கப்...