முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் கொரோனாவால் மத்திய கிழக்கு நாடுகளில் வறுமையின் பிடியில் குழந்தைகள்! - யுனிசெப் அதிர்ச்சி

கொரோனாவால் மத்திய கிழக்கு நாடுகளில் வறுமையின் பிடியில் குழந்தைகள்! – யுனிசெப் அதிர்ச்சி

ஐநா குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் ஏற்பட்ட வேலையிழப்பின் காரணமாகப் பலரும் வறுமையில் தவிக்கின்றனர். இதனால் அங்கு மில்லியன் கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த நாடுகளில் கடந்த ஆண்டு மட்டும் வணிகங்கள் தடைபட்டது, சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டது மற்றும் தற்போது கொரோனாவால் ஏற்பட்ட தொழில் முடக்கம் காரணமாகப் பாதிக்கப்பட்ட 8 மில்லியன் மக்களில் குழந்தைகள் கிட்டத்தட்ட பாதி என்று அதிர்ச்சி கணக்கு சொல்கிறது யுனிசெஃப்.

ஆட்டோமொபைல் தொழிற்சாலை #lockdown

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வட ஆப்பிரிக்காவின் யுனிசெப் இயக்குநர் டெட் சாய்பன் திங்களன்று அம்மானிலிருந்து வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்,

“இப்போது நிலவும் அசாதாரண சூழலில் தொற்றுநோய் குழந்தைகளை நேரடியாகப் பாதிக்கிறது. குறிப்பாக, தினக்கூலி பெறும் தொழிலாளர்கள் பலரும் வேலைகள் இழந்துள்ளனர். இந்தக் குடும்பங்கள் ஏற்கெனவே பசியிலும் வறுமையிலும் உழல்கிறவர்கள். தற்போது ஏற்பட்டுள்ள இந்தக் கடுமையான சூழல் காரணமாக அந்தக் குடும்பங்கள் தங்கள் தினசரி வாழ்வில் உணவைக் கொண்டுவரப் போராடுகிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Representational Image

மேலும், “கொரோனாவால் ஏற்பட்ட வேலையிழப்பு இந்த மக்களைக் கொடுமையான வாழ்நிலைக்குத் தள்ளியுள்ளது எனச் சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன. சிரியா, ஏமன், சூடான் பாலஸ்தீன பிரதேசங்கள், ஈராக் மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட உள்நாட்டு மோதல்களால் அகதிகளாகப் புலம்பெயர்ந்த மக்கள் உட்பட 25 மில்லியன் குழந்தைகள் தங்களுக்கான அடிப்படைத் தேவைகளுக்காகக் காத்துக்கிடக்கின்றனர்” என யுனிசெப் நிறுவனம் கூறுகிறது.

விலைவாசி உயர்வு மற்றும் உள்கட்டமைப்பு சேதமடைந்த நாடுகளில் மில்லியன் கணக்கானவர்களுக்கு ஏற்கெனவே சுகாதாரப் பாதுகாப்பு, உணவு, நீர் மற்றும் மின்சாரம் இல்லை என்று ஐ.நா மற்றும் மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

கொரோனா சிகிச்சை

“போதிய அடிப்படை சேவைகள், பிராந்தியத்தின் பல பகுதிகளில் பல ஆண்டுகளாக ஏற்பட்ட மோதல்கள், வறுமை, பற்றாக்குறை மற்றும் இப்போது COVID-19 முதலிய காரணத்தால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்களால் கடினமான வாழ்க்கையைத் தாங்கமுடியாது” என்று சாய்பன் கவலை தெரிவித்துள்ளார்.

Must Read

யாழ் விடத்தற்பளை முகாமில் 51 கடற்படையினருக்கு கொரோனா: யாழ் மக்கள் அச்சம்

யாழ். கொடிகாமம் விடத்தற்பளை முகாமில் தனிமைப் படுத்தப்பட்ட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த 51 பேரும் கடற்படை சிப்பாய்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடத்தற்பளை தனிமைப்படுத்தல் முகாமில் 260 கடற்படை சிப்பாய்கள்...

உள்பக்கமாக பூட்டி பதுங்கிய அமெரிக்க பொலிசார்: வெடித்தது பெரும் கலவரம்

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் வெளியாகிய வீடியோ, இன்று அமெரிக்காவில் பெரும் கலவரத்தை உண்டாகியுள்ளது. கறுப்பின நபர் ஒருவரை வெள்ளையின பொலிசார் கைது என்ற போர்வையில் காலல் நசுக்கி கொலை செய்து இருந்த...

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் திமுகவினரின் மதுபான ஆலைகளும் மூடப்படும்: டி.கே.எஸ். சாமர்த்திய பதில்!!

எம்.பி.யான டி.ஆர்.பாலு தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் குழு, தமிழக தலைமைச் செயலாளரை சமீபத்தில் சந்தித்தனர். திமுக சார்பில் தொடங்கப்பட்டுள்ள "ஒன்றிணைவோம் வா" திட்டத்தின்கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் ஒரு லட்சம்...

ப்ளஸ்2 மாணவர்களுக்கு போனஸ் மார்க், தேர்வுத்துறை உத்தரவு!

தமிழ்நாட்டில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளில் ஏற்பட்ட ஒரு பிழைக் காரணமாகக் குறிப்பிட்ட மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பன்னிரெண்டாம் பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம்...

திருப்பதி கோயில் சொத்துகள் விற்பனைக்கு அல்ல – தேவஸ்தான நிர்வாகம் முடிவு

திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக அளித்த 50 சொத்துக்களை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்திருந்தது. தேவஸ்தான நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து...