முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்: பிரதமர் மோடி ரமலான் ட்வீட்!

கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்: பிரதமர் மோடி ரமலான் ட்வீட்!

டெல்லி: ரமலான் பண்டிகையையொட்டி கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றியடைவோம் என தெரிவித்துள்ளார்.

சமூக பரவலை கட்டுக்குள் கொண்டு வர வருகிற மே மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ரமலான் மாதத்தின் ஒருமாத காலம் நோன்பு, பிறை தெரிந்ததால் நாளை முதல் இந்தியாவில் தொடங்கப்படவுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தால் மசூதிகளில் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்படுவதாகவும், இஸ்லாமியர்கள் வீட்டிலிருந்தே தனிமனித இடைவெளியுடன் தொழுகை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோன்பு முடிக்க மாலையில் ஒன்று கூடுவதையும், இப்தார் நிகழ்ச்சிகளையும் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரமலான் பண்டிகையையொட்டி கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றியடைவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ரம்ஜான் வாழ்த்துகள்! ஒவ்வொருவரும் பாதுகாப்புடனும், வளமுடனும் இருப்பதற்காக நான் பிராத்திக்கிறேன். இந்த புனிதமான மாதம் நமக்கு கருணை, இரக்கம் மனிதநேயத்தை தரட்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம். ஆரோக்கியமான பூமியை உருவாக்குவோம்” என பதிவிட்டுள்ளார்.

Must Read

ஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்டாட்டங்களில் கொரோனா தொற்று!

ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்று பெரிய கொண்டாட்டங்களில் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 20 அகவை இளைஞன் உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதேவேளை தொற்று பலருக்கு இருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்களோடு நெருங்கிய தொடர்பில்...

வுகானில் மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, வுகான் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் ஜாங்னான் மருத்துவமனை ஆய்வு நடத்தி உள்ளது. இதன் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதில், ‘கொரோனாவில் இருந்து மீண்ட...

கொரோனா கதியில் இருந்து மீண்டதா? இன்னமும் திணறுகிறது அமெரிக்கா: டிரம்ப் மீது மக்கள் கடுப்பு

நியூயார்க்: மற்ற நாடுகளை விட அமெரிக்கா கொரோனா ஒழிப்பில் வெற்றி கண்டு கொண்டிருக்கிறது என்று அதிபர் டிரம்ப் என்னதான் சொன்னாலும், உண்மையில் நிலைமை வேறாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் கொரோனா பரவியுள்ளது...

BREAKING NEWS சற்று முன் ஸ்பெயின் லாக் டவுன் அறிவித்தது: ஐரோப்பா ஆட்டம் கண்டது: ஜேர்மனி பிரான்ஸ் கிரீஸ் எல்லாம் கொரோனா

ஐரோப்பிய நாடுகள் மீண்டும் ஆட்டம் கண்டுள்ளது. சற்று முன்னர் ஸ்பெயின் நாட்டில் பல இடங்களில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போக ஜேர்மனில் பல நகரங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு...

கொரோனாவிலிருந்து மீண்டுவருபவர்கள் மனநல கோளாறால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து மீண்டுவருபவர்கள் மனநல கோளாறால் பாதிக்கப்படுகின்றனர் என புதிய ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது. இது வைரஸின் நீடித்த உளவியல் விளைவுகள் குறித்து தீவிர கவலைகளை எழுப்புகிறது என்று புதிய...