முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் கொரோனாவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையால் பலன் இல்லை

கொரோனாவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையால் பலன் இல்லை

அமெரிக்காவில் கொரோனாவுக்கு மாத்திரை வழங்கப்பட்ட நோயாளிகள் அதிக அளவில் உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவுக்கு 45 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். 8 லட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 83 ஆயிரம் பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

பல கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்ற மாத்திரைதான் சிகிச்சையின்போது கொடுக்கப்படுகிறது. இந்நிலையில்,
என்ற இணையதளத்தில் வந்துள்ள ஆய்வுக் கட்டுரையில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை அளிக்கப்பட்ட நோயாளிகளின் இறப்பு அதிகமாகியுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 368 கொரோனா நோயாளிகளில் 97 பேருக்கு கொடுக்கப்பட்டது. இவர்களில் இறப்பு விகிதம் 27.8 சதவீதம். ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கொடுக்கப்படாத 158 பேரின் இறப்பு விகிதம் 11.4 சதவீதம் என அந்தக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

குளோரோகுயின் அல்லது மாத்திரையை அளிக்கும்போது நோயாளியை மருத்துவர்கள் உன்னிப்பாகக் கவனித்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையுடன் அசித்ரோமைசின் மாத்திரையும் சேர்த்து சில நோயாளிகளுக்குக் கொடுக்கப்படுகிறது. இதனால், நச்சுத்தன்மை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அந்தக் கட்டுரையில் எச்சரிக்கப்படுகிறது.

ஏற்கெனவே பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆய்விலும் கொரோனாவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொடுப்பதால் பிரயோஜனம் இல்லை என்று தெரியவந்திருக்கிறது.

Must Read

ராமர் கோயில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு இன்று கொரோனா!

பாபர் மசுதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட புராணங்களை சான்றாக வைத்து உத்தரவு பிறபித்தவர் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கொகாய்...

கோவை: கொட்டும் மழை; உடையும் தடுப்பணை கான்கிரீட்; பறக்கும் கழிவு நுரை! மக்கள் வேதனை

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை, கடந்த இரண்டாண்டுகள் தென்மேற்கு பருவமழை சிறப்பாகவே இருந்தது. ஆனால், நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை பெரிய அளவுக்கு கைக்கொடுக்காமல் இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக...

`ஏழாவது இடத்த நான் எதிர்பார்க்கல!’ – ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த கணேஷ்குமார்

ஐ.ஏ.எஸ் தேர்வில் ஏழாம் இடத்தை பிடித்துள்ளார் நாகர்கோவில் புன்னை நகரில் வசிக்கும் கணேஷ்குமார். முதல் முறை தேர்வு எழுதி தோல்வியடைந்த கணேஷ் குமார், இரண்டாவது முறை தீவிரமாகப் படித்துத் தேர்வு எழுதி, இந்திய...

#Ayodhya : `கோயிலுக்குள் அனுமதி மறுப்பு; சாலைகள் மூடல்’ – உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி #LiveUpdates

அயோத்தி புறப்பட்டார் பிரதமர் மோடி!அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் மோடி டெல்லியிலிருந்து தனி விமானத்தில் அயோத்தி புறப்பட்டார். 10.30 மணிக்கு லக்னோ வந்து அங்கிருந்து அயோத்தி வரவுள்ளார்.உச்சக்கட்ட...

இலங்கையில் எம்.பி-க்கள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்?

கொரோனாவால் இரண்டு முறை தள்ளிவைக்கப்பட இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஒட்டுமொத்தமாக 2.17 கோடி மக்கள் தொகையைக் கொண்ட அந்த நாட்டில்,1.62 கோடிப்பேர் வாக்களிக்கத் தகுதியடையவர்களாக இருக்கிறார்கள். அதிகமான வாக்காளர்களை,...