முகப்பு சினிமா கொரோனா: அதிகக் கட்டணம்; மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை! - அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா: அதிகக் கட்டணம்; மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை! – அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் 25 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறுநீரக சிறப்புச் சிகிச்சை மையம், 300 படுக்கைகள் கொண்ட கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்றப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. இதைத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மாவட்டத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களையும் பார்வையிட்டார்.

corona

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “அரசின் உத்தரவை மீறி அதிக கட்டணம் வசூலித்த சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று சீல் வைக்கப்பட்டுள்ளது. பல தனியார் மருத்துவமனைகள் அரசு விதிகளுக்கு உட்பட்டு கட்டண வசூல் செய்கின்றனர். ஒரு சில மருத்துவமனைகள் மட்டும் இதுபோன்று அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார் எழுந்தது. வரும் காலங்களில் அரசின் உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Also Read: திருச்சி: அடுத்தடுத்த புகார்கள்; திடீர் ஆய்வு! – விதிகளை மீறிய அமைச்சர் விஜயபாஸ்கர்?

தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. உலக சுகாதார மையம் மற்றும் ஐ.சி.எம்.ஆர் விதிகளுக்கு உட்பட்டுத்தான் தமிழக அரசு ஒவ்வொரு நடவடிக்கையும் எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதுமே உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் சிறப்பான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் விஜயபாஸ்கர்

மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. வளர்ந்த நாடுகளே படுக்கை வசதிகளைக் கொடுப்பதற்குத் திணறி வரும் நிலையில், தமிழகத்தில் கூடுதல் படுக்கை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரையிலும் 26,58,150 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 1,80,000 பேர் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். கொரோனாவுக்காக அனைத்து மாவட்டங்களிலும், சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட உள்ளது. ஹோமியோபதி, சித்தா உட்பட 18 மையங்களில் ஏற்கெனவே 75,000 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்’’ என்றார்.

Must Read

நாளை ராமர் கோவில் பூமி பூஜை – பிரதமர் மோடி பயணத்தின் முழு விவரம்!

முதலில் ஹனுமன் கார்ஹியில் மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி பின்னர் அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்கிறார்.

கணவன் கண் முன்னே கூட்டு பாலியல், ஆதரவு அளித்த போலீஸ்!

பாலியல் குற்றவாளிகளுக்கு போலீஸ் ஆதரவு அளித்து புகாரைப் பெற மறுத்து வந்த நிலையில், மலைவாழ் மக்கள் கூட்டாக முன்னெடுத்த போராட்டம் குற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது...

“உடம்பெல்லாம் வலிக்குதுப்பான்னு அவன் அழறப்போ பயமா இருக்கும்”-  கண்ணீரில் மிதக்கும் சென்னை குடும்பம்!

மருந்தில்லா நோயும் வறுமையும் ஒரு வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தால்..? பூந்தமல்லியை அடுத்த செந்நீர் குப்பத்தைச் சேர்ந்த ரவீந்திரன் குடும்பம்போலதான் இருக்கும். எதிர் எதிரே இரண்டு பைக்குகள் வந்துவிட்டால், ஒரு வண்டி நின்றுதான் போக...

ஆபாசம், அச்சுறுத்தல், கொலை மிரட்டல்… பெண் ஊடகவியலாளர்களை குறிவைக்கும் கும்பல்!

தமிழ்நாட்டில் ஊடகத்தினர் மீதான தாக்குதலில் `சீஸன் டூ' ஆரம்பித்திருக்கிறது. ஊடகத் துறையில் இயங்கிவரும் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து சமீபகாலமாக அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. சமூக ஊடகங்களில் இதுதொடர்பான குற்றச்சாட்டுகள், விவாதங்கள் என இரு...

TikTok-ஐ வாங்க மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தை… வாங்கினால் இந்தியாவில் என்ன செய்யலாம்? #VikatanPoll

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவைப் போலவே டிக்டாக் app-ஐ தடைசெய்யவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதே சமயம், அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட், டிக்டாக் app-ஐ சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கப்...