முகப்பு சினிமா கொரோனா: `ஒரே குழியில் வீசப்பட்ட நோயாளியின் உடல்கள்!’ - கர்நாடகா அதிர்ச்சி

கொரோனா: `ஒரே குழியில் வீசப்பட்ட நோயாளியின் உடல்கள்!’ – கர்நாடகா அதிர்ச்சி

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிப்படைப்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று மட்டும் 507 பேர் இந்த வைரஸ் தொற்றால் இறந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,893 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை சுகாதாரத்துறை ஊழியர்கள் அலட்சியமாகக் கையாள்வது தொடர்பாகப் பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அவ்வகையில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து இதுதொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் உள்ள பெல்லாரி எனும் மாவட்டத்தின் ஒரு பகுதியில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களாகக் கூறப்படும் நோயாளிகளின் உடலை அதிகாரிகள் அருகில் இருந்த வண்டியிலிருந்து எடுத்து வந்து பெரிய குழி ஒன்றுக்குள் அலட்சியமாக வீசி செல்லும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. கறுப்புநிற பை ஒன்றில் அந்த உடல்கள் இருப்பதையும் ஒரேகுழியில் அனைத்து உடல்களும் தள்ளப்படுவதையும் ஊழியர்கள் பாதுகாப்பு உடைகள் அணிந்திருப்பதையும் அந்த வீடியோ காட்டுகிறது. சுமார் எட்டு உடல்கள் ஒரே குழியில் தள்ளப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read: `கொரோனாவால் மரணம்; ஜேசிபி-யில் எடுத்துச் செல்லப்பட்ட உடல்!’ -ஆந்திராவில் சர்ச்சை

இதுதொடர்பாக அம்மாவட்டத்தின் துணை ஆணையர் எஸ்.எஸ்.நகுல் பேசும்போது, “இந்த வீடியோ தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம். அந்த வீடியோவில் உடல்கள் சரியாக பேக் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதை நாம் மனிதாபிமான அடிப்படையில் பார்க்க வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் செயல்படவில்லை. தனித்தனியாக உடல்களை அடக்கம் செய்திருக்க வேண்டும். உடல்களை மரியாதையுடன் கையாள்வது தொடர்பான விழிப்புணர்வுகளை உருவாக்க வேண்டும். இதுதொடர்பாக விசாரணைகளை நடத்தி நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார். உடல்களை அவமதிக்கும் வகையில் கையாண்ட ஊழியர்களை மாற்றி புதிதாக ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் இந்தச் சம்பவத்தால் காயமடைந்த இறந்தவர்களின் உறவினர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா

அம்மாநில முதல்வர் எடியூரப்பா, ஊழியர்கள் நடந்துகொண்ட விதம், “மனிதாபிமானமற்றது மற்றும் வேதனையானது” என்று கூறியுள்ளார். வைரஸால் பாதிப்படைந்து உயிரிழந்தவர்களின் உடல்களை கையாள்வது மற்றும் இறுதிச் சடங்கு செய்வது என அனைத்திலும் ஊழியர்கள் எச்சரிக்கையாகவும் மனிதநேயத்துடனும் இருக்க வேண்டும் எனவும் முதல்வர் ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அம்மாநில ஆளும் கட்சியான பாஜக-வை எதிர்கட்சிகள் இந்த வீடியோ தொடர்பாகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். “ஜாக்கிரதையாக இருங்கள்! கொரோனா வைரஸால் பாதிப்படைந்து நீங்களோ, உங்கள் குடும்ப உறுப்பினர்களோ தற்செயலாக இறந்துவிட்டால் கர்நாடகாவில் உள்ள பா.ஜ.க அரசு, உங்களது உடலை பலரது உடல்களுடனும் ஒரே குழிக்குள் எறிந்துவிடும்” என்று விமர்சிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமலு இதுதொடர்பாகப் பேசும்போது, “இறுதிச் சடங்கு செய்வதில் அலட்சியமாகச் செயல்பட்ட ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா நோயாளிகளின் இறுதிச் சடங்குகளை நடத்தும்போது உரிய வழிமுறைகளை சுகாதாரத்துறை ஊழியர்கள் பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் திங்கள்கிழமை மட்டும் 12 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 246 ஆக உள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர்

கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் உடலைக் கையாள்வது தொடர்பாக மத்திய அரசு சில வழிமுறைகளைக் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. இறந்தவர்களின் உடல்களை பிளாஸ்டிக் பைகளில் வைத்து மூடி, வெளிப்பகுதியில் ஹைபோகுளோரைட் கரைசலை தெளிக்க வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளது. எனினும், பல மாநில அரசுகளிம் இதனை முறையாகக் கடைப்பிடிக்கவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. வைரஸால் பாதிப்படைந்து இறந்தவர்களின் உடலை அவர்களது குடும்பத்தினர்களிடம் அரசு ஒப்படைப்பதில்லை. அரசு ஊழியர்களே அவர்களுக்கு இறுதிச் சடங்கும் செய்யும் பணிகளில் ஈடுபடுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், உடல்களை ஊழியர்கள் கையாள்வது தொடர்பாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருவது பலரையும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் ஆளாக்கியுள்ளது.

Also Read: உ.பி அதிர்ச்சி: குழந்தையைத் தொட மறுத்த மருத்துவர்கள்! – உடலைக் கட்டியணைத்து அழுத தந்தை

Must Read

லன்டன் தோட்டங்களில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் தப்பி ஓட்டம்: மரக்கறிகளில் கொரோனாவா ?

  ஹாட்பட்ஷியர் என்று சொல்லப்படும் பெரும், மாநகரில் உள்ள காய்கறிப் பண்ணையில், 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 4 பேர் தப்பியோடியுள்ளதாக அறியப்படுகிறது. வட்பேட், உள்ளடங்கலாக பல நகரங்களை உள்ளடக்கிய மாநிலமே ஹாட்பட்ஷியர்...

Swapna-வை சுற்றும் மர்மங்கள்… பறிபோகும் Pinarayi Vijayan பதவி?| Kerala Gold Smuggling

01:15 gold smuggling scandal2:52 CM removes his principal secretary04:13 Who is Swapna?06:05 Questioning Pinarai Vijayan10:50 Swapna Audio?

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது? (Video)

தமிழ்த் தேசிய அரசியலில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது? என்பது தொடர்பில் விளக்குகிறார் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம். The post கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

`MASTER பிரமாண்டமா இருக்கு!’ – Review by Vijay Sethupathi | Lokesh Kanagraj | Anirudh

04:45 Master Trailer 05:43 Cinema Experience 08:40 Telugu Villain11:24 Allu Arjun Pushpa12:39 Muttiah Muralitharan Biopic13:34 Body Language15:28 Rajini & Chiranjeevi 17:50 Vimal Friendship19:15 Being...