முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் கொரோனா: காளஹஸ்தி மக்களுக்கு வந்த நிலைமை திருப்பதி வாசிகளுக்கு வந்துவிடக் கூடாது - போலீசார் கவலை

கொரோனா: காளஹஸ்தி மக்களுக்கு வந்த நிலைமை திருப்பதி வாசிகளுக்கு வந்துவிடக் கூடாது – போலீசார் கவலை

திருப்பதியில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் காளஹஸ்தியில் 41 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால் காளகஸ்தி நகரம் தற்போது முழு அளவில் ஆன லாக்டவுனில் உள்ளது.

இதனால் காளஹஸ்தியில் வசிக்கும் பொதுமக்கள் இன்னும் 21 நாட்கள் வீடுகளில் இருந்து வெளியில் வர இயலாது. எனவே காளகஸ்தியின் வசிக்கும் பொதுமக்களுக்கு வாலண்டியர்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அரசு விதித்த ஊரடங்கு உத்தரவை காளஹஸ்தியில் வசிக்கும் பொதுமக்கள் முழு அளவில் கடைப்பிடிக்காததே இந்த நிலைக்கு காரணமாக அமைந்துவிட்டது.

இதுபோன்ற நிலை திருப்பதிக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக நகர பொது மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு வாகன அணிவகுப்பை போலீசார் வெள்ளிக்கிழமை நடத்தியது.

இதுகுறித்து, எஸ்.பி.ரமேஷ் ரெட்டி கூறும்போது, “கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தவே போலீசார் இன்று திருப்பதியில் வாகன அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

Must Read

தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு!

தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் கடந்த 2019ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து, 2019ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி புதிய தலைமை செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி...

இங்கிலாந்து தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு: ஹோல்டர் கேப்டன்!

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு முதல் சர்வதேச டெஸ்ட் தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது. , மேற்கிந்திய அணிகள் பங்கேற்கும் இந்த டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் வரும் ஜூலை 8ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில்...

ஆன்லைன் வீடியோக்களை அதிகமாகப் பார்க்கும் இந்தியர்கள்!

இந்திய மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப நாளுக்கு போன்களின் எண்ணிக்கையும் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. குறைந்த விலைக்கு ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதாலும் குறைந்த கட்டணத்தில் டேட்டா சேவைகள் வழங்கப்படுவதாலும் ஸ்மார்ட்போன்களில் அதிக நேரத்தை...

குடும்ப அட்டைதாரர்களுக்கு 7500 ரூ: திருநாவுக்கரசு கோரிக்கை!

மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கட்சி சார்பாக கொரானா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு நலிவடைந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். தொடர்ந்து...

விரைவில் சர்வதேச விமான போக்குவரத்து? வெளிநாட்டவர்களுக்கு மத்திய அரசு அனுமதி!

பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக முடக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து எப்போது தொடங்கப்படும் என்ற...