முகப்பு சினிமா கொரோனா நிதி கேட்டு மிரட்டும் அரசியல் தலைவர்கள்; அலறும் புதுவை தொழிலதிபர்கள்

கொரோனா நிதி கேட்டு மிரட்டும் அரசியல் தலைவர்கள்; அலறும் புதுவை தொழிலதிபர்கள்

ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று நோயை தடுப்பதற்காக உலக நாடுகள் போராடிக் கொண்டிருக்கின்றன. கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டிருக்கும் தினக்கூலி ஊழியர்களுக்கும், விளிம்புநிலை மக்களுக்கும் அரசு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. அதைத்தவிர தன்னார்வலர்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை விளம்பரமின்றி செய்து வருகின்றனர்.

கொரோனா

அதேபோல புதுச்சேரியிலும் தொகுதி வாரியாக பல அரசியல் தலைவர்கள் மக்களுக்கு இலவச அரிசி, மளிகைப்பொருள்கள் மற்றும் காய்கறிகளை விநியோகித்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அதேசமயம், “கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்துவிட்டு, அதில் விளம்பரம் வேறு தேடிக் கொள்கிறார்களே” என்று புலம்புகின்றனர் புதுவையைச் சேர்ந்த தொழிலதிபர்களும், வணிகர்களும்.

முத்தியால்பேட்டை தொகுதியைச் சேர்ந்த இளம் அரசியல் தலைவர் அவர். தொகுதியிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக அரிசி வழங்க முடிவெடுத்ததும், அந்த பகுதியிலிருக்கும் அரிசி மண்டி உரிமையாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து 11 டன் அரிசியை இலவசமாக வாங்கி, அதனை 5 கிலோவாக மக்களுக்கு கொடுத்திருக்கிறார். அதையடுத்து நேருவீதியில் கடைகள் வைத்திருக்கும் முத்தியால்பேட்டையைச் சேர்ந்த வணிகர்கள் 14 பேரின் வீடுகளுக்கே சென்று தலா ரூ.50,000 என்று 7,00,000 ரூபாயை கட்டாயமாக வசூலித்திருக்கிறார்.

அரிசி மூட்டைகள்

”வியாபாரம் இல்லாத நேரத்தில் எப்படி பணம் கொடுக்க முடியும்” என்று தயங்கிய வணிகர்களிடம் “கொரோனா முடியட்டும். டிரேடு லைசென்ஸ்லாம் இருக்குது பாத்து செய்ங்க” என்று மிரட்டும் தொனியில் இவர் கூறியதால் அலறியடித்துக்கொண்டு பணத்தை கொடுத்திருக்கிறார்கள்.

அரியாங்குப்பம் தொகுதியைச் சேர்ந்த ஆளும் கட்சி அரசியல் தலைவர் அவர். சிறு, குறு வியாபாரிகள், வணிகர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், வாகன ஷோரூம்கள் என அனைத்து தரப்பினரிடமும் பாகுபாடின்றி வசூல் வேட்டையை நடத்தி மக்களுக்கு தலா 5 கிலோ அரிசியை தனது போட்டோவுடன் பாக்கெட் செய்து கொடுத்து வருகிறார். இவருக்குச் சொந்தமான மதுக்கடையிலும், அதே பகுதியில் உள்ள வேறொரு மதுக்கடையில் கள்ளச்சந்தையில் மது விற்கப்பட்டது. அந்த மதுக்கடை உரிமையாளரிடம் 2,00,000 ரூபாய் கொரோனா நிதியாகக் கேட்டிருக்கிறார். அதற்கு, “50,000 ரூபாய் தருகிறேன்” என்று கூறியிருக்கிறார். அவ்வளவுதான் மறுநாளே கள்ளச்சந்தையில் மது விற்றதாக அந்தக் கடையின் உரிமை ரத்து செய்யப்பட்டுவிட்டது. ”

இப்படி அடித்துப் பிடுங்குவதற்காகத்தான் ஆட்சிக்கு வருகிறார்களா?” என்று தலையில் அடித்துக் கொண்டு சென்றிருக்கிறார் அந்த கடையின் உரிமையாளர்.

காய்கறிகள்

”தேர்தல், மாநாடு, பொதுக்கூட்டம் என அனைத்துக்கும் எங்களிடம் வசூல் வேட்டை நடத்துகிறார்கள். நிதி என்ற பெயரில் எங்களிடம் லட்சக்கணக்கில் சுருட்டும் இவர்கள் எங்களுக்காக துரும்பைக் கூட கிள்ளிப்போடுவதில்லை. அப்படியே எதாவது நாங்கள் உதவி கேட்டுச் சென்றால் ’எல்லாரையும் சரிகட்டணும்’னு என்று சொல்லி பணத்தைக் கறந்துவிடுகிறார்கள். இந்த கொரோனா ஊரடங்கு உத்தரவால் நாங்களும்தான் வருமானமின்றி வீட்டில் முடங்கியிருக்கிறோம். ஆனால் எங்களை மிரட்டி வசூல் செய்த பொருள்களில் இவர்கள் போட்டோக்களை போட்டு விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். எங்களின் பங்களிப்பு குறித்து எங்கேயும் மூச்சுவிடுவதில்லை. இவர்களுக்கு தைரியமிருந்தால் தங்கள் சொந்தப் பணத்தில்தான் நிவாரண உதவிகளைச் செய்கிறோம் என்று ஆதாரங்களுடன் கூறுவார்களா?” என்று புலம்புகிறார்கள் புதுவையைச் சேர்ந்த தொழிலதிபர்கள்.

பெட்ரோல் பங்குகள்

முதலியார்பேட்டை தொகுதியில் இருக்கும் பெட்ரோல் பங்குகளின் உரிமையாளர்களோ, “எல்லா கடையும் மூடியிருக்கும்போது நீங்க திறந்துதானே வெச்சிருக்கீங்க. அதனால கொரோனா நிதியா ரெண்டு லட்சம் குடுங்க. மூணு லட்சம் குடுங்கனு எல்லா கட்சிக்காரங்களும் மிரட்டுறாங்க. ஊரடங்கு இருப்பதால யாரும் பெட்ரோல் போட வர்றதில்லை. அப்படியே வர்றவங்களையும் போலீஸ் விட்டுவைக்கறதில்லை. மதியம் 1 மணிவரைதான் பெட்ரோல் பங்குகளை திறக்க அனுமதி கொடுத்திருக்காங்க. அந்த நேரத்துல மட்டும்தான் கொஞ்சம் வியாபாரம் நடக்கும். ஆனால் அதை வைத்து எங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாது. இதையெல்லாம் நாங்க யாருகிட்ட போய் சொல்றது” என்று குமுறுகிறார்கள்.

கவர்னர் கிரண் பேடியும், முதல்வர் நாராயணசாமியும் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்துவார்களா ?

Must Read

கொரோனா : சென்னை அண்ணா நகர்வாசிகளுக்கு ‘பேட் நியூஸ்’

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நான்காம்கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இன்றைய நிலவரப்படி,...

வெட்டுக்கிளி கதையை முடிக்க ட்ரோன் அட்டாக்!

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இந்தியா செல்கிறது என செய்திகள் வெளியாகி வரும் சூழலில் ட்ரோன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த புது முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பை ஒழிக்க ராஜஸ்தான்...

`சீனாவின் மிகவும் மோசமான பரிசு!’ – கொரோனா விவகாரத்தில் மீண்டும் விமர்சித்த ட்ரம்ப்

கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. இதுவரை அங்கு 17.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பாதிப்பால்...

`இப்பதான் எங்களுக்கு நிம்மதி!’ -புதுக்கோட்டையில் கொரோனாவிலிருந்து மீண்ட ஒன்றரை வயது குழந்தை

உலக நாடுகளையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய கொரோனா வைரஸ், இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், மே 31-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா தொற்று...

சமந்தாவை சீண்டினாரா பூஜா ஹெக்டே?

சமந்தா குறித்து பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியான பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தெலுங்கு திரையுலகில் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இருவருமே முன்னணி நாயகிகளாக வலம் வருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு கதைக்கு...