முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் கொரோனா பரிசோதனை: தொழிலாளர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டதால் பரபரப்பு!!

கொரோனா பரிசோதனை: தொழிலாளர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டதால் பரபரப்பு!!

தூத்துக்குடியில் உள்ள பிரபல புதிய சின்னத்துரை ஜவுளிக்கடைக்கு கட்டுமான தொழில்புரிய வந்த வெளிமாநில தொழிலாளர்கள் சுமார் 25 பேருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பது குறித்த பரிசோதனை சாலையில் மேற்கொள்ளப்பட்டது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி, தென்பாகம் காவல் நிலையம் முன்பு பிரபல ஜவுளி நிறுவனமான சின்னத்துரை புதிய கடைக்கு கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிக்காக ஒடிசா, ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வடமாநிலத்திலிருந்து 25 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கு தங்கியிருந்து இப்பணியை மேற்கொண்டு வந்தனர். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கட்டிட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் தொழிலாளர்கள் அங்கேயே தங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய பாக காவல் துறையினர் அங்கு தங்கியிருக்கும் வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அறிவுறுத்தியதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு வடமாநில தொழிலாளர்கள் 25 பேர், மருத்துவ பரிசோதனைக்காக சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்தே அழைத்து வரப்பட்டனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநில தொழிலாளர்கள் கட்டுமான பணி செய்யும் இடத்துக்க எதிரே அரசு மருத்துவமனை இருக்கும்போது, அங்கு பரிசோதனை செய்யாமல் மக்கள் வசிக்கும் பகுதியில் சாலையில் ஊர்வலம் போல் அவர்களை அழைத்து வந்தது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது..

Must Read

அனுராத புரத்தில் சில இடங்கள் லாக் டவுன் என அறிவிப்பு- மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639...

முடக்கப்பட்டது பல்கலைக்கழகம் கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா என அச்சம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில்...

லண்டனில் 24 ம் திகதியோடு அமுலுக்கு வரும் கட்டாய முகக் கவசம்- மீறினால் FINE

பிரித்தானியாவில் இம்மாதம்(ஜூலை) 24 தொடக்கம் கட்டாய நடை முறை ஒன்று அமுலுக்கு வருகிறது. சூப்பர் மார்கெட் தொடக்கம், சிறு கடைகள், உணவங்கள் என்று மக்கள் கூடும் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் கட்டாய...

நச்சு, நச்சுனு கிஸ் அடிக்க மட்டும் தான் பீட்டர் பால் கேமராவுக்கு முன் வருவாரா?: தயாரிப்பாளர் ரவீந்தர்

வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை காதலித்து கடந்த மாதம் 27ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்த கையோடு பீட்டர் பால் மீது அவரின் முதல் மனைவி எலிசபெத்...