முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் கொரோனா பற்றி கண்கலங்கி பேசிய வடிவேலு: உருக்கமான வீடியோ

கொரோனா பற்றி கண்கலங்கி பேசிய வடிவேலு: உருக்கமான வீடியோ

பீதியில் நாடே இருக்கும் நிலையில், நோய் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், வந்தால் கொரோனா வைரஸ் இன்னும் அதிகம் பரவ வாய்ப்பு இருக்கிறது என கூறி அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த ரஜினி, கமல் என முன்னணி நட்சத்திரங்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வரிசையில் தற்போது காமெடியன் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“மனசு வேதனையுடன், துக்கத்துடன் சொல்கிறேன் நான். தயவு பண்ணி அரசு சொல்ற அறிவுரை படி இன்னும் கொஞ்ச நாளைக்கு உள்ளேயே இருக்க சொல்றாங்க. மருத்துவ உலக மிரண்டு, அவங்க உயிரை பணயம் வெச்சு காப்பாத்திக்கிட்டு இருக்காங்க. அவங்களுக்கு நாம ஒத்துழைப்பு கொடுக்கணும்.”

“காவல்துறை அதிகாரிகள் காவல்காத்து கொண்டிருக்கிறார்கள். தயவு பண்ணி வெளியே வராதீங்கனு போலீஸ் கெஞ்சி கும்பிடுற அளவுக்கு இருக்காங்க. யாருக்காகவும் இல்லை, நம் சந்ததியினருக்காக, நம்ம வம்சாவளியினருக்காக, நம்ம புள்ள குட்டி உசுர காப்பாத்துறதுக்காக நாம் எல்லாரும் வீட்ல இருக்கனும். தயவு பண்ணி யாரும் வெளியே போகாதீங்க.”

“இதை அசால்ட்டா எடுக்காதீங்க. ரொம்ப பயங்கரமா இருக்கு. தயவு பண்ணி வெளியே வராதீங்க” என கண்கலங்கி வீடியோவில் பேசியுள்ளார் நடிகர் வடிவேலு.

Must Read

பிரிட்டன் பிரதமரின் கர்ப்பம் தரித்த பெண் நண்பிக்கும் கொரோனா!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பெண் நண்பி தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது தாயுடன் தங்கி வருகிறார். பிரிட்டன் பிரதமர் (வயது 55) கொரோனா தொற்றுக்கு முன்பு...

`கொரோனா தாக்கம்’ – எப்படி இருக்கிறது திருப்பூர் தொழில்துறை? #MyVikatan

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!கொரோனாவின் கோரப்பசி உலகெங்கும்...

`வீட்டிலேயே முடங்கிக் கிடந்தா சோறு கிடைக்காது..!’ -சாத்தூர் பைபாஸில் கவனம் ஈர்த்த முதியவர்

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உலகமே அதிர்ந்து போயுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன....

`மதுவுக்காக கிணற்றுக்குள் குதித்த தொழிலாளி!’ – வாளிக்குள் குவார்ட்டரை அனுப்பி கெஞ்சிய மக்கள்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக மது கிடைக்காமல் குடிமகன்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சென்னை...

கொரோனா வைரஸ் எதிரொலி! – வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு #Corona #NowAtVikatan

வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு!வாட்ஸ் அப்பில் மற்றவர்களுக்குத் தகவல்களைப் பகிர புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதிகம் முறை பகிர்ந்த தகவலை 5 நபர்களுக்குப் பதிலாக இனி ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும். கொரோனா வதந்தியைத்...