முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் கொரோனா பீதி: சிலிண்டர் பதிவுகள் அதிகரிப்பு!

கொரோனா பீதி: சிலிண்டர் பதிவுகள் அதிகரிப்பு!

சீனாவில் தொடங்கிய கொரானா பாதிப்பு இந்தியாவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. உயிர் பலி ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கொரோனா பரவலைத் தடுக்க முடிந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீடுகளுக்குள்ளேயே அடங்கிக் கிடக்கும் மக்களுக்குப் பொருளாதார ரீதியாகவும் சில சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏடிஎம் சேவைக் கட்டணம் ரத்து, வரி செலுத்த கூடுதல் அவகாசம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

ஊரடங்கு உத்தரவு காலத்தில் மக்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களான காய்கறி, பழங்கள், இறைச்சி, பால், மளிகை சாமான்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் தங்கு தடையின்றிக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதே நேரம், சமையலுக்கு மிக முக்கியப் பொருளான சமையல் எரிவாயு விநியோகத்திலும் எவ்விதக் குறைபாடும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஊரடங்கு உத்தரவு அமலாவதற்கு முன்னரே மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிலிண்டர்களுக்கு முன்பதிவு செய்யத் தொடங்கிவிட்டனர்.

மார்ச் 22ஆம் தேதியிலிருந்து இன்று வரையில் மட்டும் சிலிண்டர் முன்பதிவுகளின் எண்ணிக்கை 200 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. சிலிண்டர் விநியோகத்தில் எவ்விதத் தட்டுப்பாடும் இருக்காது எனவும், மக்களுக்கான சிலிண்டர்கள் தொடர்ந்து செய்யப்படும் எனவும் அனைத்திந்திய சமையல் எரிவாயு விநியோகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களும் இந்த விஷயத்தில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கி வருகின்றன.

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன் வெளியிட்டுள்ள தகவலின்படி, மார்ச் 24ஆம் தேதியில் மட்டும் 215 சதவீத உயர்வுடன் 9.84 லட்சம் பேர் சமையல் சிலிண்டருக்கு முன்பதிவு செய்துள்ளனர். நாள் ஒன்றுக்கு 50 முதல் 52 லட்சம் என்ற எண்ணிக்கையில் சமையல் சிலிண்டர்கள் 24,382 விநியோகஸ்தர்களால் நாடு முழுவதும் டெலிவரி செய்யப்படுகின்றன.

பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட சில இடங்களில் சிலிண்டர் விநியோக மையங்களில் காலி சிலிண்டர்களுடன் மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. ஊரடங்கு உத்தரவால் காவல் துறையினரின் கெடுபிடியும் அதிகமாக இருப்பதால், வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே உரிய நேரத்தில் டெலிவரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் பெட்ரோல் நிலையங்களும் தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளோடு, தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Must Read

யாழ்.வட்டுக்கோட்டையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் செய்த தவறால் ஒருவர் அநியாய சாவு; மறைக்கப்பட்ட பின்னணி!

யாழ்.வட்டுக்கோட்டையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் செய்த தவறால் ஒருவர் அநியாய சாவு; மறைக்கப்பட்ட பின்னணி!  

அமெரிக்காவில் இருந்து பிரத்தியேக மருந்து ஒன்றை அனுப்பினார் ரம்: பொறிஸ் ஜோன்சன் மருத்துவர்

தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில், செயற்கை சுவாத்தோடு இருக்கும் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு அமெரிக்காவில் இருந்து பிரத்தியேக மருந்து ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. அமெரிக்க அதிபர் டொனால் ரம்...

நிபுணர்களின் கருத்துப்படி ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு ? – அரசு வட்டாரத் தகவல்

ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கபட உறுதியான வாய்ப்புகள் இருப்பதாக அரசுத் தரப்புத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா ஒழிப்பு நடவடிக்கையாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை நாடு...

ஊரடங்கில் பள்ளி மாணவி கர்ப்பம்…! காட்டிக்கொடுத்த தங்கை கொலை…

கொசவம்பட்டியைச் சேர்ந்த சந்திரன் - வத்சலா தம்பதிக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருந்தனர். முதல் மகள் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த நிலையில் இரண்டாவது மகள் அப்பகுதியில் உள்ள...

கொரோனாவுக்கு எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: கொரனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி பயன்படுத்திக் கொள்ளப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள்...