முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் கொரோனா வைரஸ்: தேனியில் குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

கொரோனா வைரஸ்: தேனியில் குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

தேனியில் பாதிக்கப்பட்டு குணமடைந்த மேலும் 17 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் அம்மாவட்டத்தில் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது. 5 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

இன்று குணமடைந்த 17 பேரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து கல்லூரி முதல்வர் இளங்கோவன் முன்னிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். டெல்லி தப்லிக் மாநாட்டிற்கு சென்று வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்த 19 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தேனி மாவட்டத்தில் மொத்தம் 43ஆக உயர்ந்தது.

இவர்கள் அனைவரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் போடியைச் சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி உயிரிழந்தார்.

தொடர்ந்து, குணமடைந்த 18 பேர் கடந்த 16ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கடந்த 22 ஆம் தேதி மேலும் 2 பேர் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 17 பேர் பூரணகுணமடைந்ததால் கல்லூரி முதல்வர் இளங்கோவன் முன்னிலையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் மட்டும் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 17 பேருக்கும் பழங்கள், ஊட்டச்சத்து உணவுகள், முகக் கவசங்கள், கிருமிநாசினிகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசு பெட்டகங்களுடன், மருந்து மாத்திரைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் இளங்கோவன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இவர்கள் அனைவரும் தொடர்ந்து 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் எனவும் மருத்துவக் கல்லூரி முதல்வர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 37 பேர் மற்றும் அவர்களது உறவினர்கள் என மொத்தம் 112 பேர் தங்களை வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் பல்லவிபல்தேவ் தெரிவித்துள்ளார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களை அழைத்துச் செல்வதற்காக அவர்களது உறவினர்கள், மற்றும் ஜமாத்தார்கள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்திருந்தனர். சிறந்த முறையில் சிகிச்சை, உணவு அளித்த தமிழக அரசுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Must Read

கொரோனா : சென்னை அண்ணா நகர்வாசிகளுக்கு ‘பேட் நியூஸ்’

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நான்காம்கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இன்றைய நிலவரப்படி,...

வெட்டுக்கிளி கதையை முடிக்க ட்ரோன் அட்டாக்!

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இந்தியா செல்கிறது என செய்திகள் வெளியாகி வரும் சூழலில் ட்ரோன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த புது முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பை ஒழிக்க ராஜஸ்தான்...

`சீனாவின் மிகவும் மோசமான பரிசு!’ – கொரோனா விவகாரத்தில் மீண்டும் விமர்சித்த ட்ரம்ப்

கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. இதுவரை அங்கு 17.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பாதிப்பால்...

`இப்பதான் எங்களுக்கு நிம்மதி!’ -புதுக்கோட்டையில் கொரோனாவிலிருந்து மீண்ட ஒன்றரை வயது குழந்தை

உலக நாடுகளையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய கொரோனா வைரஸ், இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், மே 31-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா தொற்று...

சமந்தாவை சீண்டினாரா பூஜா ஹெக்டே?

சமந்தா குறித்து பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியான பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தெலுங்கு திரையுலகில் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இருவருமே முன்னணி நாயகிகளாக வலம் வருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு கதைக்கு...