முகப்பு சினிமா கோயில், பள்ளி, மருத்துவமனை... ஜோதிகாவின் கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? #VikatanPoll

கோயில், பள்ளி, மருத்துவமனை… ஜோதிகாவின் கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? #VikatanPoll

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக நடந்த பெண்களுக்கான ஒரு விருது வழங்கும் விழாவில் தன் தஞ்சாவூர் பட ஷூட்டிங் அனுபவம் குறித்து ஜோதிகா பேசினார். கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட அந்த வீடியோவில்,

“தஞ்சைப் பெரிய கோயில் மிகவும் புகழ்பெற்றது அழகாக இருக்கும், அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். நானும் பார்த்திருக்கிறேன். மிகவும் அழகாக இருந்தது. அதை அருமையாகப் பராமரித்து வருகிறார்கள். மறுநாள் என்னுடைய படப்பிடிப்பு மருத்துவமனையில் நடந்தது. அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் கண்டதை வாயால் கூற முடியாது, அவ்வளவு மோசமாக இருந்தது. எல்லோருக்கும் ஒரு கோரிக்கை. கோயிலுக்காக அதிக காசு கொடுக்கிறீர்கள் வண்ணம் பூசிப் பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையைப் பள்ளிகளுக்கும் கொடுங்கள். மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். மருத்துவமனையில் நான் அந்தக் காட்சியைக் கண்டதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. மருத்துவமனைகளும் பள்ளிகளும் மிக முக்கியம். தயவுசெய்து அவற்றுக்கு நிதியுதவி கொடுங்கள்” எனப் பேசியுள்ளார். இது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இது குறித்து உங்களின் கருத்துகளைக் கீழே பதிவு செய்யுங்கள்.

இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமெண்டில் பதிவு செய்யுங்கள்.

Must Read

தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு!

தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் கடந்த 2019ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து, 2019ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி புதிய தலைமை செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி...

இங்கிலாந்து தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு: ஹோல்டர் கேப்டன்!

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு முதல் சர்வதேச டெஸ்ட் தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது. , மேற்கிந்திய அணிகள் பங்கேற்கும் இந்த டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் வரும் ஜூலை 8ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில்...

ஆன்லைன் வீடியோக்களை அதிகமாகப் பார்க்கும் இந்தியர்கள்!

இந்திய மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப நாளுக்கு போன்களின் எண்ணிக்கையும் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. குறைந்த விலைக்கு ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதாலும் குறைந்த கட்டணத்தில் டேட்டா சேவைகள் வழங்கப்படுவதாலும் ஸ்மார்ட்போன்களில் அதிக நேரத்தை...

குடும்ப அட்டைதாரர்களுக்கு 7500 ரூ: திருநாவுக்கரசு கோரிக்கை!

மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கட்சி சார்பாக கொரானா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு நலிவடைந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். தொடர்ந்து...

விரைவில் சர்வதேச விமான போக்குவரத்து? வெளிநாட்டவர்களுக்கு மத்திய அரசு அனுமதி!

பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக முடக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து எப்போது தொடங்கப்படும் என்ற...