முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் கோவை: வடமாநில கூலிகளுக்கு நிவாரணம் கேட்டு போராட்டம்!

கோவை: வடமாநில கூலிகளுக்கு நிவாரணம் கேட்டு போராட்டம்!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கக்கோரி பட்டினி போராட்டம் நடத்திய
மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாநகர செயலாளர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று பட்டினி போராட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாகக் கோவை தடாகம் சாலை முத்தண்ணன் குளம் அருகே வீடுகள் நிறைந்துள்ள பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கையில் பதாகைகளை ஏந்தியபடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாகப் பட்டினி போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் அக்கட்சியின் மாநகர செயலாளர் வேல்முருகன், ஏஐசிசிடியூ அமைப்பின் மாநிலச் செயலாளர் லூயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கொரொனா பாதிப்பு காரணமாகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் எனவும், உணவிற்குச் சிரமப்படும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசு 10 ஆயிரம் ரூபாயை நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அவர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், புலம் பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஊரடங்கு உத்தரவு நாட்டில் அமலில் இருக்கும்போது ஒன்று கூடி போராட்டம் நடத்தியதாக ஆர்.எஸ். புரம் காவல் துறையினர் வேல்முருகன், லூயிஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவர் மீதும் பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தல், அரசுக்கு எதிராக வதந்தியைப் பரப்புதல், ஊரடங்கு உத்திரவை மீறுதல், அரசு ஊழியரின் உத்திரவுக்கு கீழ் படியாமை, தொற்று நோய் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

ஏஐசிசிடியூ மாநிலச் செயலாளர் லூயிஸ் மட்டும் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டார். அதே வேளையில் காவல் துறையினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் வேல்முருகனை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரபு வீட்டில் முன்னிறுத்தி சிறையில் அடைந்தனர்.

Must Read

தேர்தல் நேரத்தில் இந்துமதத்தை நேசிக்கும் சார்ள்ஸ்!

தேர்தல் நேரத்தில் இந்துமதத்தை நேசிக்கும் சார்ள்ஸ்; பேசும் படம்!

இப்போது 3 கோடி மொத்தம் 8 கோடி; சிவமோகனிடமிருந்து வன்னி மக்களை காப்பாற்ற கடவுள்தான் வரவேண்டும்!

தேர்தல் வருகிற ஆவணி மாதம் 5-ம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் வவுனியாவில் தனது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்தபெண்ணை கற்பழித்த சி.சிவமோகன் தற்போதுவரை 3கோடியே 67 லட்ஷம் ரூபாய் வரை செலவளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,...

Corona Live Updates: `முதல்வருக்கு கொரோனா பரிசோதனை… ரிசல்ட் நெகட்டிவ்’ – தமிழக அரசு

முதல்வருக்கு நெகட்டிவ்:முதல்வர் எடப்பாடி பழனிசாமிதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாலும் அமைச்சர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி...

விசாக பட்டினத்தில் பெரும் தீ விபத்து: பொது மக்கள் அச்சம்!

விசாகப்பட்டினம் பார்மா சிட்டியில் செயல்படும் விசாகா சால்வெண்ட்ஸ் ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

சும்மா மெஜாரிட்டினு சொல்லாதீங்க; இதையும் செஞ்சு காட்டுங்க – ராஜஸ்தான் பாஜக!

ராஜஸ்தான் மாநிலத்தின் அரசியல் சூழல் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பாஜக முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.