முகப்பு சினிமா `சக்திவாய்ந்த ஒளியைச் செலுத்தி சோதனை செய்யுங்கள்’ - விமர்சனத்துக்குள்ளான ட்ரம்ப்பின் யோசனை #Corona

`சக்திவாய்ந்த ஒளியைச் செலுத்தி சோதனை செய்யுங்கள்’ – விமர்சனத்துக்குள்ளான ட்ரம்ப்பின் யோசனை #Corona

உலகிலேயே கொரோனாவால் சொல்ல முடியாத துயரை அனுபவித்து வரும் நாடுகளில் முதல் இடத்தில் உள்ளது அமெரிக்கா. வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு அங்குதான் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 50,000-த்தை தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது.

ட்ரம்ப் – வில்லியம்

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. இது ஒருபுறம் என்றால் அங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பொருளாதாரமும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இப்படி பல இன்னல்களில் சிக்கியுள்ளது அமெரிக்கா. வைரஸ் பரவலை சரி செய்து, ஊரடங்கைத் தளர்த்துவதற்கான தீவிர பணிகளில் இறங்கியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் கூறியுள்ள ஒரு மருத்துவமுறை சர்வதேச ஆராய்ச்சியாளர்களின் விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

Also Read: `சீனாவுக்குள் விசாரணை; ட்ரம்ப் முன்னிறுத்தும் நிபுணர்கள் குழு!’ -கொரோனா விவகாரத்தில் முற்றும் மோதல்

நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அந்நாட்டின் பாதுகாப்புத்துறையின் அறிவியல் & தொழில்நுட்ப ஆலோசகர் வில்லியம், “கோடைக்காலத்தில் கொரோனாவின் தாக்கம் குறையும், சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்தும். நாங்கள் செய்த ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த முடிவை அறிவிக்கிறோம். காற்று மற்றும் திறந்த வெளியில் இருக்கும் கொரோனாவை சூரிய ஒளி கொல்கிறது என்பதை நாங்கள் தீவிரமாகக் கவனித்து வருகிறோம்” எனப் பேசியிருந்தார்.

ட்ரம்ப்

இவர் பேசி முடித்த அடுத்த நொடி மேடையேறிய அதிபர் ட்ரம்ப், `மிகவும் சக்திவாய்ந்த ஒளியால் உடலைச் சுத்தப்படுத்த முடியுமா’ எனக் கேட்டு ஆச்சர்யம் அடைந்தார். பின்னர், “சூரிய ஒளியால் கொரோனா அழிகிறது என்றால் அதேபோல ஒரு ஒளி அல்லது அதற்கு நிகரான சக்திவாய்ந்த வேறு ஒளியை மனித உடலுக்குள் செலுத்தி கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்தமுறை அதிக ஆர்வம் அளிப்பதாக உள்ளது. எனவே, ஆராய்ச்சியாளர்கள் இதைச் சோதனை செய்து பார்க்க வேண்டும். இதனால் ஒரு நிமிடத்தில் உடலில் உள்ள கிருமிகள் அழிக்கப்படும்” என்பதுபோல பேசியிருந்தார்.

தற்போது ட்ரம்ப் பேசியுள்ள வீடியோ வைரலாகியுள்ளது. ஆராய்ச்சியாளர்கள், மருத்துவத்துறையினர், சாதாரண மக்கள் எனப் பலரும் ட்ரம்ப்பின் கருத்தை விமர்சித்து வருகின்றனர்.

Must Read

இன்னும் சில மணி நேரங்களில் இருந்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் விபரங்கள்

இன்று(06) இலங்கை நேரப்படி மதியம் 3 மணி முதல், தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பிக்கும். உடனுக்கு உடன் வெற்றிபெற்றவர்கள் யார் என அறிந்து கொள்ள அதிர்வு செய்திகளோடு இணைந்திருங்கள். நாம் உடனுக்கு உடன்...

துறைமுக கிடங்கில் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்ததே காரணம் பெய்ரூட் குண்டுவெடிப்பு பலி 100 ஆனது: 4,000 பேர் படுகாயம்; வீடுகள் மீது உடல் பாகங்கள்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. 4,000க்கும் மேற்பட்டோர்காயம் அடைந்துள்ளனர். மத்திய கிழக்கு நாடான லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில்...

ஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்டாட்டங்களில் கொரோனா தொற்று!

ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்று பெரிய கொண்டாட்டங்களில் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 20 அகவை இளைஞன் உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதேவேளை தொற்று பலருக்கு இருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்களோடு நெருங்கிய தொடர்பில்...

வுகானில் மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, வுகான் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் ஜாங்னான் மருத்துவமனை ஆய்வு நடத்தி உள்ளது. இதன் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதில், ‘கொரோனாவில் இருந்து மீண்ட...

கொரோனா கதியில் இருந்து மீண்டதா? இன்னமும் திணறுகிறது அமெரிக்கா: டிரம்ப் மீது மக்கள் கடுப்பு

நியூயார்க்: மற்ற நாடுகளை விட அமெரிக்கா கொரோனா ஒழிப்பில் வெற்றி கண்டு கொண்டிருக்கிறது என்று அதிபர் டிரம்ப் என்னதான் சொன்னாலும், உண்மையில் நிலைமை வேறாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் கொரோனா பரவியுள்ளது...