முகப்பு சினிமா ``சடலத்தைப் போட்டுவிட்டு ஓடிவந்தோம்!"- டாக்டர் இறுதி அஞ்சலியில் பங்கேற்ற நண்பர் கண்ணீர் #Corona

“சடலத்தைப் போட்டுவிட்டு ஓடிவந்தோம்!”- டாக்டர் இறுதி அஞ்சலியில் பங்கேற்ற நண்பர் கண்ணீர் #Corona

கொரோனா தொற்றால் உயிரிழந்த சென்னை தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மரணமடைந்தார். அவரின் நண்பர் டாக்டர் பாக்கியராஜ், வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “இவ்வளவு நாள் வீடியோவில் பேசுவதற்கு நான் சந்தோஷமடைந்துள்ளேன். ஆனால் இந்த வீடியோவைப் பதிவு செய்வதில் வேதனைப்படுகிறேன். என்னுடைய நண்பரான டாக்டர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 15 நாள்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அவரின் சடலத்தை அடக்கம் செய்ய முடிவு செய்தோம். சடலத்தை வாங்கியபின், சில பொதுமக்கள் அடக்கம் செய்ய விடவில்லை.

Also Read: `சென்னை அரசு டாக்டருக்கு கொரோனா; தனியார் மருத்துவமனையில் அனுமதி!’ – தனிமைப்படுத்தப்பட்ட 35 பேர்

டாக்டர் பாக்யராஜ்

அடக்கம் செய்வதற்கான அனுமதியை அரசிடம் வாங்கியிருந்தோம். அரசு எல்லா உதவிகளையும் செய்திருந்தது. ஆனால், எங்கேயும் அவரை அடக்கம்செய்ய விடாமல் தடுத்துவிட்டார்கள். அதனால் கண்ணீருடன் இந்தத் தகவலை பதிவுசெய்கிறேன். அவர் ஒரு சிறந்த மருத்துவர். இந்த உலகில் சிறந்த மருத்துவர் என நிரூபித்தவர். ஆனால், அவரை அடக்கம் செய்யக்கூட மக்கள் அனுமதிக்கவில்லை. யாரால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது உங்களுக்கே தெரியும்.

மக்களுக்கு அவர் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் அவருக்கு இந்த நிலைமை இல்லை. நேற்று அவரின் சடலத்தை அடக்கம் செய்யச் சென்றபோது, 50 அடியாட்கள் கல்லாலும் கட்டையாலும் அடித்துத் தாக்கினார்கள். இந்த மோதலில் காயமடைந்த சுகாதார ஆய்வாளர் உள்பட 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதனால் டாக்டரின் சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு வரும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். அதன்பிறகு, என்னுடைய சில டாக்டர் நண்பர்கள்தான் இறுதி அஞ்சலி செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது.

Also Read: `வதந்திகளைப் பரப்பாதீங்க; அப்பாவுக்காக பிரார்த்தனை செய்யுங்க!’- கலங்கும் டாக்டரின் மகன், மகள்#Corona

ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்படும் டாக்டரின் சடலம்

Also Read: `ஆம்புலன்ஸ் உடைப்பு; டிரைவருக்கு அடி’ – கொரோனாவால் இறந்த சென்னை டாக்டரின் இறுதி அஞ்சலியில் வன்முறை

இந்த நோயால் இறந்த டாக்டர்களுக்கு இதுதான்நிலைமையா… மக்கள் கொடுக்கிற பரிசு இதுவா, எப்படி மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இருக்கும். இந்த வீடியோவை வெளியிடுவதற்காக வெட்கப்படுகிறேன். இவ்வளவு பாதிக்கப்பட்டு, அவரை மருத்துவமனையில் காப்பாற்ற முடியாமல் கடைசியில் அடக்கம் செய்யக்கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டோம். அவருடைய ஆத்மா எப்படி சாந்தியடையும்? எதற்கு இந்த மருத்துவப்பணிக்கு வந்தோம் என்று வெட்கப்படுகிறோம். எங்களின் வேதனையை மக்கள் புரிந்து கொள்ளவில்லை. வேற எந்த மனிதருக்கும் இந்த நிலைமை ஏற்படக்கூடாது. மக்கள் மனத்தில் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள். இன்றைய சூழலில் டாக்டர்களையும் சுகாதார பணியாளர்களையும் பல தரப்பினர் பாராட்டி வருகின்றனர். ஆனால், கொரோனா தொற்றால் இறந்த டாக்டரின் சடலத்தை அடக்கம் பண்ணக்கூட இடம் கிடைக்காமல் அலைந்தோம். கொரோனா தொற்றால் இறந்தவர்களை அடக்கம் செய்தால் எந்த பாதிப்பும் இல்லை என்பதை மக்களிடையே மீடியாக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 20 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் முதற்கட்டமாக 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Must Read

கொரோனா : சென்னை அண்ணா நகர்வாசிகளுக்கு ‘பேட் நியூஸ்’

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நான்காம்கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இன்றைய நிலவரப்படி,...

வெட்டுக்கிளி கதையை முடிக்க ட்ரோன் அட்டாக்!

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இந்தியா செல்கிறது என செய்திகள் வெளியாகி வரும் சூழலில் ட்ரோன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த புது முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பை ஒழிக்க ராஜஸ்தான்...

`சீனாவின் மிகவும் மோசமான பரிசு!’ – கொரோனா விவகாரத்தில் மீண்டும் விமர்சித்த ட்ரம்ப்

கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. இதுவரை அங்கு 17.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பாதிப்பால்...

`இப்பதான் எங்களுக்கு நிம்மதி!’ -புதுக்கோட்டையில் கொரோனாவிலிருந்து மீண்ட ஒன்றரை வயது குழந்தை

உலக நாடுகளையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய கொரோனா வைரஸ், இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், மே 31-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா தொற்று...

சமந்தாவை சீண்டினாரா பூஜா ஹெக்டே?

சமந்தா குறித்து பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியான பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தெலுங்கு திரையுலகில் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இருவருமே முன்னணி நாயகிகளாக வலம் வருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு கதைக்கு...