முகப்பு செய்திகள் இலங்கை செய்திகள் சிறிதரனின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்குபற்றிய மக்கள் மீது தாக்குதல்

சிறிதரனின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்குபற்றிய மக்கள் மீது தாக்குதல்

கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் பொதுச் சந்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்குகொண்ட மக்கள் மீது குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.கூட்டமைப்பின் வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் பங்கேற்ற பரப்புரைக் கூட்டம் இன்று மாலை அக்கராயன் பொதுச் சந்தைப் பகுதியில் நடைபெற்றுள்ளது.

அவர் உரையாற்றிக்கொண்டிருந்த போது சில நபர்கள் அந்தப் பகுதியில் நின்றிருந்ததாகவும் பளையில் நடைபெறுகின்ற பரப்புரைக் கூட்டத்திற்காக சிறீதரன் புறப்பட்டுச் சென்ற பின்னர் அவர்கள் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும் சிறீதரன் தரப்பு தெரிவிக்கின்றது.சம்பவம் தொடர்பில் அக்கராயன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் கைது செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சியைத் தளமாகக் கொண்டு செயற்படுகின்ற வேட்பாளர் ஒருவருக்கு நெருக்கமானவர்களே தாக்குதல் நடத்தியிருப்பதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Must Read

நாளை ராமர் கோவில் பூமி பூஜை – பிரதமர் மோடி பயணத்தின் முழு விவரம்!

முதலில் ஹனுமன் கார்ஹியில் மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி பின்னர் அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்கிறார்.

கணவன் கண் முன்னே கூட்டு பாலியல், ஆதரவு அளித்த போலீஸ்!

பாலியல் குற்றவாளிகளுக்கு போலீஸ் ஆதரவு அளித்து புகாரைப் பெற மறுத்து வந்த நிலையில், மலைவாழ் மக்கள் கூட்டாக முன்னெடுத்த போராட்டம் குற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது...

“உடம்பெல்லாம் வலிக்குதுப்பான்னு அவன் அழறப்போ பயமா இருக்கும்”-  கண்ணீரில் மிதக்கும் சென்னை குடும்பம்!

மருந்தில்லா நோயும் வறுமையும் ஒரு வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தால்..? பூந்தமல்லியை அடுத்த செந்நீர் குப்பத்தைச் சேர்ந்த ரவீந்திரன் குடும்பம்போலதான் இருக்கும். எதிர் எதிரே இரண்டு பைக்குகள் வந்துவிட்டால், ஒரு வண்டி நின்றுதான் போக...

ஆபாசம், அச்சுறுத்தல், கொலை மிரட்டல்… பெண் ஊடகவியலாளர்களை குறிவைக்கும் கும்பல்!

தமிழ்நாட்டில் ஊடகத்தினர் மீதான தாக்குதலில் `சீஸன் டூ' ஆரம்பித்திருக்கிறது. ஊடகத் துறையில் இயங்கிவரும் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து சமீபகாலமாக அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. சமூக ஊடகங்களில் இதுதொடர்பான குற்றச்சாட்டுகள், விவாதங்கள் என இரு...

TikTok-ஐ வாங்க மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தை… வாங்கினால் இந்தியாவில் என்ன செய்யலாம்? #VikatanPoll

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவைப் போலவே டிக்டாக் app-ஐ தடைசெய்யவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதே சமயம், அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட், டிக்டாக் app-ஐ சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கப்...