முகப்பு செய்திகள் இலங்கை செய்திகள் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 29 வயதான பெண்!

சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 29 வயதான பெண்!

15 வயதான சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 29 வயதான பெண்ணை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மெதிரிகிரிய பகுதியில் இந்த சம்பவம் நடந்ததுள்ளது.

முகநூல் வழியாக 15 வயது சிறுவனும், 29 வயது பெண்ணும் அறிமுகமாகியிருந்தனர். அந்த பெண் திருமணமாகியிருந்தபோதும், குழந்தைகள் இருக்கவில்லை.
முகநூல் பழக்கம் வலுவடைந்ததும், பாடசாலைக்கென கிளம்பிச் செல்லும் சிறுவன் பல சந்தர்ப்பங்களில் அந்த பெண்ணுடன் சென்று விடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். கடந்த 3மாதங்களாக இந்த தொடர்பு நீடித்தது.
மாணவனின் வரவு ஒழுங்கில்லாமலிருந்த விடயம் பெற்றோரிற்கு தெரிய வந்த பின்னர், மாணவனை அவதானித்தபோது, திருமணமான பெண்ணுடனான அவரது தொடர்பு தெரியவந்தது.
மாணவனை வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் அத்துமீறலில் அந்த பெண் ஈடுபட்டிருந்தது தெரிய வந்ததும், மெதிரிகிரிய பொலிசாரிடம் முறையிடப்பட்டது.

பொலிசார் அந்த பெண்ணை கைது செய்து, நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது, எதிர்வரும் 11ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Must Read

அதிருப்தி எம்.எல்.ஏக்களை சரிகட்டும் முதல்வர்; என்னென்ன பிளான் பண்றார் பாருங்க!

ஆளும் காங்கிரஸ் ஆட்சியில் போர்க்கொடி தூக்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்களை சரிகட்டும் வேலையில் முதலமைச்சர் அசோக் கெலாட் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காரைக்கால்: `முழுமனதோடு செய்கிறேன்!’ – சொந்த நிலத்தைக் கோயிலுக்குக் கொடுத்த இஸ்லாமியர்

காரைக்கால் அருகே கட்டப்பட்ட கோயிலுக்கான இடத்தை, நில உரிமையாளரான இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஒருவர், மத நல்லிணக்கத்தைப் பேணும்வகையில் புதுவை அமைச்சர் கமலக்கண்ணன் முன்னிலையில் கோயில் நிர்வாகத்திடம் தானமாக வழங்கியுள்ளது பாராட்டைப் பெற்றுள்ளது.இந்து...

சந்திரபாபு பிறந்த நாள் கட்டுரை: ரம்மியா? ஜோக்கரா? 

13 என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்டு விளையாடப்படும் சூதாட்டத்தில், ஜோக்‍கர் மிக மிக அவசியம். அதைவிட அவசியம் ரம்மி. என்னதான் ஜோக்‍கர் இருந்தாலும் ரம்மி சேர்ந்தால்தான் ஆட்டம் வெற்றி பெறும். அதுபோல சினிமா...

இலங்கையின் அரிய ஒளிபடத்தை நாசா வெளியிட்டுள்ளது; எப்படி இருக்கிறது பாருங்கள்!

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இலங்கை மற்றும் இந்தியாவின் தெற்கு முனை தென்படும் விதமாக அழகான ஒளிபடமொன்றை நாசா வெளியிட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஜூலை 24ஆம் திகதி, விண்வெளி வீரர்களான பெஹன்கென் மற்றும் டக்...

சம்பந்தருக்கு வாக்களிக்கச் சொல்லும் ராஜபக்சவின் வேட்பாளர்!

மகிந்த அரசுடன் கூட்டமைப்பு பின்கதவு பேச்சுக்களை நடத்துவதான குற்றச்சாட்டுக்கள் மத்தியில் திருக்கோணாமலையின் பெரமுன வேட்பாளர் சுசந்த புஞ்சிநிலமே தனக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள், வாக்குகளை இரா.சம்பந்தன் ஐயாவுக்கு போடுமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் என்ற...