முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி!

சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி!

மார்ச் 25ஆம் தேதி முதல் இந்தியாவில் மக்கள் அமலில் இருக்கிறது. மே 3ஆம் தேதி வரையில் இந்நிலை நீடிக்கும் சூழலில், பொதுமக்களின் வாழ்வாதாரமும் தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளும் முடங்கியுள்ளன. அனைத்து தரப்பிலும் வருவாய் இல்லாமல் போயுள்ளது. குறிப்பாக, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் 20ஆம் தேதி முதல் சில கட்டுப்பாடுகளுடன் குறிப்பிட்ட அளவில் தொழில் நிறுவனங்கள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இருந்த போதிலும், பொதுப் போக்குவரத்து முடங்கியுள்ளதால் தொழிலாளர்கள் வந்து செல்வதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன.

இந்நிலையில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி கிடைப்பதற்கான திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சரான தெரிவித்துள்ளார். இந்திய தொழில் துறை மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு சார்பாக இன்று ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நிதின் கட்கரி கலந்துகொண்டார். 1,500 பேருக்கு மேல் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், விரைவில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான வங்கிக் கடன் உதவி சிறு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதுமட்டுமல்லாமல், ஈ.எஸ்.ஐ. அமைப்பிடமிருந்து ரூ.80,000 கோடியை துறைக்குப் பயன்படுத்துவது குறித்த திட்டத்தைத் தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வாருடன் ஆலோசித்துள்ளதாகவும், அத்திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் எனவும் நிதின் கட்கரி உறுதியளித்தார். பாதிப்பால் முடங்கிப்போயுள்ள சிறு, குறு, நடத்தர நிறுவனங்கள் துறைக்கு மேற்கூறிய திட்டங்கள் உதவியாக இருக்கும் எனவும், அரசு தரப்பிலிருந்து இத்துறையினருக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் உள்ள நிதின் கட்கரி, சரக்குப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்குத் தடையில்லா அனுமதி வழங்க மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், 60 சதவீத சரக்குப் போக்குவரத்து தொடங்கிவிட்டதாகவும் நிதின் கட்கரி தெரிவித்தார்.

Must Read

கர்ப்பிணி யானை செத்தது எப்படி? இறுதி அறிக்கை வெளியீடு!

கேரளா பாலக்காடு மாவட்டத்தில் அண்ணாச்சிப் பழத்தில் வெடிமருந்து வைத்து கொலை செய்யப்பட்ட யானை எதனால் உயிரிழந்தது என சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கேரள அரசு அறிக்கை...

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 39 பேருக்கு கொரோனா!!

சென்னையில் உடல்நலம் குறைவால் அண்மையில் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல், சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அந்த நபரின்...

‘இவங்கெல்லாம் இனிமே நாடாளுமன்றத்துக்குள்ள நுழையக் கூடாது’

நாடாளுமன்ற இரு அவைகளின் செயலக அலுவலக பணியாளர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மற்றும் நாடாளுமன்ற அலுவலக பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு சில அதிரடி...

தங்க பிளேட்டினால் ஆன சவப் பெட்டி: கறுப்பர்கள் ஒன்றினைந்து செய்த காரியம் இது

போலியான $20 டாலர் நோட்டு ஒன்றை உணவகத்தில் கொடுத்ததற்காக, அவரை பிடித்த பொலிசார் கழுத்தை நசுக்கியே கொன்றார்கள். கறுப்பு இனத்தவர்கள் என்றால் அமெரிக்கர்கள் தரக் குறைவாக நினைக்கிறார்கள். இதனால் இறந்து போன ஜோர்ஜுக்கு...

லொஸ்லியாவின் முதல் படம் பிரென்ட்ஷிப் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை ரிலீஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக தமிழ் நாட்டு மக்களுக்கு பரிச்சயமானவர் . இலங்கையை சேர்ந்த அவர் அங்கு ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின் பிக்...