முகப்பு சினிமா `சீக்கிரமே மீள்வோம்!’ - குடும்பங்களை மறந்து சேவையாற்றும் தூய்மைப் பணியாளர்கள்

`சீக்கிரமே மீள்வோம்!’ – குடும்பங்களை மறந்து சேவையாற்றும் தூய்மைப் பணியாளர்கள்

நீலகிரி மாவட்டத்தில் தற்போதுவரை 9 நபர்களுக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 பேரும் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், வீட்டு கண்காணிப்பில் சுமார் 50 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் நம்பிக்கையான சூழலே நிலவுகிறது.

ஊட்டியில் தங்க வைக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள்

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 9 பேரில் இருவர் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட காந்தல் பகுதியைச் சேர்ந்தவர்கள். இதனால் இந்தப் பகுதி முழுவதும் கடந்த மாதம் 29-ம் தேதி முதல் மூடப்பட்டள்ளது.

இந்தப் பகுதியில் இருந்து தூய்மைப் பணியாளர்கள் ஊட்டி நகராட்சியில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நாள்தோறும் தடை செய்யப்பட்ட காந்தள் பகுதிக்குச் சென்று திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், கொரோனா பாதிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஊட்டியில் தங்க வைக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தூய்மைப் பணியாளர்கள் 150 பேரை ஊட்டி நகராட்சி நிர்வாகம் ஊட்டியில் உள்ள அரசுப் பெண்கள் தங்கும் விடுதி மற்றும் அரசு தங்கும் விடுதிகளில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டு உணவளித்து வருகின்றனர். நூற்றுக்கும் அதிகமான தூய்மைப் பணியாளர்கள் தங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து இங்கேயே தங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து நகராட்சி அதிகாரிகள்,“ஊட்டி காந்தள் பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊட்டியில் தங்க வைத்துள்ளோம். ஆண்கள் மெயின் பஜார் நகராட்சி தொடக்கப்பள்ளியிலும், பெண்கள் அரசு கல்லூரி மாணவியர் தங்கும் விடுதியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஊட்டியில் தங்க வைக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள்

இவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு தங்கி பணிகளை மேற்கொள்வார்கள். நிலைமை சீரானவுடன் அவர்கள் மீண்டும் தங்களது வீடுகளுக்குத் திரும்பி விடுவார்கள்” என்றனர்.

மாணவியர் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்தோம், நம்மிடம் பேசிய ஒரு தூய்மைப் பணியாளர், “இங்க எங்களுக்கு சாப்பாடு, டீ, காபி எல்லாம் கிடைக்குது. அதுல எந்தக் குறையும் இல்லை.

ஊட்டியில் தங்க வைக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள்

ஆனா, குடும்பத்தை விட்டுட்டு வந்து 5 நாள் ஆகுது. யார் முகத்தையும் பார்க்கல. அதுதான் கவலையா இருக்கு. இருந்தாலும் இந்த மாதிரி சமயத்துல வேலை செஞ்சி நம்ம பங்க கொடுக்குறது மனசு நிறைவா இருக்கு. எல்லோரும் சேர்ந்து சீக்கிரமா இந்தக் கொரோனாவை விரட்டிட்டு வீடு திரும்புவோம்” என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

Must Read

நாளை ராமர் கோவில் பூமி பூஜை – பிரதமர் மோடி பயணத்தின் முழு விவரம்!

முதலில் ஹனுமன் கார்ஹியில் மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி பின்னர் அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்கிறார்.

கணவன் கண் முன்னே கூட்டு பாலியல், ஆதரவு அளித்த போலீஸ்!

பாலியல் குற்றவாளிகளுக்கு போலீஸ் ஆதரவு அளித்து புகாரைப் பெற மறுத்து வந்த நிலையில், மலைவாழ் மக்கள் கூட்டாக முன்னெடுத்த போராட்டம் குற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது...

“உடம்பெல்லாம் வலிக்குதுப்பான்னு அவன் அழறப்போ பயமா இருக்கும்”-  கண்ணீரில் மிதக்கும் சென்னை குடும்பம்!

மருந்தில்லா நோயும் வறுமையும் ஒரு வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தால்..? பூந்தமல்லியை அடுத்த செந்நீர் குப்பத்தைச் சேர்ந்த ரவீந்திரன் குடும்பம்போலதான் இருக்கும். எதிர் எதிரே இரண்டு பைக்குகள் வந்துவிட்டால், ஒரு வண்டி நின்றுதான் போக...

ஆபாசம், அச்சுறுத்தல், கொலை மிரட்டல்… பெண் ஊடகவியலாளர்களை குறிவைக்கும் கும்பல்!

தமிழ்நாட்டில் ஊடகத்தினர் மீதான தாக்குதலில் `சீஸன் டூ' ஆரம்பித்திருக்கிறது. ஊடகத் துறையில் இயங்கிவரும் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து சமீபகாலமாக அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. சமூக ஊடகங்களில் இதுதொடர்பான குற்றச்சாட்டுகள், விவாதங்கள் என இரு...

TikTok-ஐ வாங்க மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தை… வாங்கினால் இந்தியாவில் என்ன செய்யலாம்? #VikatanPoll

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவைப் போலவே டிக்டாக் app-ஐ தடைசெய்யவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதே சமயம், அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட், டிக்டாக் app-ஐ சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கப்...