முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் "சீனா வைரஸ்தான் இது விஞ்ஞானி டசூக்கோ" என வாட்ஸ் ஆப்பில் வருவது பொய்...

“சீனா வைரஸ்தான் இது விஞ்ஞானி டசூக்கோ” என வாட்ஸ் ஆப்பில் வருவது பொய்…

“கோவிட்-19 சீனா உருவாக்கிய வைரஸ்தான், நான் வுகானிலும் பணிபுரிந்திருக்கிறேன். இது செயற்கையாக உருவாக்கப்பட்ட வைரஸ் இல்லை என நிரூபித்தால் நான் உயிரோடு இருந்தாலும் இல்லை என்றாலும் எனக்கு அளித்த நோபல் பரிசை திருப்பி எடுத்துக் கொள்ளுங்கள்” என ஜப்பானைச் சேர்ந்த புகழ் பெற்ற விஞ்ஞானி டசூக்கோ ஹோன்ஜோ கூறியுள்ளார் என செண்டிமெண்டாக நெட்டிசன்கள் பகிர்ந்து வரும் செய்தி முற்றிலும் பொய் என்பது ஆதாரத்துடன் நிரூபணமாகியுள்ளது.

உலகத்தையே புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா வரஸ் சீனா உருவாக்கியது என ஒரு பிரிவினரும், பரிணாம வளர்ச்சியினால் கொரோனா உருமாறியுள்ளது என மற்றொரு பிரிவினரும் கூறி வருகிறார்கள். குறிப்பாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் இந்த வைரசை, சீனா வைரஸ் என்றே குறிப்பிட்டு வருகிறார்.

அதே வேளையில் அமெரிக்காவில் உள்ள சில விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் குறித்து சில ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு அவை இயற்கையாகவே தன்னை உருமாற்றிக் கொண்டு இந்த நிலைக்கு வந்துள்ளது எனக் குறிப்பிடுகிறார்கள்.

இந்த நேரத்தில் இணையத்தை கொரோனா வைரஸ் என்பது சீனா வைரஸ் என நோபல் பரிசு பெற்ற டசூக்கோ ஹோன் ஹோன்ஜோ கூறியுள்ளதாகச் செய்தி பரவி வருகிறது.

இந்த செய்திக்கு ஆதாரமாக ட்விட்டர் கணக்கு ஒன்று சான்று காட்டப் படுகிறது. இது குறித்து சர்வதேச ஊடகங்கள் டசூக்கோ ஹோன்ஜோவை தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது இணையத்தில் பரவி வந்த செய்தி பொய் என்பது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக டசூக்கோ ஹோன்ஜோ ஜப்பான் ஊடகங்களில் தெளிவுபடுத்தியிருந்தது அறிந்து கொள்ள முடிந்தது.

இதற்கிடையே டசூக்கோ ஹோன்ஜோ ஜப்பான் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளிக்கையில், “விரைவில் சீனா இந்த்ந் வைரசை எதிர்கொண்டு, எழுந்து விடும். அதே நேரத்தில் உலகில் ஆதிக்கம் மிக்க நாடாகச் சீனா மாறிவிடும் என உறுதியாகக் கூறிவிட முடியாது, ஆனால் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் இப்போது இருப்பவை இருக்காது” எனக் கூறியிருந்தார்.

சீனா வைரஸ் எனக் கூறுவதற்கு இதுவரை அறிவியல் ரீதியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதால் அமெரிக்க ஆதரவாளர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகச் சீனா ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

அதே வேளையில் இதுபோன்ற பொய் செய்திகளைப் பரப்புவதற்கு முன் சம்பந்தப்பட்ட செய்தியின் உண்மைத் தன்மையை நாம் முடிந்தளவு இணையத்தின் வழியாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதை சைபர் க்ரைம் நமக்குத் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

Must Read

உணவகங்களில் ஏ.சி.யை இயக்கலாமா? – மத்திய அரசு சொல்வது இதுதான்!!

பொதுமுடக்கத்தின் காரணமாக, நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த உணவகங்களை ஜூன் 8 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த சனிக்கிழமை (மே 30)...

கர்ப்பிணி யானை செத்தது எப்படி? இறுதி அறிக்கை வெளியீடு!

கேரளா பாலக்காடு மாவட்டத்தில் அண்ணாச்சிப் பழத்தில் வெடிமருந்து வைத்து கொலை செய்யப்பட்ட யானை எதனால் உயிரிழந்தது என சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கேரள அரசு அறிக்கை...

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 39 பேருக்கு கொரோனா!!

சென்னையில் உடல்நலம் குறைவால் அண்மையில் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல், சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அந்த நபரின்...

‘இவங்கெல்லாம் இனிமே நாடாளுமன்றத்துக்குள்ள நுழையக் கூடாது’

நாடாளுமன்ற இரு அவைகளின் செயலக அலுவலக பணியாளர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மற்றும் நாடாளுமன்ற அலுவலக பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு சில அதிரடி...

தங்க பிளேட்டினால் ஆன சவப் பெட்டி: கறுப்பர்கள் ஒன்றினைந்து செய்த காரியம் இது

போலியான $20 டாலர் நோட்டு ஒன்றை உணவகத்தில் கொடுத்ததற்காக, அவரை பிடித்த பொலிசார் கழுத்தை நசுக்கியே கொன்றார்கள். கறுப்பு இனத்தவர்கள் என்றால் அமெரிக்கர்கள் தரக் குறைவாக நினைக்கிறார்கள். இதனால் இறந்து போன ஜோர்ஜுக்கு...