முகப்பு சினிமா `சீன, கியூபா மருத்துவக் குழுக்களை வரவழைக்க வேண்டும்!' -கொரோனாவை தடுக்க அறிவுறுத்தும் சமூக ஆர்வலர்கள்

`சீன, கியூபா மருத்துவக் குழுக்களை வரவழைக்க வேண்டும்!’ -கொரோனாவை தடுக்க அறிவுறுத்தும் சமூக ஆர்வலர்கள்

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த, மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுக்க, 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது சரியான நடவடிக்கை என்றாலும்கூட, இதுமட்டுமே கொரோனா அபாயத்திலிருந்து மக்களை முழுமையாக மீட்டுவிட முடியாது என எச்சரிக்கிறார், தஞ்சையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வழக்கறிஞர் ஜீவக்குமார்.

‘கொரோனாவை அனுபவ ரீதியாக எதிர்கொண்ட சீனாவிலிருந்தும், மருத்துவத்தில் சிறந்து விளங்கும் கியூபாவில் இருந்தும் மருத்துவக்குழுக்களை உடனடியாக இந்தியாவுக்கு வரவழைக்க வேண்டும்’ என வலியுறுத்துகிறார்.

வழக்கறிஞர் ஜீவக்குமார்

இதுகுறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் ஜீவக்குமார், ‘’கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆனாலும்கூட, இதன் தாக்குதல் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள். பெரிய அளவில் உயிர்ச் சேதம் ஏற்படாமல் தடுக்க, இங்குள்ள மருத்துவமனைகளில் இதற்கான கட்டமைப்பு வசதிகளைத் துல்லியமாக மேம்படுத்த வேண்டும்.

சீனாவுக்கு அடுத்தப்படியாக அதிக மக்கள்தொகை கொண்ட நாடு இந்தியா. ஆனால் உலக நாடுகளை ஒப்பீடும் போது, இந்தியாவில் மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை. குறிப்பாக, கொரோனா போன்ற கொள்ளை நோய்களைப் போர்க்கால அடிப்படையில் எதிர்கொள்வதற்கான கட்டமைப்பு வசதிகள் இங்கு குறைவாகவே உள்ளன. ஜெர்மனியில் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் ஏற்கெனவே சிறப்பாகத் தயார் நிலையில் இருந்ததால்தான் கொரோனாவை அவர்களால் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தது. இந்தியாவில் கொரோனாவைக் கண்டறிவதற்கான ஆய்வகங்களேகூட போதுமான எண்ணிக்கையில் இல்லை. தமிழ்நாட்டில் சென்னை, திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே கொரோனாவுக்கான ஆய்வக வசதி உள்ளது.

இந்தியா முழுவதுமே இதுதான் நிலை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான மருத்துவ சிகிச்சையில் பிரத்யேகமான துல்லியத்தன்மையைக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். கொரோனாவை அனுபவ ரீதியாக எதிர்கொண்ட சீனாவிலிருந்தும், மருத்துவத்தில் சிறந்து விளங்கும் கியூபாவில் இருந்தும் மருத்துவக் குழுக்களை உடனடியாக இந்தியாவுக்கு வரவழைக்க வேண்டும்.

கொரோனா வைரஸ்

அவர்களுடன் கலந்தாலோசித்து, கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கான, மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். இதற்கான பிரத்யேக சிகிச்சை முறைகளையும் அறிந்துகொள்ள வேண்டும்.

குணப்படுத்துவதற்கான மருந்துகளையும் அங்கிருந்து வரவழைக்க வேண்டும். கியூபா மருத்துவர்கள் மற்ற நாடுகளுக்கு எல்லாம் ஓடோடிச் சென்று உதவிவருகிறார்கள். இந்தியாவுக்கும் உதவ, அவர்கள் நிச்சயம் தயாராகத்தான் இருப்பார்கள். மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். முகக்கவசம்கூட கிடைக்காமல் மக்கள் இங்கு திண்டாடுகிறார்கள். இதற்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஒரு சில மெடிக்கல் ஷாப்களில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதை வாங்க, மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதைத் தவிர்க்க, மத்திய மாநில அரசுகள் முகக்கவசங்களைத் தயார்செய்து, வீடுகள் தோறும் விநியோகிக்க வேண்டும்” என்றார்.

Must Read

யாழ்.வட்டுக்கோட்டையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் செய்த தவறால் ஒருவர் அநியாய சாவு; மறைக்கப்பட்ட பின்னணி!

யாழ்.வட்டுக்கோட்டையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் செய்த தவறால் ஒருவர் அநியாய சாவு; மறைக்கப்பட்ட பின்னணி!  

அமெரிக்காவில் இருந்து பிரத்தியேக மருந்து ஒன்றை அனுப்பினார் ரம்: பொறிஸ் ஜோன்சன் மருத்துவர்

தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில், செயற்கை சுவாத்தோடு இருக்கும் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு அமெரிக்காவில் இருந்து பிரத்தியேக மருந்து ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. அமெரிக்க அதிபர் டொனால் ரம்...

நிபுணர்களின் கருத்துப்படி ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு ? – அரசு வட்டாரத் தகவல்

ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கபட உறுதியான வாய்ப்புகள் இருப்பதாக அரசுத் தரப்புத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா ஒழிப்பு நடவடிக்கையாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை நாடு...

ஊரடங்கில் பள்ளி மாணவி கர்ப்பம்…! காட்டிக்கொடுத்த தங்கை கொலை…

கொசவம்பட்டியைச் சேர்ந்த சந்திரன் - வத்சலா தம்பதிக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருந்தனர். முதல் மகள் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த நிலையில் இரண்டாவது மகள் அப்பகுதியில் உள்ள...

கொரோனாவுக்கு எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: கொரனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி பயன்படுத்திக் கொள்ளப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள்...