முகப்பு சினிமா `சூரிய பகவானின் அருள்பெருக்கும் சித்திரை அமாவாசை!' - கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை இவைதான்

`சூரிய பகவானின் அருள்பெருக்கும் சித்திரை அமாவாசை!’ – கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை இவைதான்

பொதுவாக, அமாவாசை திதி முன்னோர்கள் வழிபாட்டுக்கு உகந்ததாகக் கருதப்படுவது. இந்தநாளில் செய்யும் தர்ப்பணம் முதலிய வழிபாடுகள் முன்னோர்களின் நல்லாசியைப் பெற்றுத்தரும் என்பது ஐதிகம். நாளை சித்திரை மாத அமாவாசை. இந்த நாள் மிகவும் விசேஷமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அதிலும் சூரியபகவானின் அருளைப் பெற்றுத்தரும் தினமாக இந்த அமாவாசை விளங்குகிறது என்கிறார்கள் அடியவர்கள்.

சூரிய பகவான்

சித்திரை மாதத்தை மேஷ மாதம் என்பார்கள். சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலமே சித்திரை. ஜோதிடத்தில் நவக்கிரகங்களில் சூரியன் முக்கியமான கிரகமாகப் போற்றப்படுகிறார். சூரியன் ஆத்மகாரகன் மற்றும் பித்ருகாரகன். ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலையில் ஆட்சிபலம் பெற்றிருந்தால் அந்த நபர் நல்ல ஆரோக்கியமான வாழ்வைப் பெற்றிருப்பார் என்பது ஜோதிட நம்பிக்கை. அப்படி உடல் ஆரோக்கியம், அந்தஸ்து, கம்பீரம் ஆகியவற்றைத் தரும் வள்ளலான சூரியபகவான் இந்த மாதம் முழுவதும் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசி செவ்வாய்க்கிரகத்துக்குரியது. அதில் சூரியன் வரும்போது உச்சமடைகிறார்.

சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் சஞ்சரிக்கும் நாளே அமாவாசை. நாளை சந்திரனும் மேஷ ராசியில் குறிப்பாக, அசுவினி நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளார். சூரியனும் சந்திரனும் சந்திக்கும் இந்த நாளில் குறிப்பாக, சூரியன் மேஷ ராசியில் உச்சமடைந்திருக்கும்போது செய்யப்படும் பித்ருவழிபாடுகள் பூர்வ புண்ணியத்தை அதிகப்படுத்தும் என்கிறார்கள். மேலும், நாளை புதன்கிழமை. விஷ்ணுபகவானுக்கு உரிய நாள். சூரியனை நாராயண ஸ்வரூபமாகக் கருதிப் போற்றுவதும் உண்டு.

இந்த நாளில் வழக்கமாகத் தர்ப்பணங்கள் செய்பவர்கள் வீட்டிலேயே தவறாமல் செய்ய வேண்டும். தர்ப்பணம் செய்யும் வழக்கமில்லாதவர்கள் வீட்டில் சாதம் வடித்து அதில் எள் சேர்த்துக் காக்கைக்கு உணவிட வேண்டும். தங்களின் மூதாதையர்களின் படங்களுக்கு பூ சாத்தி கற்பூரம் காட்டி வழிபட வேண்டும். சூரியனுக்கு உகந்த ஆதித்ய ஹ்ருதயத்தைப் பாராயணம் செய்தல் அல்லது அதைக் கேட்பது மிகவும் பயன்தரும்.

பஞ்சாங்கம்

விஷ்ணு சகஸ்ரநாமப் பாராயணம் செய்வது நல்லது. அது இயலாதவர்கள்

`ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோ ரமே

சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே’ என்னும் வரிகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி வழிபடலாம். இதைச் சொல்வதன் மூலம் விஷ்ணு சகஸ்ரநாமம் முழுவதையும் பாராயணம் செய்த புண்ய பலன் கிடைக்கும்

இன்றைக்கு நம் தேவை ஆரோக்கியம். அதை அருளும் சூரிய பகவானை நாளை கட்டாயம் வழிபட்டு நம் முன்னோர்களின் ஆசிகளையும் இறைவனின் அருளையும் தவறாமல் பெறுவோம்.

Must Read

இந்தி நடிகை திவ்யா சவுக்சே: புற்றுநோயால் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் நடிகை திவ்யா சவுக்சே (28). நடிகையான பின்னர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் திவ்யா சவுக்சே வசித்து வந்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் ஹை அப்னா...

வாழ்த்துங்களேன்!

14.7.20 முதல் 27.7.20 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத...

அனுராத புரத்தில் சில இடங்கள் லாக் டவுன் என அறிவிப்பு- மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639...

முடக்கப்பட்டது பல்கலைக்கழகம் கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா என அச்சம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில்...