முகப்பு சினிமா `செந்தில் பாலாஜியின் தொகுதி நிதியைப் பயன்படுத்தாதது ஏன்?' - அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம்

`செந்தில் பாலாஜியின் தொகுதி நிதியைப் பயன்படுத்தாதது ஏன்?’ – அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம்

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்காக கரூர் மாவட்டத்தில் உள்ள 15 க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் உபகரணங்கள் வாங்க தனது தொகுதி நிதியிலிருந்து ஒரு கோடியே, மூன்று லட்சத்தை ஒதுக்க மாவட்ட ஆட்சியருக்கு, தி.மு.க செந்தில் பாலாஜி பரிந்துரை செய்தார். அந்த நிதி பரிந்துரையை கேன்சல் செய்ய, அதை எதிர்த்து செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில், ‘செந்தில் பாலாஜியின் தொகுதி நிதியைப் பயன்படுத்தாதது ஏன்?’ என்று நீதிமன்றம் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பது, கரூர் மாவட்ட அரசியல் மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உதவிகள் வழங்கும் செந்தில் பாலாஜி

தி.மு.க கரூர் மாவட்டப் பொறுப்பாளராகவும், அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏவாகவும் இருப்பவர், செந்தில் பாலாஜி. இவர், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய உபகரணங்கள் மற்றும் மருந்துகளை வாங்க ஏதுவாக தனது நிதியில் இருந்து ஒரு கோடியே மூன்று லட்சத்தை ஒதுக்குவதாக மாவட்ட ஆட்சியர் அன்பழகனுக்குப் பரிந்துரைத்தார். இதில் ரூ.60 லட்சம் ரூபாயை கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வென்டிலேட்டர் வாங்குவதற்காக நிதி ஒதுக்கி அறிவித்தார். ஆரம்பத்தில் அந்த நிதியை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளை மேம்படுத்த ஒதுக்க மாவட்ட ஆட்சியர் முயற்சி செய்தார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் நா.ராஜமுருகன் துரை.வேம்பையன்

ஆனால், இடையில் என்ன நடந்ததோ அந்த நிதி கடந்த 26 நாள்களைக் கடந்தும் பயன்படுத்தப்படவில்லை. இதன் பின்னே, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் கைங்கர்யம் இருப்பதாக செந்தில் பாலாஜி குற்றம்சாட்டினார். அதோடு, இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் விசாரித்த நீதிபதிகள், ‘எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி ஒதுக்கிய தொகுதி நிதியை ஏன் பயன்படுத்தவில்லை?’ என்று அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து செந்தில் பாலாஜியிடம் பேசினோம், “கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கென எனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1,03,71,878, கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.60,00,000, அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பேரூராட்சி, ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் என அரவக்குறிச்சி தொகுதிக்கு ரூ.43,71,878 மருத்துவ உபகரணங்கள் மற்றும் முகக் கவசம், கிருமி நாசினி ஆகியவற்றை தனது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு வாங்க, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்குப் பரிந்துரை செய்தேன்.

செந்தில் பாலாஜி

மாவட்ட ஆட்சித் தலைவர் மேற்கண்ட ரூ.1,03,71,878 தொகைக்கு முதலில் 28.03.2020 அன்று நிர்வாக அனுமதி வழங்கிவிட்டு, பின்னர் எவ்வித காரணமுமின்றி மேற்கண்ட உத்தரவில் ரூ.60,00,000 வென்டிலேட்டர் கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒதுக்குவதை ரத்து செய்து 31.03.2020 அன்று உத்திரவிட்டுள்ளார். மேலும், ரூ.43,71,878. நிர்வாக அனுமதி வழங்கியும் எவ்விதப் பயன்பாட்டிற்கும் நிதியை ஒதுக்கவில்லை.

இதுக்கு காரணம் லோக்கல் அமைச்சர்தான். மேற்கண்ட கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் எதேச்சதிகார உத்திரவினை எதிர்த்து, நான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். அந்த வழக்கில் நடைபெற்ற காணொலிக் காட்சி விசாரணையில், சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதியரசர்கள் கொண்ட அமர்வு, எதிர் மனுதாரரர்களான தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கரூர், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும், அவர்களது பதிலை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

உதவிகள் வழங்கும் செந்தில் பாலாஜி

கரூர் மாவட்டம் முழுவதும் தொலைபேசி மூலம் அழைத்த மக்களுக்கு 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கினோம். அதை ஆளும் கட்சியினர் தடுத்தார்கள். அதையும் கோர்ட் மூலம் அனுமதி வாங்கி, இப்போது வழங்கத் தொடங்கியுள்ளோம். இப்போது, ரூ. 3 கோடி மதிப்பில் அரிசி, மளிகை உள்ளிட்ட 12 வகையான பொருள்களை மாவட்டம் முழுவதும் இலவசமாக வழங்கி வருகிறோம். நாங்கள் மக்களுக்கு உதவுவதை அமைச்சர் என்ன, முதல்வரே தடுத்தாலும், நிறுத்த முடியாது” என்றார், ஆவேசமாக!.

Must Read

அதிருப்தி எம்.எல்.ஏக்களை சரிகட்டும் முதல்வர்; என்னென்ன பிளான் பண்றார் பாருங்க!

ஆளும் காங்கிரஸ் ஆட்சியில் போர்க்கொடி தூக்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்களை சரிகட்டும் வேலையில் முதலமைச்சர் அசோக் கெலாட் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காரைக்கால்: `முழுமனதோடு செய்கிறேன்!’ – சொந்த நிலத்தைக் கோயிலுக்குக் கொடுத்த இஸ்லாமியர்

காரைக்கால் அருகே கட்டப்பட்ட கோயிலுக்கான இடத்தை, நில உரிமையாளரான இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஒருவர், மத நல்லிணக்கத்தைப் பேணும்வகையில் புதுவை அமைச்சர் கமலக்கண்ணன் முன்னிலையில் கோயில் நிர்வாகத்திடம் தானமாக வழங்கியுள்ளது பாராட்டைப் பெற்றுள்ளது.இந்து...

சந்திரபாபு பிறந்த நாள் கட்டுரை: ரம்மியா? ஜோக்கரா? 

13 என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்டு விளையாடப்படும் சூதாட்டத்தில், ஜோக்‍கர் மிக மிக அவசியம். அதைவிட அவசியம் ரம்மி. என்னதான் ஜோக்‍கர் இருந்தாலும் ரம்மி சேர்ந்தால்தான் ஆட்டம் வெற்றி பெறும். அதுபோல சினிமா...

இலங்கையின் அரிய ஒளிபடத்தை நாசா வெளியிட்டுள்ளது; எப்படி இருக்கிறது பாருங்கள்!

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இலங்கை மற்றும் இந்தியாவின் தெற்கு முனை தென்படும் விதமாக அழகான ஒளிபடமொன்றை நாசா வெளியிட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஜூலை 24ஆம் திகதி, விண்வெளி வீரர்களான பெஹன்கென் மற்றும் டக்...

சம்பந்தருக்கு வாக்களிக்கச் சொல்லும் ராஜபக்சவின் வேட்பாளர்!

மகிந்த அரசுடன் கூட்டமைப்பு பின்கதவு பேச்சுக்களை நடத்துவதான குற்றச்சாட்டுக்கள் மத்தியில் திருக்கோணாமலையின் பெரமுன வேட்பாளர் சுசந்த புஞ்சிநிலமே தனக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள், வாக்குகளை இரா.சம்பந்தன் ஐயாவுக்கு போடுமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் என்ற...