முகப்பு செய்திகள் இலங்கை செய்திகள் செந்தூரனின் சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கை வெளியானது!

செந்தூரனின் சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கை வெளியானது!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலகுநாதன் செந்தூரன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்றும் அவரது உடலில் அடிகாயங்கள் எவையும் இல்லை என சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலகுநாதன் செந்தூரன், நேற்று மாலை முதல் காணாமற்போன நிலையில் தொண்டமனாறு கடலில் இன்று அதிகாலை அவரது சடலம் கண்டறியப்பட்டது.

தொண்டமனாறு மயிலதனை இந்து மயானத்துக்கு அண்மையாக கடற்கரை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்பதை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் நேற்றிரவு 7.20 மணியளவில் கண்டுள்ளனர்.

அதுதொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு அவர்கள் தகவல் வழங்கினர்.

நேற்றிரவு 8.30 மணியளவில் அந்த இடத்துக்குச் சென்ற பொலிஸார், அங்கு காணப்பட்ட மணிப்பையிலிருந்த (பேர்ஸ்) தேசிய அடையாள அட்டையை வைத்து இலகுநாதன் செந்தூரன் (வயது – 37) என்பவருடையது என்று உறுதி செய்தனர்.

சம்பவம் தொடர்பில் செந்தூரனின் வீட்டுக்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் உறவினர்கள், செந்தூரனின் நண்பர்களுடன் தொண்டமனாறு பகுதியில் அவரைத் தேடினர்.

இந்த நிலையில் அவரது உடமைகள் மீட்கப்பட்ட பகுதியிலிருந்து அண்மையாக உள்ள கடலில் செந்தூரன் சடலமாக மீட்கப்பட்டார்.

பருத்தித்துறை நீதிவானின் உத்தரவில் அவரது சடலம் மந்திகை வைத்தியசாலையில் சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் இன்று முற்பகல் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

“சடலத்தின் கழுத்து உள்பட உடலில் எந்தவொரு அடிகாயமும் இல்லை. கடல் விலங்குகளால் சடலத்தில் காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முகத்தில் உரசல் காயம் காணப்படுகிறது.

நுரையீரல் பெரியளவில் வீக்கமடைந்துள்ளது. அதனால் அவரது இறப்பு நீரில் மூழ்கி இடம்பெற்றுள்ளது” என்று சட்ட மருத்துவ அதிகாரியின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post செந்தூரனின் சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கை வெளியானது! appeared first on jaffnavision.com.

Must Read

1528-ல் பாபர் மசூதி… 2020-ல் ராமர் கோயில்… 492 ஆண்டு வரலாற்றுச் சுருக்கம்! #AyodhyaRamMandir

இன்று பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பதற்கான பூமி பூஜையை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். பல சர்ச்சைகள், வழக்குகள் என நீண்ட நெடிய வரலாறு கொண்ட அயோத்தி நிலத்தின்...

லெபானானின் பெய்ரூட் நகரையே உருக்குலைத்த  மிகப்பெரிய வெடிவிபத்து: 70 பேர் பலி, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் : என்ன காரணம்?

லெபானான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் நகரில் நேற்று இதுவரை கண்டிறாத வகையில் மிக்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டு நகரையே உருக்குலைத்து, சின்னாபின்னமாக்கியது. இதில் முதல்கட்ட தகவலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்...

லெபானானில் 2750 டன்கள் அமோனியம் நைட்ரேட் வெடித்ததில் 73 பேர் பலி; 3,700 பேர் காயம்

பெய்ரூட், : லெபானானில் 2750 டன்கள் அமோனியம் நைட்ரேட் வெடித்ததில் 73 பேர் பலியாகினர்.லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தால் அப்பகுதி முழுவதும் தீப்பிழம்புகளும்...

அடித்துச் சென்றது கடல்- ஆனால் ரவிராஜ் TVல் பார்த்த நிகழ்ச்சி ஒன்றைப் போல கைகளை அகட்டி மிதந்து தப்பித்தார்

கனடா ஸ்காபரோவில் உள்ள கடல் ஒன்றில் குளித்துக் கொண்டு இருந்தார் ரவிராஜ் சைனி என்னும் 10 வயது சிறுவன். திடீரென கிளம்பி வந்த பெரிய அலை ஒன்று அவனை அப்படியே கடலுக்குள் இழுத்துச்...

மர்மமாக காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட முல்லைத்தீவு குடும்பஸ்தர் : என்ன நடந்தது ?

கனடாவில் வசித்து வந்த இலங்கையை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பத்தர் கடந்த வியாழக்கிழமை எரிபொருள் நிலையத்துக்கு அருகில் அவருடைய காரில் இருந்து சடலமாக...