முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் சென்னையில் கொரோனா: எங்கு, எவ்வளவு பாதிப்பு?

சென்னையில் கொரோனா: எங்கு, எவ்வளவு பாதிப்பு?

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்னர் குறைவான அளவில் பாதிப்புகள் பதிவான நிலையில் நேற்று மீண்டும் நூறுக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

அதிலும் தமிழ்நாட்டில் ஆரம்பத்திலிருந்து சென்னையில் அதிகளவிலான பாதிப்புகள் பதிவாகிவருகின்றன. சென்னையில் மண்டலங்கள் வாரியாக பாதிப்பு விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக மண்டலத்தில் 91 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதற்கடுத்தபடியாக திருவிக நகரில் 38 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் தேனாம்பேட்டையில் 36 பேரும், தண்டையார்பேட்டையில் 30 பேரும் கோடம்பாக்கத்தில் 29 பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

அண்ணாநகரில் 26 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். பெருங்குடி, அடையாறு ஆகிய பகுதிகளில் தலா ஏழு பேரும், ஆலந்தூர் வளசரவாக்கம், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் தலா ஐந்து பேரும் மாதவரத்தில் மூன்று பேரும் பாதிப்படைந்துள்ளனர். சோழிங்கநல்லூரில் இரண்டு பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே சென்னையில் மட்டும் கொரோனா வைரசால் 235 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருந்த நிலையில் நேற்று மேலும் 50 பேர் அதிகரித்த நிலையில் மொத்தமாக 285 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலைகள் அதிகமுள்ள அம்பத்தூர், மணலி மண்டலங்களில் கொரோனா தொற்று ஏதும் உறுதியாகவில்லை.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. வீடு வீடாகச் சென்று மக்களிடம் நடத்தப்படும் சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களது குடியிருப்புகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு கொரோனா சோதனைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அந்தப் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ரேபிட் கருவிகள் மூலம் மேற்கொள்ளப்படும் விரைவு சோதனைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Must Read

தங்க பிளேட்டினால் ஆன சவப் பெட்டி: கறுப்பர்கள் ஒன்றினைந்து செய்த காரியம் இது

போலியான $20 டாலர் நோட்டு ஒன்றை உணவகத்தில் கொடுத்ததற்காக, அவரை பிடித்த பொலிசார் கழுத்தை நசுக்கியே கொன்றார்கள். கறுப்பு இனத்தவர்கள் என்றால் அமெரிக்கர்கள் தரக் குறைவாக நினைக்கிறார்கள். இதனால் இறந்து போன ஜோர்ஜுக்கு...

லொஸ்லியாவின் முதல் படம் பிரென்ட்ஷிப் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை ரிலீஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக தமிழ் நாட்டு மக்களுக்கு பரிச்சயமானவர் . இலங்கையை சேர்ந்த அவர் அங்கு ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின் பிக்...

`கத்தியால் தாக்கிய காவலர்; 37 குழந்தைகள் காயம்!’ – சீனாவில் தொடரும் குழந்தைகள் மீதான வன்முறைகள்

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ள சீனா தொடர்ந்து அதிக பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், சீனாவில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கத்தியால் தாக்கப்பட்டுள்ள சம்பவம்...

8 வீடுகள் அப்படியே கடலுக்குகள் சென்றது: கடல் நீர் உள்ளே வந்தது சுணாமியை போல

நோர்வே நாட்டில் வட பகுதியில் உள்ள அல்டா என்னும் இடத்தில், பெரும் நிலப்பரப்பு ஒன்று கடலுக்குள் சென்றுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. இது சுணாமி போன்று கடல், கரையை நோக்கி பெருக்கெடுத்து...

பணியாளர்களுக்கு கொரோனா வந்துட்டா ஆஃபீசை மூடணுமா?: மத்திய அரசு சொல்வது இதுதான்!!

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள 33 முதல் 100 சதவீதம் வரை பணியாளர்களை கொண்டு இயங்கலாம் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்த நிலையில், பணியிடங்களில்...